தந்தையின் ஊக்குவிப்பு, வழிகாட்டுதலில் மேடை நாடகப் பாதையில் நஸீமா பயணம்

பாலி­வுட் சார­மும் இந்­திய பண்­பாட்டு அடை­யா­ளங்­களும் நிறைந்த ஒரு படைப்பை தமது ‘ஏ’ நிலை மேடை நாட­கத் தேர்­வுக்­கா­கப் படைத்­தி­ருக்­கி­றார் தெம்­ப­னிஸ்-மெரி­டி­யன் தொடக்­கக் கல்­லூரி மாணவி நஸீமா.

இவர் உள்­ளூர் மேடை நாட கக் கலை­ஞர் திரு அஹ­மது அலி கானின் மகள். சிறு வய­தி­லி­ருந்தே மேடை நாட­கம் என்று கேட்­டாலே அது தம் தந்­தை­தான் என்று நினைத்து வந்த நஸீ­மா­விற்­குத் தொடக்­கக் கல்­லூரி சென்­ற­தும் மேடை நாட­கப் பாடத்­தைப் பயில வேண்­டும் என்ற ஆசை தோன்றியது. மேடை நாட­கத்­தைப் பற்றி கற்க கற்க, அதன் மீதான ஆர்­வம் பெரு­கி­யது. ‘ஏ’ நிலை தேர்­விற்­காக அவ­ரது சொந்­தப் படைப்­பில் ஒரு நாட­கத்தை எழுதி மேடை­யேற்ற வேண்­டி­யி­ருந்­தது.

இதற்­காக ஆராய்ச்­சி­யில் தொடங்கி ஒத்­தி­கை­கள் வரை எண்­ணற்ற மணி­நே­ரங்­களை அர்ப்­ப­ணித்து முழு­ம­ன­து­டன் செயல்­பட்­டார். ஆனால், கடந்த ஆண்டு கொவிட்-19 சூழ­லின்­போது இணை­யம் வழி கற்­றல் தொடங்­கி­யது.

மேடை நாட­கத்தை இணை­யம் வழி கற்­பது புது­மை­யா­னது மட்­டு­மல்ல சவால் மிகுந்த ஒன்­றா­க­வும் இருந்­தது. ஆசி­ரி­யர்­களை நேர­டி­யா­கப் பார்த்து பேச முடி­யாத நிலை. நண்­பர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­ட­வும் முடி­ய­வில்லை. அப்­ப­டிப்­பட்ட ஒரு சூழ­லில் நஸீ­மாவை உற்­சா­கப்­ப­டுத்­திக் கொண்டே இருந்­தார் அவ­ரது தந்தை திரு அலி கான்.

‘ஏ’ நிலை தேர்வு நெருங்­கி­ய­போது நஸீ­மா­விற்­குப் பதற்­றம் அதி­க­ரிக்க தொடங்­கி­யது. மன­த­ள­வில் சோர்­வ­டை­யும்­போ­தெல்­லாம் தமது தந்­தை­யி­டம் அரை மணி நேரம் பேசி­னால் போதும், சோர்வு களைந்து புத்­து­ணர்ச்சி பிறந்­து­வி­டும் என்று அவர் கூறி­னார்.

மேடை நாடக நடிப்பு வச­னங்­களை மன­னம் செய்­வ­தில் நஸீமா வுக்கு சிர­மம் இருந்­தது. ஆனால் வச­னங்­களை மனப்­பா­டம் செய்­வ­தில் கைதேர்ந்த தந்­தை­யின் உதவி­யோடு அந்­தச் சவா­லைக் கடந்து வந்­தார்.

பாலி­வுட் திரைப்­ப­டங்­களை மைய­மா­கக் கொண்டு ‘பெற்­றோ­ரால் நிச்­ச­யிக்­கப்­பட்ட திரு­ம­ணங்­கள்’ என்­பதை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு நாட­கத்தை இயற்­றி­னா­ராம்.

தமது குடும்­பத்­தில் அது போன்ற திரு­ம­ணங்­கள் சாதா­ர­ணம், ஆனால் பிற இனத்­த­வ­ருக்கு இது அவ்­வ­ளவு பரிச்­ச­ய­மில்­லாத ஒன்று என்­பதை உணர்த்த நஸீமா இதைப் பற்­றிய மேடை நாட­கம் ஒன்­றைப் படைத்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!