சாலை விபத்தில் போக்குவரத்து போலிஸ் அதிகாரி உட்பட இருவர் காயம்

தீவு விரைவுச் சாலையில் (பிஐஇ) இன்று பிற்பகலில் ஏற்பட்ட விபத்தில், போக்குவரத்து போலிஸ் (டிபி) அதிகாரி உட்பட குறைந்தது இருவர் காயமடைந்தனர்.

சாலைப் பாதுகாப்பை ஊக்குவிக்கும் ‘பெஹ் சியா லோர் - சிங்கப்பூர் சாலை’ சமூகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட விபத்துக்குப் பின் எடுக்கப்பட்ட காணொளியில், போக்குவரத்து போலிஸ் அதிகாரியும் மற்றொருவரும் சாலையில் மயக்கத்தில் கிடப்பதைக் காண முடிந்தது.

வழிப்போக்கர்கள் காயமடைந்தவர்களுக்கு உதவுவதையும் காணொளி காட்டியது.

கறுப்பு நிற ஜாக்கெட் அணிந்த போக்குவரத்து போலிஸ் அதிகாரி, சாலைக் குற்றவாளிகளை - குறிப்பாக குற்றமிழைக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களைக் கட்டுப்படுத்தும் ரகசிய அதிகாரிகளின் உயரடுக்கு பிரிவான சிறப்புப் பணிக் குழுவின் அங்கத்தினராகத் தோன்றுகிறார்.

சேதமடைந்த கறுப்பு மோட்டார் சைக்கிள், பக்கவாட்டில் நசுங்கிய பெரிய லாரி ஆகியவையும் அருகில் தெரிகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!