டாக்டர் விவியன்: தனியார் துறையின் சிறந்த தீர்வுகளை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்

இன்­றைய மக்­கள் உட­னுக்­கு­ட­னும் தங்­க­ளது தேவை­க­ளுக்கு ஏற்ப மாற்­றி­ய­மைக்­கப்­பட்ட வகை­யி­லும் கூடிய மின்­னி­லக்­கச் சேவை­கள் வேண்­டும் என எதிர்­பார்க்­கின்­றனர்.

அந்த எதிர்­பார்ப்­பு­க­ளைப் பூர்த்தி செய்­வ­தற்­குத் தனி­யார் துறை­களில் காணப்­படும் சிறந்த தீர்­வு­க­ளைக் கைக்­கொள்ள அர­சாங்­கம் தயா­ராக இருக்க வேண்­டும் என்று அறி­வார்ந்த தேசத் திட்­டத்­திற்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் கூறி இருக்­கி­றார்.

இதன்­மூ­லம் பொதுத்­து­றைக்குத் தங்­க­ளது சேவை­களை விற்க விரும்­பும் தனி­யார் நிறு­வ­னங்­களுக்கு அர­சாங்­கம் ‘மேற்­கோள் வாடிக்­கை­யா­ள­ராக’ அமைந்து, அவற்­றுக்கு அதிக வாய்ப்­பு­க­ளைத் திறந்­து­வி­டும் என்று டாக்­டர் விவியன் தெரி­வித்­தார்.

‘GovTech’ எனும் அர­சாங்­கத் தொழில்­நுட்ப அமைப்பு நேற்று ஏற்­பாடு செய்­தி­ருந்த ‘ஸ்டேக் 2020 மேம்­பாட்­டா­ளர்’ கருத்­த­ரங்­கில் டாக்­டர் விவி­யன் கலந்­து­கொண்டு பேசி­னார்.

சொல்-செயல் என இரு வழி­களி­லும் பொதுத்­துறை-தனி­யார் துறை ஒத்­து­ழைப்பை வளர்க்க அர­சாங்­கம் விரும்­பு­வ­தா­கக் குறிப்­பிட்ட அமைச்­சர், அதற்­குச் சான்­றாக அண்­மை­யில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட இரு திட்­டங்­க­ளைச் சுட்­டிக்­காட்­டி­னார்.

“கிள­வுட் தொழில்­நுட்­பம் தொடர்­பில் அமே­சான் இணை­யச் சேவை­கள், மைக்­ரோ­சா­ஃப்ர் அஸுர், கூகல் கிள­வுட் தளம் ஆகிய மூன்று முன்­ன­ணிச் சேவை வழங்­கு­நர்­களு­டன் இணைந்து பணி­யாற்றி வரு­கி­றோம்,” என்று அவர் குறிப்­பிட்­டார்.

அர­சாங்­கத்­தின் சில தக­வல் தொழில்­நுட்ப அமைப்­பு­களை வணிக ‘கிள­வுட்’ சேவைக்கு மாற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்­கம் தொடங்­கும் என்று கடந்த 2018ஆம் ஆண்­டில் பிர­த­மர் லீ சியன் லூங் அறி­வித்­தி­ருந்­தார்.

அந்த வகை­யில், இவ்­வாண்டு ஜூன் மாத நில­வ­ரப்­படி, வரி நிர்­வா­கம் உள்­ளிட்ட 150க்கும் மேற்­பட்ட தக­வல் தொழில்­நுட்ப அமைப்பு­கள் ‘கிள­வுட்’ சேவைக்கு மாற்­றப்­பட்­டு­விட்­டன.

வெளி­யு­றவு அமைச்­ச­ரு­மான டாக்­டர் விவி­யன், இவ்­வாண்டு தொடக்­கத்­தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட ‘சிங்­கப்­பூர் அர­சாங்க மேம்­பாட்­டா­ளர் இணை­ய­வா­யில்’ குறித்­தும் பேசி­னார்.

அந்­தத் தளம், அர­சாங்­கத்­தின் தொழில்­நுட்­பத் தீர்­வு­கள் முக்­கிய தக­வல்­களை மென்­பொ­ருள் மேம்­பாட்­டா­ளர்­க­ளுக்கு வழங்கி வரு­கிறது. அவற்றை அவர்­கள் தங்­களது சொந்த செய­லி­க­ளி­லும் ஒருங்­கி­ணைத்து, மேம்­ப­டுத்­த­லாம்.

“அந்­தத் தீர்­வு­க­ளைப் பயன்­படுத்தி, உங்­க­ளது மின்­னி­லக்­கத் தயா­ரிப்­பு­களை உரு­வாக்­க­வும் சோதித்­துப் பார்­க்க­வும் மேம்­ப­டுத்­த­வும் முடி­யும் என்று நாங்­கள் உண்­மை­யி­லேயே நம்­பு­கி­றோம்,” என்று மென்­பொ­ருள் மேம்­பாட்­டா­ளர்­க­ளி­டம் அமைச்­சர் தெரி­வித்­தார்.

“ஏனெ­னில், அது வேலை­செய்­யும் பட்­சத்­தில், எங்­க­ளது சேவை­களி­லும் அவற்றை ஒருங்­கி­ணைக்க நாங்­கள் விரும்­பு­கி­றோம்,” என்­றும் அவர் சொன்­னார்.

கருத்­த­ரங்­கில் இடம்­பெற்ற ஒரு கலந்­து­ரை­யா­ட­லின்­போது, அந்­தத் தளத்­தில் இடம்­பெ­றும் மேம்­பா­டு­களில் பிர­த­ம­ரும் தாமும் அதிக ஆர்­வம் செலுத்­து­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் முறையாக இடம்பெற்ற ‘ஸ்டேக்’ கருத்தரங்கு, இம்முறை மெய்நிகர் வழியில் நடத்தப்படுகிறது. அந்த இருநாள் கருத்தரங்கு இன்றுடன் முடிவடைகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!