பொருளியல் மீட்சி மெதுவாக இருக்கும்: சிங்கப்பூர் நாணய ஆணையம்

முந்­தைய பொரு­ளி­யல் மந்­த­நி­லை­களைக் காட்­டி­லும், கொவிட்-19 நெருக்­க­டி­யால் உள்­ளூர் சார்ந்த தொழில்­து­றை­கள் மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தால் சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் மீள்­வ­தற்கு நீண்­ட­காலம் ஆக­லாம் என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் கூறி­யுள்­ளது.

நிறு­வ­னங்­களும் குடும்­பங்­களும் இன்­னும் வரு­மான இழப்பை எதிர்­கொண்டு வரு­வ­தா­லும் அதி­க­ரித்து வரும் நிச்­ச­ய­மற்ற சூழ­லா­லும் வரும் காலாண்­டு­களில் பொரு­ளி­யல் மீட்சி­யின் வேகம் மித­ம­டை­யும் என்று ஆணை­யம் தெரி­வித்­தது.

உல­கம் முழு­வ­தும் கொரோனா பாதிப்பு மீண்­டும் உரு­வெ­டுக்­கும் பட்­சத்­தில், வளர்ச்சி குறை­யும் அபா­ய­முள்­ள­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது. இவ்­வாண்­டில் நாட்­டின் பொரு­ளி­யல் 5 முதல் 7% குறை­ய­லாம் என்ற அர­சாங்­கத்­தின் முன்­னு­ரைப்பை ஆணை­ய­மும் மறு­உறுதிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

தனது ஒட்­டு­மொத்­தப் பொரு­ளி­யல் மறு­ஆய்வு அறிக்­கையை நேற்று வெளி­யிட்ட ஆணை­யம், “முன்­னோக்­கிய பாதை நிச்­ச­ய­மில்­லாத் தன்­மை­க­ளால் சூழப்­பட்­டுள்­ளது,” என்று எச்­ச­ரித்­துள்­ளது.

“சில துறை­கள், குறிப்­பாக பய­ணத்­து­றை­யும் நேர­டித் தொடர்பை அதி­கம் நம்­பி­யுள்ள உள்­ளூர் தொழில்­து­றை­களும் அடுத்த ஆண்டு இறு­தி­யில்­கூட கொரோனா தொற்­றுக்கு முன்­பி­ருந்த நிலையை எட்­டும் என எதிர்­பார்க்­கப்­ப­ட­வில்லை,” என்­றது ஆணை­யம்.

கொரோனா பர­வல் முறி­ய­டிப்பு நட­வ­டிக்­கை­கள் நடை­மு­றை­யில் இருந்­த­தால், இவ்­வாண்­டின் இரண்­டாம் காலாண்­டில் சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் இதற்­கு­முன் இல்­லாத அளவு சரி­வைச் சந்­தித்­தது.

ஆயி­னும், பெரும்­பா­லான நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தால் ஜூலை முதல் செப்­டம்­பர் வரை­யி­லான அடுத்த காலாண்­டில் பொரு­ளி­யல் சற்று மீண்­டெழுந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!