உயர்நிலை மாணவர்கள் மனஉளைச்சல் அகல மனநலப் பாடம் கைகொடுக்கிறது

உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­கள் மனச்­சோர்வு, மன­உ­ளைச்­சல் போன்­ற­வற்­றின் அறி­கு­றி­க­ளை அறிந்து அவற்­றைப் போக்­கு­வ­தற்­கான உத­வி­க­ளைப் பெறு­வ­தற்கு மன­நல பாடப் போதனை உத­வு­கிறது.

புதுப்­பிக்­கப்­பட்ட அறநெறி மற்­றும் குடி­யு­ரிமை பாடத்­திட்­டத்­தில் மன­ந­லக் கல்வி சேர்க்­கப்­பட்டு இருக்­கிறது. அது இந்த ஆண்­டில் இருந்து உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­க­ளுக்­குப் போதிக்­கப்­பட்டு வரு­கிறது.

சக­ மா­ண­வர்­கள் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் ஆத­ரவு வழங்­கிக்­கொள்­வ­தில் அந்­தப் பாடத்­திட்­டம் அதிக கவ­னம் செலுத்­து­கிறது.

கல்வி அமைச்­சின் வர­வு­செ­ல­வுத் திட்­டம் பற்றி சென்ற ஆண்டு நாடா­ளு­மன்­றத்­தில் நடந்த விவா­தங்­க­ளின்­போது மன­ந­லப் பாடப் போதனை திட்­டங்­கள் பற்றி அறி­விக்­கப்­பட்­டன.

சிராங்­கூன் உயர்­நி­லைப் பள்ளி­யில் அந்­தப் பாடப் போத­னையை நேரே கண்­டறிவதற்­காக நேற்று ஊட­கங்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டது.

பாடச்சுமை, எதிர்­ம­றை­யான எண்­ணங்­கள் போன்ற பல்­வேறு மன­நெ­ருக்­கு­தல்­களை எதிர்­கொள்­ளும் பதின்ம வயது மாணவ, மாண­வி­க­ளைக் காட்­டும் காணொளி­களை வகுப்­பின்­போது மாண­வர்­கள் பார்த்­தார்­கள்.

அவற்­றைச் சமா­ளிப்­ப­தற்­கான பல்­வேறு உத்­தி­க­ளை­யும் அவர்­கள் கற்­றுக்­கொண்­டார்­கள்.

மன­உ­ளைச்­சலை எப்­படி அடை­யா­ளம் காண­லாம் என்­ப­தை­யும் அத்­த­கைய சூழல்­களில் எப்­படி உதவி நாட முடி­யும் என்­ப­தை­யும் ‘பேட்­லெட்’ என்ற மின்­னி­லக்­கச் செய­லி­யைப் பயன்­ப­டுத்தி அவர்­கள் தெரிந்­து­கொண்­டார்­கள்.

சக­ மா­ண­வர் உத­வித்­திட்­டப் பயிற்­சியை சிராங்­கூன் உயர்­நி­லைப் பள்ளி சென்ற ஆண்டு தொடங்­கி­யது. இப்­போது அந்­தப் பள்­ளிக்­கூ­டம் முழு­வ­தும் 26 சக­ மா­ண­வர் ஆத­ரவு தலை­வர்­களாக இருக்­கி­றார்­கள். அடுத்த ஆண்­டில் வகுப்­புக்கு இரு­வர் என்ற அள­வுக்கு அவர்­களின் எண்­ணிக்கையை அதி­க­ரிக்­கத் திட்­டம் உள்­ளது.

கல்வித் துணை அமைச்­சர் சுன் சூலிங் நேற்­றைய பாடப் போதனையைக் கண்­கா­ணித்­தார்.

பள்­ளிக்­கூ­டங்­களில் மன­ந­ல­னில் ஒரு­மித்த கவ­னம் செலுத்­து­வது அதி­க­ரித்து வரு­கிறது. கொவிட்-19 சூழ­லில் இது பொருத்­த­மா­ன­தாக இருக்­கிறது என்றார் அமைச்­சர்.

மன­உ­ளைச்­சல் போன்­றவை உண்­மை­யி­லேயே வழக்­க­மா­ன­வை­தான் என்­பதை உணர்ந்­து­கொண்டு அந்­தப் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் நண்­பர்­கள், ஆசி­ரி­யர்­கள், ஆலோ­சகர்க­ளு­டன் தாங்­கள் பேச­மு­டி­யும் என்­பதை அறநெறி மற்­றும் குடி­யுரிமை பாடத்­திட்­டத்­தின் மூலம் மாண­வர்­கள் தெரிந்­து­கொள்­கி­றார்­கள் என்­றும் திருவாட்டி சுன் சூலிங் குறிப்பிட்டார்.

இந்­தப் பாடத்­திட்ட ஆசி­ரி­யர்­கள் சிறப்புப் பயிற்சி பெற்­ற­வர்­கள். அவர்­கள் மாண­வர்­க­ளின் நண்­பர்­க­ளா­கச் செயல்­பட்டு அனு­ப­வங்­களைப் பகிர்ந்­து­கொள்­ளும்­படி மாண­வர்­க­ளுக்கு ஊக்­க­மூட்­டு­கிறார்­கள் என்று கூறிய அமைச்­சர், தான் இதைப் பாராட்­டு­வ­தா­கத் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!