2021ல் மேலும் ஊழியர்களைச் சேர்க்கத் திட்டமிடும் 'டிஎச்எல்'

ஜெர்­ம­னி­யின் பான் நகரைத் தள­மா­கக் கொண்டு செயல்­படும் உலக தள­வா­டப் போக்­கு­வ­ரத்து நிறு­வ­ன­மான ‘டிஎச்­எல் குழுமம்’ சிங்­கப்­பூரில் ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்­கிறது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று பாதிப்­பு­களில் இருந்து உல­க­ளாவிய அள­வில் பொரு­ளி­யல் மீட்சி கண்டு வரும் நிலை­யில், பொருட்­கள் பட்டு­வா­டா­வும் சரக்­கு­கள் அனுப்­பப்­படு­வதும் ஏற்­கெ­னவே அதி­க­ரித்­துள்­ள­தாக டிஎச்­எல் எக்ஸ்­பி­ரஸ் நிறு­வனத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி ஜான் பியர்­சன், டிஎச்­எல் எக்ஸ்­பிரஸ் சிங்­கப்­பூர் நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் கிறிஸ்­தஃபர் ஓங் இரு­வரும் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­துள்­ளது.

டிஎச்­எல் நிறு­வ­னத்­தின் தள­வா­டப் போக்­கு­வ­ரத்­துக்­கான ஆசி­யப் பசி­பிக் வட்­டார தலை­மை­ய­கம் சிங்­கப்­பூ­ரில் அமைந்து இருக்­கிறது.

புதி­தாக வேலை­யில் சேர்க்­கப்­பட்டு இருப்­போ­ரில் பெரும்­பா­லா­ன­வர்­கள் முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் என்று திரு ஓங் கூறி­னார்.

விற்­ப­னைக்­காக நான்கு தற்­காலிக ஊழி­யர்­களை அமர்த்தி இருக்­கும் இந்த நிறு­வ­னம், புதிய பட்­ட­தா­ரி­கள் 12 பேரைச் சேர்த்து பயிற்சி அளித்து வரு­கிறது.

மக்­கள் பய­ணம் செய்ய இய­ல­வில்லை என்­ப­தால் இணைய விநி­யோக வழி­கள் மூல­மாக ஏரா­ள­மான பொருட்­கள் அனுப்­பப்­பட்டு வருகின்­றன. கொவிட்-19க்கான மருந்­தும் பல இடங்­க­ளுக்­கும் அனுப்­பப்­பட வேண்டி இருக்­கும். இத­னால் அடுத்த ஆண்­டில் மேலும் பல ஊழி­யர்­கள் தேவைப்­ப­டக்­கூ­டும் என்று திரு பியர்­சன் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, கொவிட்-19 பாதிப்­பு­கள், உல­க­ வர்த்­த­க­ம், மூல­தனங்­கள், பொரு­ளி­யல் இறங்கு­மு­கம் முத­லா­னவை இருந்தபோதி­லும் உல­கி­லேயே மிகப் பெரிய பரந்த அளவிலான இணைப்புக் கட்­ட­மைப்­பைக் கொண்ட நாடு­களில் சிங்­கப்­பூர் இரண்­டா­வது இடத்­தைப் பெற்று இருக்­கிறது.

‘டிஎச்­எல் உலக இணைப்­புப் பட்­டி­யல்’ என்ற ஓர் அறிக்­கை­யின் 2020வது பதிப்பு இவ்­வாறு தெரி­விக்­கிறது. நெதர்­லாந்து முத­லிடத்­தில் இருக்­கிறது. சிங்­கப்­பூ­ருக்­கும் நெதர்­லாந்­துக்­கும் இடை­யில் இரண்டே இரண்டு புள்­ளி­கள்­தான் வித்­தி­யா­சம்.

சிங்­கப்­பூ­ரின் உள்­நாட்­டுப் பொரு­ளி­யலை ஒப்­பி­டு­கை­யில், சரக்கு, மூல­த­னம், தக­வல், மக்­கள் ஆகி­யவை தொடர்­பான அனைத்­து­லக புழக்­கங்­க­ளின் அள­வைப் பொறுத்த வரை­ பட்­டி­ய­லில் சிங்­கப்­பூர் முத­லி­டத்­தில் இருக்­கிறது.

பெல்­ஜி­யம், ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­கள், அயர்­லாந்து, சுவிட்­சர்­லாந்து, லக்­சம்­பர்க், பிரிட்­டன், டென்­மார்க், மால்டா ஆகி­யவை பட்­டி­ய­லில் முதல் 10 இடத்­தில் உள்ள நாடு­க­ளா­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!