2020ல் சிங்கப்பூரின் வானிலை பல முரண்பாடுகளைக் கொண்டது

கடந்த ஆண்டு சிங்­கப்­பூ­ரின் வானிலை பல­வ­கை­களில் வியக்­கத்­தக்­க­தாக இருந்­த­தாக தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தின் வானிலை ஆய்­வு நிலையம் தெரி­வித்­துள்­ளது.

சிக்­கப்­பூ­ரின் வானிலை மற்ற நாடு­க­ளைப் போல இல்­லா­மல் பல முரண்­பா­டு­க­ளைக் கொண்­டி­ருந்­த­தாக வாரி­யம் கூறி­யது.

சிங்­கப்­பூ­ரின் வானிலை கடந்த ஆண்­டின் முதல் ஆறு மாதங்களில் சரா­சரி வெப்­ப­நி­லைக்­கும் அதி­க­மாக சூடாக இருந்­தது.

ஆனால் அடுத்த ஆறு மாதங்­களில் நிலைமை முற்­றி­லும் மாறி­யது.

சரா­சரி வெப்­ப­நி­லைக்­கும் குறை­வாக குளி­ராக இருந்­தது.

தென்­மேற்­குப் பரு­வ­ம­ழை­யால் கன­மழை பெய்­த­போ­தி­லும் சிங்­கப்­பூ­ரின் எட்­டா­வது ஆக வெப்­ப­மான ஆண்­டாக கடந்த ஆண்டு பதி­வா­கி­யது.

கடந்த ஆண்­டுக்­கான சரா­சரி வெப்­ப­நிலை 28 டிகிரி செல்­சி­ய­சாக இருந்­தது.

இது நீண்­ட­கால சரா­ச­ரி­யை­விட அரை டிகிரி அதி­கம்.

2018ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதத்­தி­லி­ருந்து தொடர்ந்து 28 மாதங்­க­ளுக்கு சரா­சரிக்கும் அதி­க­மான வெப்­ப­நிலை பதி­வா­னது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடி­வுக்கு வந்­தது.

சிங்­கப்­பூர் வானிலை ஆய்­வு நிலையம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யின்­படி சிங்­கப்­பூ­ரின் வானி­லைப் போக்கு மற்ற நாடு­க­ளு­டன் வித்­தி­யா­ச­மாக இருந்­தது.

உல­க­ளா­விய நிலை­யில், கடந்த பத்து ஆண்­டு­களில், ஆக வெப்­ப­மான மூன்று ஆண்­டு­களில், கடந்த ஆண்­டும் ஒன்று என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அதிக வெப்­ப­முள்ள பத்து ஆண்­டு­ளாக கடந்த பத்து ஆண்டு­ கள் பதி­வா­கி­யது.

சிங்­கப்­பூ­ரில் பெய்த மழை­யின் அளவு நீண்­ட­கால வரு­டாந்­திர சரா­ச­ரி­யை­விட குறை­வாக இருந்­தது.

ஆனால் குறிப்­பாக கடந்த ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில் அடிக்­கடி கன­மழை பெய்­தது.

பொது­வாக ஜூன் மாதத்­தி­லி­ருந்து செப்­டம்­பர் மாதம் வரை அவ்­வ­ள­வாக மழை பெய்­யாது.ஆனால் கடந்த ஆண்டு வழக்­கத்­துக்கு மாறாக சிங்­கப்­பூ­ரி­லும் சுற்­றி­யுள்ள நாடு­க­ளி­லும் அதிக அள­வில் மழை பெய்­தது.

இதன் விளை­வாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்­தி­லி­ருந்து செப்­டம்­பர் வரை சிங்­கப்­பூ­ரில் பெய்த மழை 1981ஆம் ஆண்­டி­லி­ருந்து 2010ஆம் ஆண்டு வரை பதி­வான நீண்­ட­கால சரா­ச­ரி­யை­விட 30 விழுக்­காடு அதி­கம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இவ்­வாண்டு தொடங்­கி­ய­தி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரின் வெப்­ப­நிலை வழக்­கத்­துக்கு மாறாக குறை­வாக இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!