சிங்கப்பூரில் புதிய கொரோனா சோதனைக் கருவி

கொவிட்-19 கொள்­ளை­நோய், சளிக்­காய்ச்­சல் உட்­பட பல்­வேறு கிரு­மி­க­ளைக் கண்­டு­பி­டிக்­கக்­கூ­டிய புதிய சோத­னைக் கரு­விக்கு சிங்­கப்­பூ­ரின் சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தின் தற்­கா­லிக அங்­கீ­கா­ரம் கிடைத்­துள்­ளது.

ஏ*ஸ்டார் எனப்­படும் அறி­வி­யல், தொழில்­நுட்­பம் மற்­றும் ஆராய்ச்சி அமைப்பு, டான் டோக் செங் மருத்­து­வ­மனை, MiRXES எனும் உள்­ளூர் மூலக்­கூறு கண்­ட­றி­யும் நிறு­வ­னம் ஆகி­யவை கூட்­டாக இந்த ‘Fortitude SARS-CoV-2’ மற்­றும் ‘Flu A/B’ சோத­னைக் கரு­வியை உரு­வாக்­கி­யுள்­ளன.

தற்­போ­துள்ள ‘Fortitude’ கருவி கொவிட்-19 கிரு­மியை மட்­டும் கண் டறி­யக்­கூ­டி­யது. அத­னு­டன் ‘பிசி­ஆர்’ எனப்­படும் பல்­ப­டி­யத் தொடர்­வினை பரி­சோ­தனை மர­பணு அம்­ச­மும் சேர்க்­கப்­பட்­டது.

இனி இந்த மேம்­ப­டுத்­தப்­பட்ட கருவி, A மற்­றும் B வகை சளிக்­காய்ச்­ச­லை­யும் கண்டு­பி­டிக்­கும் ஆற்­ற­லைப் பெற்­றுள்­ளது.

இந்­தக் கரு­வி­யின் மூலம் ஒரு­வர் சோதிக்­கப்­ப­டும்­போது, அவ­ருக்கு கொவிட்-19 உள்­ளதா அல்­லது சளிக்­காய்ச்­சல் உள்­ளதா என்­பதை இரண்டு முடி­வு­க­ளைத் தெரி­விக்­கும்.

கடந்த ஆண்டு பிப்­ர­வரி முதல் ஐந்து மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட ஃபோர்டிட்­டி­யுட் சோத­னைக் கருவி உள்­ளூ­ரி­லும் வெளி­நா­டு­க­ளி­லும் விற்­கப்­பட்­டுள்­ளன.

அந்­தக் கரு­வி­கள் 13 உள்­ளூர் மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் ஆய்­வுக் கூடங்­களிலும் பயன்­ப­டுத்­தப்­பட்­டு உள்­ளன.

மேலும் அவை அமெ­ரிக்கா உட்­பட உல­கம் முழு­வ­தும் உள்ள 40க்கு மேற்­பட்ட நாடு­க­ளுக்கு ஏற்று மதி செய்­யப்­பட்­டுள்­ளன என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இம்­மா­தம் 8ஆம் தேதி சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தின் ஒப்­பு­தல் கிடைத்­த­வு­டன் புதிய ‘ஃபோர் டிட்­டி­யுட்’ சோத­னைக் கரு­வி­யின் விற்­பனை தொடங்­கி­யது.

கொவிட்-19 அல்­லது சளிக்­காய்ச்­சல் உள்ள நோயா­ளி­க­ளுக்­குள்­ளி­ருந்து ஒரே மாதி­ரி­யான அறி­கு­றி­கள் வெளிப்­படும்.

அதனால் அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கண்டறிய சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் சிரமப்படுவார்கள். இந்தப் புதிய கருவி அந்தச் சிரமத்தைப் போக்கி தெளிவான முடிவைக் காட்டும்.

MiRXES நிறு­வ­னம் புதிய கரு­விக்கு ஐரோப்­பிய ஒப்­பு­த­லை­யும் பெற்­று­விட்­டது. மேலும் அமெ­ரிக்க உணவு மற்­றும் மருந்து நிர்­வா­கத்­தி­ன் அங்­கீ­கா­ரத்­தை­யும் ஜப்­பா­னின் மருந்­தி­யல், மருத்­து­வச் சாத­னங்­கள் அமைப்­பி­ட­மி­ருந்து ஒப்­பு­த­லை­யும் பெற விண்­ணப்­பித்­துள்­ளது.

“உல­கம் முழு­வ­தும் ‘MiRXES Fortitude’ கருவி விநி­யோ­கிப்­பட்­டி­ருப்­ப­தைத் தொடர்ந்து, தொற்­று­நோய் சோத­னை­யில் உல­கத்­தின் தேவை­யைக் கண்­ட­றிய நாங்­கள் முயற்சி செய்­வோம்,” என்­றார் MiRXES நிறு­வ­னத்­தின் இணை நிறு­வ­ன­ரும் தலைமை நிர்­வாகி அதி­கா­ரி­யு­மான டாக்­டர் லிஹான் ஸோ.

“ஏ*ஸ்டார், டான் டோக் செங் மருத்­து­வ­மனை போன்ற முக்­கிய பங்­கா­ளி­க­ளு­டன் அணுக்­க­மா­கப் பணி­யாற்றி ‘ஃபோர்டிட்­டி­யுட்’ சோத­னைக் கரு­வி­யின் ஆற்­றலை மேம்­ப­டுத்தி, பரி­சோ­தனையின் தேவை­க­ளைப் பூர்த்தி செய்வோம்,” என்­றும் கூறி­னார் டாக்­டர் ஸோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!