முன்னோட்டம் பார்க்கும் கிராப்

சக்­கரநாற்­காலி பயன்­ப­டுத்­தும் பய­ணி­களுக்கு ஏது­வாக புதிய சேவை ஒன்றை கிராப் நிறு­வ­னம் முன்­னோட்­டம் செய்து பார்க்­கிறது.

சக்­கரநாற்­காலி பயன்­ப­டுத்­தும் பய­ணி­கள் பய­ணம் முழு­வ­தும் சக்­கர நாற்­கா­லி­யி­லி­ருந்து இறங்க தேவை­யில்­லாத சேவையை வழங்க கிராப் திட்­ட­மிட்­டுள்­ளது.

இந்­தச் சேவைக்கு ‘கிராப்­

அ­சிஸ்ட் பிளஸ்’ என்று பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பான முன்­னோட்­டத்­தில் அடுத்த திங்­கட்­கி­ழ­மை­யி­லி­ருந்து சக்­கர நா்றகாலி பயன்­ப­டுத்­தும் பய­ணி­களை ஏற்­றிக்­கொள்­ளக்­கூ­டிய பத்து வாக­னங்­கள் அறிமுகப்படுத்தப்படும்.

சக்­கரநாற்­காலி பயன்­ப­டுத்­தும் பய­ணி­க­ளுக்கு உதவ பயிற்சி பெற்ற ஓட்­டு­நர்­கள் மட்­டுமே இந்த வாக­னங்­களை ஓட்­டு­வர். இந்­தச் சேவை­யைப் பயன்­ப­டு­த்துவோர் முதல் ஏழு கிலோ­மீட்­ட­ருக்கு $32 செலுத்த வேண்­டும்.

மேலும் ஒரு கிலோ மீட்­ட­ருக்­கும் கூடு­த­லாக 40 காசு செலுத்த வேண்­டும். அதை அடுத்து ஒவ்­வொரு கிலோ மீட்­ட­ருக்­கும் $2.30 செலுத்த வேண்­டும்.

தற்­போ­தைய ‘கிராப்­அ­சிஸ்ட் ரைட்’ சேவை மேம்­ப­டுத்­தப்­பட்டு இந்­தப் புதிய சேவை வழங்­கப்­ப­டு­கிறது. தற்­போ­தைய சேவை­யின்­கீழ் சக்­கரநாற்­காலி பயன்­ப­டுத்­தும் பயணி தமது சக்­கரநாற்­காலி அல்­லது தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­னத்தை வாக­னத்­தில் மடக்கி வைக்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இத­னால் அவர் வாக­னத்­தில் ஏறு­வ­தற்கு முன்பு சக்­கரநாற்­

கா­லி­யை­விட்டு இறங்க வேண்­டும்.

இந்­தச் சேவைக்கு பெரு­ம­ள­வி­லான வர­வேற்பு கிடைத்­துள்­ளது. இந்­தச் சேவையை 2018ஆம் ஆண்­டில் தொடங்­கி­ய­தி­லி­ருந்து 50,000க்கும் அதி­க­மா­ன­ ப­ய­ணங்­கள் பதி­வா­கி­யி­ருப்­ப­தாக கிராப் தெரி­வித்­தது.

புதிய சேவை­யின் மூலம் யாரு­டைய உத­வி­யு­மின்றி சக்­கரநாற்­காலி பயன்­ப­டுத்­தும் பய­ணி­கள் சுய­மா­கப் பய­ணம் செய்­ய­லாம் என்று கிராப் சிங்­கப்­பூ­ரின் நிர்­வாக இயக்­கு­நர் திரு யீ வீ டேங் தெரி­வித்­தார்.

தற்­போ­தைய நிலை­யில், உடற்­கு­றை­யுள்ள பய­ணியை வாக­னத்­தில் ஏற்­றி­வி­ட­வும் அவர்­க­ளது

சக்­கரநாற்­கா­லியை வாக­னத்­துக்­குள் வைக்­க­வும் கிராப் ஓட்­டு­நர்­க­ளுக்கு சில சம­யங்­களில் சிர­மம் ஏற்­ப­ட­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டது. அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கும் நோக்­கு­டன் பய­ணி­கள் தங்­கள் வீட்­டி­லி­ருந்து அல்­லது முதி­யோர் பரா­மிப்பு நிலை­யங்­க­ளி­லி­ருந்து மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குச் செல்­ல­வும் அங்­கி­ருந்து அவர்­க­ளது வசிப்­பி­டத்­துக்­குத் திரும்புதற்கும் ஏது­வான சேவையை வழங்க கிராப், எஸ்­எம்­ஆர்டி டாக்சி நிறு­வ­னம், டான் டோக் செங் மருத்­து­வ­மனை, சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனை ஆகி­யவை பங்­கா­ளித்­துவ ஒப்பந்தத்தில் கையெ­ழுத்­திட்­டுள்­ளன. டான் டோக் செங்

மருத்­து­வ­ம­னை­யின் பாதப் பரா­ம­ரிப்பு, கை மற்­றும் கால் வடி­வ­மைப்பு நிலை­யம், டான் டோக் செங் முதி­யோர் மருத்­துவ நிலை­யம், சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யின் நீரி­ழிவு, வளர்சிதை மாற்ற நிலை­யம் உட்­பட குறிப்­பிட்ட சில இடங்­க­ளுக்கு மட்­டுமே இந்­தச் சேவை­யைப் பயன்­ப­டுத்­த­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!