சிங்கப்பூரில் மேலும் 11 பேருக்கு கொவிட்-19; ஒருவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சிப்பந்தி

சிங்கப்பூரில் இன்று (பிப்ரவரி 9) நண்பகல் நிலவரப்படி புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சிங்கப்பூரில் இன்றுவரை மொத்தம் 59,732 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று விடுதிகளிலோ, உள்ளூர் சமூகத்திலோ புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 10 பேர் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். எஞ்சிய ஒருவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சிப்பந்தி.

அவர் வெளிநாட்டுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற விமானத்தில் சென்றாலும், அந்த நாட்டில் அவர் விமானத்திலிருந்து இறங்கவில்லை. அதே விமானத்தில் அவர் சிங்கப்பூருக்குத் திரும்பியவர். இங்கு வந்த சில நாட்களில் அவருக்கு தொற்று அறிகுறிகள் தென்பட்டன.

நேற்று உள்ளூர் சமூகத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 2 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவர்களில் ஒருவர் 30 வயதான இந்திய நாட்டவர். அவர் ஜனவரி 27ஆம் தேதி ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் அந்தப் பொறியாளர் ஸ்டேஷன் சாட்காம் எனும் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தமது வேலை நிமித்தம் அவர் கப்பல்களில் ஏற வேண்டிய சூழல் நிலவுகிறது.

ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்பதால் அவர் ஜனவரி 13 முதல் 24ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

ஜனவரி 29ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட ஆர்ஆர்டி கொவிட்-19 பரிசோதனைகளில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

கடந்த வியாழக்கிழமை அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட சில வாரங்களுக்குப் பிறகே நோயெதிர்ப்புத் திறன் உடலில் உருவாகும் என்ற நிலையில், தடுப்பூசியால் அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று அமைச்சு தெளிவுபடுத்தியது.

நேற்று உள்ளூர் சமூகத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட மற்றொருவர் 49 வயது பேருந்து ஓட்டுநர். சாங்கி விமான நிலையத்திலிருந்து தனிமைப்படுத்தல் வளாகங்களுக்கு ஆள்களை ஏற்றிச் செல்லும் பேருந்தின் ஓட்டுநராக இருக்கிறார் அவர். ஒவ்வொரு பயணத்துக்குப் பிறகும் அவரது பேருந்தில் கிருமி நீக்கம் செய்யப்படுவதாக அமைச்சு தெரிவித்தது.

நேற்று வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இங்கு மொத்தம் 59,469 பேர் முற்றிலும் குணமடைந்து இருக்கிறார்கள். 44 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார்கள்.

164 பேர் சமூகப் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொவிட்-19 நோயினால் இதுவரை மொத்தம் 29 பேர் மரணமடைந்துவிட்டனர். அந்த நோய்த்தொற்று இருந்தாலும் இதர காரணங்களால் மாண்டவர்கள் 15 பேர்.

உலக அளவில் இதுவரை 106 மில்லியன் மக்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2.3 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!