பழைய பொருட்கள்; புத்தம்புது அலங்காரம்; புக்கிட் தீமா பாலத்தின் புத்தாண்டுக் கோலம்

ஹாலந்து-புக்­கிட் தீமா குழுத்­தொகுதி உறுப்­பி­ன­ரும் அடித்­தள அமைப்­பு­க­ளின் ஆலோ­ச­க­ரு­மான திரு­வாட்டி சிம் ஆனி­டம் இரண்­டரை வாரங்­க­ளுக்கு முன்­னர் ஒரு குடி­யி­ருப்­பா­ளர், அந்த வட்­டா­ரத்­தில் சீனப் புத்­தாண்டு அலங்­கா­ரம் உண்டா என்று கேட்­டார்.

அத்­த­கைய திட்­டமோ அல்­லது அதற்­கான நிதி ஒதுக்­கீடோ இல்லை என்று சிம் ஆன் கூற­வும் அந்த குடி­யி­ருப்­பா­ளர் அதை ஒரு சவா­லாக எடுத்­துக்­கொண்­டார்.

தொண்­டூ­ழி­யர்­க­ளு­டன் கலந்­து­பே­சிய பிறகு, வர­லாற்­றச் சிறப்­பு­மிக்க புக்­கிட் தீமா டிரஸ் பாலத்தை மறு­சு­ழற்­சிப் பொருட்­க­ளால் அலங்­க­ரிக்க அவர் முடி­வெ­டித்­தார். அடித்­தள அமைப்­பு­க­ளின் தொண்­டூ­ழி­யர்­கள் உட்­பட ஏறக்­கு­றைய 100 குடி­யி­ருப்­பா­ளர்­கள் ஒன்று கூடி­னர். 10 நாட்­களில், மறு­சு­ழற்சி செய்­யப்­பட்ட பிளாஸ்­டிக் பைக­ளைக் கொண்டு 500 பூக்­க­ளை­யும், பயன்­படுத்­திய பாட்­டில்­க­ளி­லி­ருந்து 100 விளக்­கு­க­ளை­யும் உரு­வாக்­கி­னர். ஏறக்குறைய 200 பூக்­க­ள், 60 முதல் 70 விளக்­கு­க­ளால் புக்­கிட் தீமா டிரஸ் பாலம் புதுக்கோலம் பூண்டது. விளக்குகளில் அன்பளிப்புப் பைகளுடன் முகக்கவசங்களும் அழகாகத் தொங்குகின்றன.

மீத­முள்ள அலங்­கா­ரங்­கள் அக்­கம்பக்க சமூக நிலை­யங்­களை அலங்­க­ரிக்கப் பயன்­ப­டுத்­தப்­படும்.

சுற்­றுப்­பு­றத்­துக்கு கேடில்­லா­மல், நீடித்த நிலைத்­தன்மை பற்றிய செய்­தி­யைப் பரப்­பும் வகை­யில் விழாக்­க­ளைக் கொண்டாட இது சிறந்த வழி என்­றார் திரு­வாட்டி சிம் ஆன்.

கொரோனா சூழ­லுக்கு ஏற்ப சிங்­கப்­பூ­ரர்­கள் எவ்­வாறு தங்­களை மாற்­றி­ய­மைத்­துக்கொள்­கி­றார்­கள் என்­பதை இது காட்­டு­கிறது என்­றார் நேற்­றைய அலங்­கார நிகழ்ச்­சி­க்கு வந்த­ தொ­கு­தி­யின் மற்­றோர் உறுப்­பி­ன­ர் கிறிஸ்­தோ­பர் டி சூசா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!