உணவகங்களில் கடந்த மாதம் வியாபாரம் அமோகம்

கொவிட்-19 சூழல் கடந்த ஆண்டு உணவு, பானத் துறைக்குப் பாதிப்பை ஏற்­ப­டுத்தி இருக்­க­லாம். ஆனால், கடந்த மாதம் வியா­பா­ரம் சூடு­பிடித்­த­தாக உண­வ­கங்­கள் கூறி­யுள்­ளன. 2019ஆம் ஆண்­டின் அதே கால­கட்­டத்­து­டன் ஒப்­பு­நோக்க, கடந்த டிசம்­பர் மாதம் உண­வ­கங்­கள் கூடு­த­லான முன்­ப­தி­வு­களைப் பெற்­றன.

வாடிக்­கை­யா­ளர் நம்­பிக்கை மேம்­ப­டு­வதை இது பிர­தி­ப­லிப்­பதாக உணவு, பானத் துறை­யினர் கூறு­கின்­ற­னர். மேலும், உணவு, பானத் துறை­யில் வாடிக்­கை­யா­ளர்­கள் அதி­கம் செல­விட, ஆண்­டி­று­திப் பய­ணத் திட்­டங்­கள் பாதிப்­ப­டைந்­த­தும் மற்­றொரு கார­ண­மாக இருக்­க­லாம்.

உணவு, பானத் துறை­யில் டிசம்­பர் மாதத்­திற்­கான அதி­கா­ர­பூர்வ புள்ளி விவ­ரங்­கள் இன்­னும் கிடைக்­கா­த­தால் வியா­பா­ரத்­தில் ஏற்­பட்­டி­ருக்­கும் தாக்­கம் குறித்து தெளி­வா­கத் தெரி­ய­வில்லை.

கொவிட்-19 சூழ­லால் உணவு, பானத் துறைக்கு சிர­ம­மான கால­கட்­டம் ஏற்­பட்­ட­தன் கார­ண­மாக சில உண­வ­கங்­கள் வாடிக்­கை­யாளர் கூட்­டத்தை ஈர்க்க கூடு­தல் ஏற்­பாடு­க­ளைச் செய்­த­தா­லும் ஆண்டு­ இறுதி­யில் வியா­பா­ரம் சூடு­பி­டித்து இருக்­க­லாம் என்­றும் சொல்­லப்­படு­கிறது.

இந்­தத் துறை­யில் கடந்த செப்­டம்­ப­ரு­டன் ஒப்­பு­நோக்க அக்­டோ­பரில் விற்­பனை 5.6 விழுக்­காடு அதி­க­ரித்­ததை அர­சாங்க புள்­ளி­வி­வ­ரங்­கள் காட்­டி­னா­லும், முந்தைய ஆண்­டின் அதே கால­கட்­டத்­து­டன் ஒப்­பு­நோக்க கடந்த அக்­டோ­ப­ரில் விற்­பனை 23.5 விழுக்­காடு சரிந்­தது.

உண­வ­கங்­க­ளுக்கு கூடு­த­லான வாடிக்­கை­யா­ளர்­கள் உணவு உண்ண வரும் வேளை­யில், அவர்­களுக்குப் பாது­காப்­பான, ரசிக்­கக்­கூ­டிய அனு­ப­வத்தை வழங்க உண­வ­கங்­கள் நட­வ­டிக்­கை­கள் எடுத்து வரு­கின்­றன.

ஆண்­டி­று­தி­யில் சூடு­பி­டித்த வியா­பா­ரம், இவ்­வாண்டு தொடக்­கத்­தி­லும் சிறப்­பாக இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. எதிர்­வ­ரும் சீனப் புத்­தாண்­டிற்­காக வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் இருந்து முன்­ப­தி­வு­கள் வரத் தொடங்­கி­விட்­ட­தாக சில உண­வ­கங்­கள் கூறி­யுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!