‘திடமாக முடிவெடுப்பவர்’, ‘சிறந்த மதியுரைஞர்’ தலைமையில் குழு

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்று நோயைச் சமா­ளிப்­ப­தற்­காக பல அமைச்­சு­களை உள்­ள­டக்­கிய சிறப்­புப் பணிக்­குழு செயல்­பட்டு வரு­கிறது. சுகா­தார அமைச்­சர் கான் கிம் யோங்­கும் கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங்­கும் அதற்குத் தலைமை ஏற்று இருக்­கி­றார்­கள்.

சிங்­கப்­பூர் கொவிட்-19 தலை­காட்டி ஓராண்டு ஆகி­விட்­டது. அதைக் குறிக்­கும் வகை­யில் செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­யா­ளர் கூட்டம் நடந்­தது.

கடந்த ஓராண்­டில் இத்தலை வர்களில் ஒரு­வ­ர் மற்றொருவரைப் பற்­றிய கண்­ணோட்­டத்­தில் என்­னென்ன மாற்­றங்­கள் இடம்­பெற்று இருக்­கின்­றன என்று செய்­தி­யா­ளர்­கள் கேட்­ட­னர். அதற்கு இரு­வ­ரும் பதி­ல­ளித்­த­னர்.

“திரு லாரன்ஸ் வோங், 48, திட்­ட­வட்­ட­மான ஒரு­வர். அவர் பிரச்­சினை­களை எழுப்பி அவற்றை விவா­தித்து முடி­வு­களை எடுக்­கும் விதத்தை நான் கவ­னித்து இருக்­கி­றேன். எல்­லாம் தெளி­வா­ன­தும் வேறு எதை­யும் யோசிக்­கா­மல் செய­லில் இறங்கி செய்து முடிப்­போம்,” என்று திரு கான், 61, கூறி­னார்.

“திரு கான் மாபெ­ரும் மதி­யுரை­ஞர். என்­னு­டைய அவ­சரத் தொடர்பு தொலை­பேசி இணைப்­பில் அவர் இடம்­பெற்று இருக்­கி­றார்.

“எப்­போ­துமே அவரை அழைத்து தொல்லை கொடுப்­பேன். கார­ணம் நான் சுகா­தா­ரத்­து­றைக்குப் புதி­தாக வந்­தி­ருக்­கி­றேன்,” என்று சுகா­தார அமைச்­ச­ர­ரைப் பற்றி திரு வோங் குறிப்­பிட்­டார்.

“கொவிட்-19க்கு முன்பே பல வழி­க­ளி­லும் கான் கிம் யோங்­குடன் தான் சேர்ந்து செயல்­பட்டு வந்­தி­ருப்­ப­தாக திரு வோங் கூறி­னார்.

மக்­கள் செயல் கட்­சி­யின் சமூக அற­நி­று­வன நிர்­வாக மன்­றத் தலை­வ­ராக திரு கான் செய­லாற்றி வந்­தார். அந்­தப் பொறுப்பை 2015ல் திரு வோங் ஏற்­றார்.

அதே­போல, சிங்­கப்­பூர் தொழி­லா­ளர் அற­நி­று­வ­னத்­தின் தலை­வராக 2018ல் திரு வோங் பொறுப்­பெ­டுத்­துக்­கொண்­டார்.

இந்த இரண்டு பத­வி­க­ளி­லும் திரு வோங்­கிற்­குத் திரு கான் வழி­காட்டி உத­வி­னார்.

“திரு கான் சுகா­தார அமைச்­சுக்­குப் பொறுப்பு வகிப்­ப­வர். ஆனால் தான் அப்­படி அல்ல என்­ப­தால் சிறப்பு பணிக்­கு­ழு­வுக்­குத் தலைமை வகிக்­கும் ஒரு­வர் என்ற முறை­யில் பல­வற்­றை­யும் புதிய கண்­ணோட்­டத்­தில் சிந்­திப்­ப­தும் எனது பணி­யின் ஒரு பகுதி. அப்­போ­தைக்கு அப்­போது திரு கானை அழைப்­பேன். இரு­வ­ரும் பல­வற்­றை­யும் சிந்­தித்து பல யோச­னை­களை­ முன்வைத்து விவா­திப்­போம்.

“திரு கான் எப்­போ­துமே ஒளிவு­ம­றைவு இல்­லா­த­வர். சிறந்த முறை­யில் நில­வ­ரங்­க­ளைத் தெரிந்து­கொள்ள, சுகா­தார அமைச்­சின் எண்­ணங்­கள் என்ன என்­பதை நான் தெரிந்­து­கொள்ள எனக்கு உத­வு­ப­வர். நாங்­கள் இரு­வ­ரும் பல­வற்­றை­யும் அலசி ஆராய்ந்து ஒன்­றா­கச் சேர்ந்து தீர்­வு­களை உரு­வாக்கி வந்­துள்­ளோம்,” என்று திரு வோங் மேலும் கூறி­னார்.

பணிக்­கு­ழு­வைப் பொறுத்த வரை­யில் மிக­வும் திட்­ட­வட்­ட­மான இணைத் தலை­வர் ஒரு­வ­ரு­டன் சேர்ந்து செயல்­ப­டு­வது தனக்கு மிக மகிழ்ச்சி அளிப்­ப­தாக திரு கான் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!