தற்காப்புக் கலை காலத்தின் தேவை

நான் கடந்த பத்து ஆண்­டு­க­ளாக ஒரு கண் நோயோடு (கெர­டோ­கோ­னஸ்) போரா­டிக்­கொண்­டி­ருக்­கி­றேன். இது எந்த வகை­யி­லும் உயி­ருக்கு ஆபத்­தா­ன­தில்லை என்­றா­லும், எனது கண் பார்­வை­யில் ஒரு பகுதியை நான் இழந்­து­விட்­டேன். அதன்­பி­றகு, எனது சம­நிலை மற்­றும் தொலை­தூ­ரப் பார்­வை­யும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இதன் விளைவு என்­ன­வென்­றால், கடந்த எட்டு ஆண்­டு­க­ளாக நான் அதிக உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­ப­டு­வதை நிறுத்­தி­விட்­டேன். எங்கு கீழே விழுந்­து­வி­டு­வோமோ என்று நான் தொடர்ந்து பயந்­த­தால் நான் என் தன்­னம்­பிக்­கையை இழந்து தவித்­தேன்.

இதன் விளை­வாக என் உடல் எடை அதி­க­ரிக்­கத் தொடங்­கி­யது. 2019ஆம் ஆண்­டில் ஒரு மருத்­துவ நிபு­ண­ரி­டம் இருந்து ஆலோ­ச­னை­பெற்று, ஒரு கலப்பு தற்­காப்­புக் கலை உடற்­ப­யிற்­சிக் கூடத்­தில் பதிவு செய்ய முடிவு செய்­தேன். அங்கு என்ன மாதி­ரி­யான பயிற்­சி­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன என்­பது பற்றி எனக்கு முத­லில் அதி­கம் தெரி­யாது. இதில் சேர்­வது ஒரு எளி­தான முடி­வல்ல. தீவிர யோச­னைக்­குப் பிறகு நான் Evolve MMA என்ற உடல்­ப­யிற்சி நிலை­யத்­தில் சேர்ந்­தேன். அங்­குள்ள பயிற்­று­விப்­பா­ளர்­கள் மிக­வும் திற­மை­சா­லி­கள், எளி­தாக அணு­கக்­கூ­டி­ய­வர்­கள். என்னை அவர்­கள் நன்­றா­க­வும் பொறு­மை­யா­க­வும் கவ­னித்­த­னர்.

‘முவே தாய்’ கலை­யு­டன் நான் எனது தற்­காப்­புக் கலை பய­ணத்­தைத் தொடங்­கி­னேன். “தாய் குத்­துச்­சண்டை” என்று குறிப்­பி­டப்­படும் முவே தாய், ஒரு போர் விளை­யாட்டு. இதை “எட்டு கர­ச­ர­ணா­தி­கள் கலை” என்­றும் அழைக்­கப்­ப­டு­கிறது. ஏனெ­னில் இது கைமுட்­டி­கள், முழங்­கை­கள், முழங்­கால்­கள் மற்­றும் தாடை­க­ளின் ஒருங்­கி­ணைந்த பயன்­பாட்­டால் செயல்­ப­டு­கிறது.

முதல் வகுப்­பில் எனக்கு மூச்சுத் திண­றி­யது. இருப்­பி­னும் நான் மகிழ்ச்சி அடைந்­தேன். இழந்த தன்­னம்­பிக்கையை மீண்­டும் வரும்­வரை நான் தொடர்ந்து முயற்சி செய்­தேன்.

முதல் சில வகுப்­பு­கள் மிக­வும் கடி­ன­மாக இருந்­தன. நான் புதி­தாக பல விஷ­யங்­க­ளைக் கற்­றுக்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. இருப்­பி­னும், இரண்­டா­வது வாரத்­தில் எனது நம்­பிக்­கை­யும் ஆற்­ற­லும் கூடின.

அடுத்­த­டுத்த மாதங்­களில் உடலை வலி­மைப்­ப­டுத்­தும் வகுப்­பு­க­ளி­லும் நான் கலந்­து­கொள்ள ஆரம்­பித்­தேன். இதற்­கி­டை­யில், பல­ரும் பிரே­சி­லிய ‘ஜியு-ஜிட்சு’ தற்­காப்­புக் கலை­யில் ஈடு­பட்­டது எனக்­குப் பொறா­மை­யைத் தந்­தது.

எதி­ரா­ளியை தரை­யில் கொண்டு­செல்­வது, அவ­ரைக் கட்­டுப்­ப­டுத்து­வது, ஆதிக்­கம் செலுத்­து­வது மற்றும் பல நுட்­பங்­க­ளைப் பயன்­படுத்தி கூட்­டுப் பூட்­டு­கள் வழி­யாக ஒரு­வரை எப்­படி வெல்­வது என்­பதை இது கற்­றுக்­கொ­டுக்­கிறது.

இந்த தற்­காப்­புக் கலை­யில் ஈடு­பட அப்­போது எனக்கு தைரி­யம் இல்லை. இது அதிக உடல் தொடர்­பு­க­ளைக் கொண்­டி­ருந்­தது. இருப்­பி­னும் ஓராண்டு கழித்து, பயிற்­று­விப்­பா­ளர்­க­ளின் ஊக்­கத்­து­டன் எனது முதல் ‘ஜியு-ஜிட்சு’ மற்­றும் மல்­யுத்­தம் வகுப்­பி­லும் கலந்­து­கொள்ள நான் முடிவு செய்­தேன். இவை எனக்கு மேலும் பல பலன்­க­ளைக் வழங்கியுள்ளன.

தமிழ்ப் பெண்­கள் பங்­கேற்பு குறைவு

ஆனால் நான் கவ­னித்த ஒரு விஷ­யம் என்­ன­வென்­றால்; தற்­காப்­புக் கலை­கள் கற்­றுக் கொடுக்­கப்­படும் இந்த உடல்­ப­யிற்சி நிலை­யத்­தில் மிகக் குறை­வான தமிழ்ப் பெண்­களே உள்­ள­னர். இதற்­குப் பல கார­ணங்­கள் இருக்­க­லாம். தற்­காப்­புக் கலை­கள் பெண்­க­ளுக்­குப் பொருந்­தாது என்று இளம் வய­தி­லி­ருந்தே பெண்­க­ளுக்­குக் கூறப்­பட்டு வரு­கிறது. பெண்­கள் சரா­சரி­யாக ஆண்­க­ளை­விட சுறு­சு­றுப்­பாக இருப்­ப­தைப் பல ஆய்­வு­கள் கண்­ட­றிந்­துள்­ளன.

ஆனா­லும் பல பெண்­கள் தற்­காப்­புக் கலை­களில் ஈடு­ப­டு­வ­தைத் தவிர்க்­கி­றார்­கள். ஏனெ­னில், எதி­ரா­ளியை எதிர்­கொள்ள இது உடல் தொடர்பு கொண்ட ஒரு விளை­யாட்­டா­கும். நம் சமூ­கம் பொது­வாக இது­போன்ற விளை­யாட்­டு­களில் பெண்­கள் பங்­கேற்­பதை ஊக்­கப்­ப­டுத்­து­வ­தில்லை.

ஆனால் இது­போன்ற தற்­காப்புக் கலை­களில் ஈடு­ப­டு­வ­தன் மூலம் நான் பல­ன­டைந்­துள்­ளேன். முத­லா­வ­தாக, தற்­காப்­புக் கலை­க­ளைப் பயி­லும் பெண்­கள் பய­னுள்ள தற்­காப்பு சூழ்ச்­சி­க­ளைக் கற்­றுக்­கொள்­கி­றார்­கள்.

‘முவே தாய்’, ‘ஜியு ஜிட்சு’ கலை­களை விடா­மு­யற்­சி­யு­டன் கற்­றுக்­கொள்­வோர், தங்­களை எவ்­வாறு தற்­காத்­துக்­கொள்ள வேண்­டும் என்று தெரிந்­து­கொள்­கின்­ற­னர். அதை­யும் தாண்டி அப­ரி­மி­த­மான பலத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு மாறாக தங்­க­ளை­விட பெரி­தான அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொள்ள பெண்­கள் உள்­ளார்ந்த திற­னை வளர்த்­துக்­கொள்­கின்­ற­னர்.

இரண்­டா­வ­தாக, உங்­களை தற்­காத்­துக்­கொள்ள அனு­ம­திக்­கும் நகர்­வு­களை நீங்­கள் இணைத்­துக்­கொள்­வ­தால், உங்­க­ளது தன்­னம்­பிக்கை அதி­க­ரிப்­ப­து­டன் பய­மும் குறை­கிறது.

தற்­காப்­புக் கலை­யில் ஈடு­ப­டு­வதன் மூலம் அன்­றாட வாழ்க்­கை­யில் உங்­கள் சுய கட்­டொ­ழுங்கை மேம்­ப­டுத்­த­வும் முடி­யும். இது பெண்­க­ளுக்கு மட்­டு­மின்றி பெரி­ய­வர்­க­ளுக்­கும் பொருந்­தும்.

மூன்­றா­வ­தாக, தற்­காப்­புக் கலைக்­கும் உடல் ரீதி­யாக சகிப்­புத்­தன்மை தேவைப்­ப­டு­கிறது. உடல் ஆரோக்­கி­யத்­தை­யும் சீரான தசை­களை­யும் ஊக்­கு­விக்­கும் வழி­க­ளை­யும் நீங்­கள் படிப்­ப­டி­யாக கற்­றுக்­கொள்­வீர்­கள். தற்­காப்­புக் கலை­கள் மூலம் ‘மோட்­டார்’ திறன்­கள் மேம்­படும். தற்­காப்பு கலை வகுப்பு­களில் மொத்த உடல் பயிற்சி மூலம் உட­லில் இருந்து ஆயி­ரம் கேலரி களுக்கு மேல் குறைக்­கலாம். இது உங்­கள் நீண்­ட­நாள் உடல்­நி­லைக்கு மிக உகந்­தது.

இறு­தி­யாக, தற்­காப்­புக் கலை­யில் ஈடு­ப­டு­வ­தால் பெண்­க­ளுக்கு மன­அ­ழுத்­தம் குறை­யும், மன­நி­லை­யில் நல்ல முன்­னேற்­றம் ஏற்­படும். தற்­காப்­புக் கலை என்­பது நீங்­கள் பங்­கேற்­கக்­கூ­டிய மிக­வும் கடி­ன­மான நட­வ­டிக்­கை­களில் ஒன்­றா­கும். தோல்­வி­க­ளை­யும் விமர்­ச­னங்­க­ளை­யும் எதிர்­கொள்ள இது உத­வு­கிறது.

அத்­து­டன் நீங்­கள் உங்­க­ளைச் சுய மதிப்­பீடு செய்­து­கொள்­ள­வும் முடி­யும். பயிற்சி எப்­போ­தும் எளி­தாக இருக்­காது. இறு­தி­யில் நீங்­கள் மன­த­ள­வி­லும் உட­ல­ள­வி­லும் வளர்ச்சி அடைய இது உத­வு­கிறது.

எனது பய­ணம் இப்­போ­து­தான் ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. சாத்­தி­யக்­கூ­று­கள் மற்­றும் வாய்ப்­பு­கள் நிறைந்த இந்­தப் பயிற்­சி­யைத் தொடங்­கி­ய­போது, எனக்கு அனு­ப­வ­மும் திற­மை­யும் மிகக் குறைவே.

ஆனா­லும் இது எனக்கு பல­ன் அளிக்­கும் அனு­ப­வ­மாக இருந்­தது. நான் வேண்­டும் என்றே சண்டை, சச்­ச­ர­வு­களில் ஈடு­பட மாட்­டேன். அந்த நோக்­கத்­திற்­காக யாரும் இது­போன்ற பயிற்­சிக்­குச் செல்­லக்­கூ­டாது.

ஆனால் தற்­காப்­புக் கலை­களைக் கற்­றுக்­கொள்­வது சண்டை போடு­வ­தற்கு மட்­டு­மல்ல. இது ஒவ்­வொரு நாளும் நம்மை நாமே மேம்

­ப­டுத்­திக்­கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பை அளிக்­கிறது. Evolve MMA உடற்­ப­யிற்சி நிலை­யத்­தில் உள்ள பயிற்­று­விப்­பா­ளர்­கள் வழங்­கிய ஆலோ­ச­னை­ எனது பய­ணத்தை ஆத்­ம­தி­ருப்தி நிறைந்த ஒன்­றாக மாற்­றி­யுள்­ளது. நான் பெற்ற இந்த அனு­ப­வத்தை அனை­வ­ரும், குறிப்­பாக இளம் பெண்­களும் பெற வேண்­டும் என்­பது என்­னு­டைய நோக்­கம்.

எழுத்து: பா. ஹேமா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!