ஆனந்த தீபாவளியை ஆரோக்கியமாகக் கொண்டாடுவோம்

நமது உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள தீபாவளி தக்க தருணம்.

ஆரோக்கியத்துடன் உணவருந்தவும் சமைக்கவும் சுகாதார மேம்பாட்டு வாரியம் வழங்கும் கீழ்கண்ட உத்திகளைப் பின்பற்றி நலம் காக்கலாம்:

வீட்டில் செய்யப்பட்ட தீபாவளிப் பலகாரங்களைத் தெரிவுசெய்யலாம். கடைகளில் வாங்கும் பலகாரங்களில் அதிக இனிப்பும் பதப்படுத்தும் பொருள்களும் பயன்படுத்தப்பட்டிருக்கும். உங்களுக்கு விருப்பமான பலகாரங்களையும் இனிப்புகளையும் வீட்டில் செய்வதால் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆரோக்கிய உணவு தானியங்களை நீங்கள் தேர்ந்தெடுத்து சேர்த்துக்கொள்ள அது ஏதுவாக இருக்கும்.

முழு கோதுமை மாவை அதிகம் பயன்படுத்துங்கள். மைதா மாவைவிட முழு கோதுமை மாவு சத்துமிகுந்தது. சமைக்கும்போதும் ரொட்டி செய்யும்போதும் கால் குவளை அல்லது கால்வாசி வெள்ளை மாவுக்கு பதிலாக முழு கோதுமை மாவைச் சேர்த்துகொள்ளுங்கள்.

சாப்பிடும் உணவின் அளவை கவனத்தில் கொள்ளுங்கள். தீபாவளி விழாக்காலத்தின்போது அதிக நொறுக்குத் தின்பண்டங்களை உண்ணுவது கொண்டாட்டங்களின் ஒரு பகுதி என்றாலும் எவ்வளவு சாப்பிட்டோம் என்ற கணக்கு இருக்காது. அளவை கட்டுப்படுத்தும் வகையில் நீங்கள் உண்ணவிருக்கும் பண்டங்களைத் தனியே எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். பல வகையான பண்டங்களை சிறிய அளவில் உட்கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான விருந்தோம்பலை செய்யுங்கள். குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் தீபாவளிக்காக உணவுப் பொருள்களை வாங்கும்போது சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் ஆரோக்கிய தெரிவு சின்னத்தைப் பார்த்து பொருள்களை வாங்குங்கள். ஆரோக்கிய உணவுத் திட்டத்தின்கீழ் உள்ள உணவுப் பரிமாறும் நிறுவனத்தை நீங்கள் தெரிவுசெய்யுங்கள்.

இனிப்புப் பண்டங்களுக்குப் பதிலாக பழங்கள் சாப்பிடுவது சிறப்பு. வீட்டில் செய்யப்படும் இனிப்பான பலகாரங்களைத் தவிர்த்து திராட்சை, பெர்ரிஸ், நெக்டரின்ஸ் போன்ற சிறிய பழங்கள் இனிப்பை நாடும் விருந்தினர்களுக்கு ஏதுவாக இருக்கும்.

குளிர் பானங்களில் குறைவான சக்கரை உள்ள தெரிவுகளைப் பரிமாறுங்கள். பானங்களைத் தேர்ந்தெடுக்கும்போது ஆரோக்கிய தெரிவு சின்னம் கொண்ட பானங்களை வாங்குங்கள். அவற்றில் சக்கரை அளவு குறைவாக இருக்கும்.

ஆரோக்கியமான, நடுநிலையான உணவுக்கு ‘என் ஆரோக்கிய’ தட்டை பின்பற்றலாம். தீபாவளியின்போதும் பாதி தட்டையை பழங்கள், காய்கறிகளைக் கொண்டும் கால்வாசி அளவு பழுப்பு அரிசி அல்லது முழுதானிய ரொட்டி மீதமுள்ள கால்வாசி இறைச்சி அல்லது மீன், தோஃபு போன்ற இதர புரோட்டீன் வகைகளைக் கொண்டும் நிரப்பமுடியும். ஒவ்வொரு முறையும் ‘என் ஆரோக்கிய தட்டை’ பின்பற்றமுடியவில்லை என்றால் அனைத்து வகையான சத்துகளையும் கொண்ட உணவுப் பொருள்களைச் சாப்பிடும் திட்டத்தை வகுத்துக்கொள்ளுங்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!