விடுப்பை விட்டுக்கொடுத்து நன்கொடைக்குப் பங்களிப்பு; என்டியு ஊழியர்கள் அருஞ்செயல்

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் (என்­டியு) ஊழி­யர்­கள் தங்­கள் வரு­டாந்­திர விடுப்­பு­களில் சில­வற்­றைப் பயன்­ப­டுத்­தா­மல் அதன் மூலம் பெறப்­படும் தொகையை நன்­கொடை செய்­துள்­ள­னர்.

இதன்­மூ­லம் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்கு உதவ $10 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான தொகை நன்­கொடை செய்­யப்­பட்­டுள்­ளது.

1,821 என்­டியு ஊழி­யர்­கள் ஏறத்­தாழ 20,145 விடுப்பு நாட்­க­ளைப் பயன்­ப­டுத்­தா­மல் அவை மூலம் பெறப்­படும் தொகையை நன்­கொடை செய்­துள்­ள­னர்.

ஒவ்­வோர் ஊழி­ய­ரும் சரா­ச­ரி­யாக 11 விடுப்பு நாட்­க­ளைப் பயன்­ப­டுத்­தா­மல் நன்­கொ­டைக்­குப் பங்­க­ளித்­த­னர்.

சிலர் 15 விடுப்பு நாட்­க­ளைப் பயன்­ப­டுத்­தா­மல் நன்­கொ­டைக்­குப் பங்­க­ளித்­த­னர். என்­டியு ஊழி­யர்­க­ளுக்கு அவ­ர­வர் வேலை நிய­மன நிபந்­த­னை­கள், அவர்­கள் வேலை­யில் சேர்ந்து எத்­தனை ஆண்­டு­கள் ஆகின்­றன ஆகி­ய­வற்­றைப் பொறுத்து ஆண்­டுக்கு 21 நாட்­க­ளி­லி­ருந்து 42 நாட்­கள் வரை விடுப்பு வழங்­கப்­ப­டு­கிறது.

“என்டியு மாண­வர்­கள் சில­ரின் பெற்­றோர் வேலை­களை இழந்­துள்­ள­னர். அதன் கார­ண­மாக அவர்­க­ளது வரு­மா­னம் குறைந்­துள்­ளது. எனவே, கொரோனா நெருக்­க­டி­

நி­லை­யின்­போது இந்த மாண­வர்­க­ளுக்கு உத­வு­வது மிக­வும் முக்­கி­யம்,” என்று என்­டியு நிர்­வா­கத்­தின் மூத்த துணை தலை­வர் டான் ஏக் நா தெரி­வித்­தார்.

விடுப்­பைப் பயன்­ப­டுத்­தா­மல் நன்­கொ­டைக்­குப் பங்­க­ளிக்க விரும்­பிய ஊழி­யர்­கள் தாங்­க­ளா­கவே முன்­வந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!