யங் ராஜா, சிங்கப்பூரின் ‘ஹிப் ஹாப்’ ராஜா

பச்சை, மஞ்­சள் நிறங்­களில் தலை­முடி, புது­மை­யான நவீன ஆடை­கள், வேடிக்­கை­யான நட­னம் என காட்­சி­ய­ளிக்க, தமது துடி­து­டிப்­பான நடை­யாலும் கல­க­லப்­பான பேச்சாலும் சுற்­றி­யி­ருப்­ப­வரை ஈர்க்­கி­றார் சிங்­கப்­பூ­ரின் வளர்ந்து வரும் ‘ஹிப் ஹாப்’ கலை­ஞரான 24 வயது யங் ராஜா.

சூப்­பர் ஸ்டார் ரஜி­னி­காந்த் நடித்த படங்களை விரும்பிப் பார்க்கும் இவர், தீவிர ரஜினி ரசிகர். ‘அண்­ணா­மலை’, ‘படை­யப்பா’, ‘அரு­ணாச்­ச­லம்’ போன்ற படங்­களைப் பார்த்து வளர்ந்­த இவர்,­ ரஜினிகாந்தைப்போல மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதையே தமது நோக்கமாகக் கொண்டுள்ளார். ரஜினி தமது ‘ஸ்டைல்’ மூலம் எப்படி உற்சாகம் ஊட்டுகிறாரோ அவ்வாறே இவரும் விறுவிறுப்பான பாடல்கள், அசைவுகள் வழி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்.

தனது தனித்தன்மையான பாடல்­கள் மூலம் தென்­கி­ழக்­கா­சி­யாவில் மட்டுமின்றி, நவீன இசைப்பாடகர்க ளுக்குப் போட்டியாக மேற்கு உலகிலும் பரிணமித்து வருகிறார் யங் ராஜா.

உலகெங்கும் பிரபலமான இவரது பாடல் வரி­க­ளை­யும் சொல்­லி­சை­யை­யும் உரு­வாக்க தூண்­டு­கோ­லாக விளங்­கி­யது இவ­ரின் தமிழ் வேர்­. தமிழ்­நாட்­டின் தஞ்­சா­வூர் மாவட்­டத்­தி­லி­ருந்து 1992ல் புலம்­பெ­யர்ந்த யங் ராஜா­வின் பெற்­றோர் இந்­திய பண்­பாடு, கலா­சா­ரத்தைத் தங்­க­ளது பிள்­ளை­க­ளிடம் ஆழப் பதித்துள்ளனர்.

யங் ராஜா­வுக்கு தந்தை வைத்த பெயர் ரஜித் அஹ­மது. சிங்­கப்­பூ­ரில் பிறந்து வளர்ந்த ரஜித் அஹ­மது தாம் சிறு­வ­ய­தி­லி­ருந்து பார்த்து ரசித்த விஷ­யங்­கள், அனு­ப­வங்­களை மைய­மாகக் கொண்டு தமது பாடல் வரி­களை எழுதி வரு­கி­றார்.

“வாழ்க்கை அனு­ப­வங்­க­ளை­யும் உண்­மை­யை­யும் பேசு­வ­து­தான் ஹிப் ஹாப். வள­ரும் பரு­வத்­தில் நாம் அனு­ப­வித்­தவை, வாழ்க்­கைக் கதை­கள் போன்­ற­வற்றை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு அமை­வதே ஹிப் ஹாப்,” என்று விளக்­கிய யங் ராஜா, இரண்­டாம் தலை­முறை சிங்­கப்­பூ­ர­ராக தனது அனு­ப­வங்­களை தனது பாடல்­களில் பதிவு செய்து வரு­கி­றார்.

“எனது பாடல்­கள் எனது தமிழ் அடை­யா­ளத்தை முக்­கிய கருப்­பொ­ரு­ளாக கொண்­டுள்­ளன. இதுவே எனது தனித்­து­வம்,” என்­றார் யங் ராஜா.

யங் ராஜா­வின் இசைப் பய­ணம் எதிர்­பா­ரா­த­வி­த­மாக தொடங்­கி­யது. நடி­க­ராக வேண்­டும் என்ற கன­வு­டன் பதின்ம வய­தில் பல நடிப்பு தேர்­வுப் போட்­டி­க­ளுக்­குச் சென்­ற­து­டன் உள்­ளூர் நாட­கங்­க­ளி­லும் நடித்­தார். இவ­ரது கன­வு­க­ளை­மாற்­றி­ய­மைத்­தது ஒரு நிகழ்வு.

ஒரு முறை அவ­ரது நண்­பர் ஃபரிஸ், ஒரு ஃப்ரீஸ்­டைல் சொல்­லிசை காணொ­ளி­யைத் தயா­ரித்து டுவிட்­ட­ரில் பதி­வேற்­றி­னார். அது சிங்­கப்­பூ­ரி­லும் மலே­சி­யா­வி­லும் பிர­ப­ல­மா­னது. அந்த வெற்­றி­யைப் பார்த்து யங் ராஜா­வை­யும் ராப் காணொ­ளியை தாயா­ரித்து டுவிட்­ட­ரில் பதி­வேற்­றம் செய்­யத் தூண்டி னார் ஃபரிஸ். அப்­போது யங் ராஜா எடுத்த முடிவு அவ­ரது வாழ்க்­கையை இந்த அள­விற்கு மாற்­றும் என்று அவர் சிறி­தும் எதிர்­பார்க்­க­வில்லை.

பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் படிப்பை முடித்­த­பின் பெற்­றோ­ரின் விருப்­பப்­படி பட்­டப்­ப­டிப்­பைத் தொடர்­வதா அல்­லது தமக்­குப் பிடித்த கலைத் துறை­யில் ஈடு­ப­டு­வதா என்­னும் கேள்வி எழுந்­த­போது குடும்ப நிதி நிலைமை, ஆர்­வ­மின்மை போன்ற கார­ணங்­க­ளால் பட்­டப்­ப­டிப்பு வேண்­டாம் என்று முடிவு செய்த யங் ராஜா­விற்கு ஒவ்­வொரு கட்­டத்­தி­லும் உறு­து­ணை­யாக இருந்­தது இவ­ரது குடும்­பம்.

இவ­ரின் தந்தை திரு யூசுப் ராவுத்­தர் ரஜித், சிங்­கப்­பூர் இலக்­கிய விருதை வென்ற தமிழ் எழுத்­தா­ளர். தமது பாடல்­க­ளுக்­கான தமிழ் வார்த்­தை­களை பெற்­றோர், மூன்று சகோ­த­ரி­க­ளு­டன் கலந்­தா­லோ­சிக்­கும் யங் ராஜா, ‘பூரி கேங்’ எனும் தமது முதல் பாடல் வரி­களை எழு­தி­ய­போது தமிழ் சொற்­க­ளைக் கோர்­வை­யா­கச் சேர்க்க தமது தாயார் உத­வி­யதை நினை­வு­கூர்ந்­தார்.

ஒன்­ப­தா­வது வய­தில் சகோ­த­ரி­யின் ‘வாக்­மேன்’ கருவி வழி இவ ருக்கு ஹிப் ஹாப் பாடல்­கள் அறி­மு­க­மா­ன­தி­லி­ருந்து இவ­ருக்கு அத் தகைய பாடல்­கள் மீதான ஆர்­வம் வளர்ந்­து­கொண்டே இருக்­கிறது.

பிற­ரின் வாழ்­வில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் சக்­தி­யும் பிறரை மகிழ்­விக்­கும் ஆற்­ற­லும் ஹிப் ஹாப் இசைக்கு உண்டு என்­பதை நம்­பும் யங் ராஜா, ஆங்­கி­லம், தமிழ் ஆகிய இரு மொழி­க­ளி­லும் சர­ள­மாக உரை­யாட முடி­வது தமது பலம் என்­றார்.

“முழுக்க ஆங்­கி­லத்­தி­லேயே சொல்­லி­சையை உரு­வாக்­கி­னால் எனது பாடல்­கள் இன்­னும் பிர­ப­ல­மா­கும். ஏரா­ள­மான ரசி­கர்­களை எட்­டும் என்­றும் பலர் நினைக்­கி­றார்­கள். ஆனால், முழு­வ­தும் ஆங்­கி­லத்­தில் ‘ராப்’ செய்து இப்­போது இருப்­ப­தை­விட 10 மடங்கு பிர­ப­ல­மா­னா­லும் அது எனக்கு உண்­மை­யான மகிழ்ச்­சி­யைத் தராது. அது நான் யார் என்­ப­தை­யும் எனது அடை­யா­ளத்­தை­யும் பிர­தி­ப­லிக்­காது. தமி­ழைத் தவிர்த்­தால் என் அடை­யா­ளத்தை இழந்து விடு­வேன். அது நானாக இருக்­க­மாட்­டேன்,” என்­றார் யங் ராஜா.

இவ­ரின் சொல்­லிசை வரி­களும் ஆடத் தூண்­டும் இசை­யும் ஒரு­பு­ற­மி­ருக்க, இவ­ரது இசைக் காணொ­ளி­க­ளின் காட்­சி­களும் பல­ரும் ரசிக்­கும் வண்­ணம் அமை­கின்­றன. கண்­க­ளைக் கொள்ளை கொள்­ளும் காட்­சி­கள், பார்க்­கும்­பொ­ழுதே உற்­சா­க­மூட்­டும் புதுமை யான நட­னக் காட்­சி­கள், சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு அறி­மு­க­மான இடங்­கள் என காணொ­ளிக் காட்­சி­கள் பார்ப்­ப­வர்­க­ளின் ரச­னை­யைத் தூண்­டும்.

புகழ், பெயர், பணம் எதுவும் யங் ராஜா­வுக்கு நோக்­கம் அல்ல. மக்­களை மகிழ்­விக்க வேண்­டும், அவர்­க­ளுக்கு உந்­து­கோ­லாக விளங்க வேண்­டும் என்­பதே தமது இசைப் பய­ணத்­தின் நோக்­கம் என்­கி­றார் இவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!