உயர்தரம் 3 தமிழ்மொழிப் பாடம் பயில ஆர்வம் இருந்தால் போதும்

2014லிருந்து இந்த ஆண்டு வரை மொத்­தம் மூன்று மாண­வர்­கள் மட்­டுமே உயர்­தரம் மூன்று தமிழ் மொழி மற்­றும் இலக்­கிய பாடத்தை (H3 TLL) எடுத்துப் பயின்றுள்ளனர் என்று கல்வி அமைச்சின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தற்­போது இப்­பா­டம் இரண்டு தொடக்­கல்­லூ­ரி­களில் மட்­டுமே வழங்­க­ப்ப­டு­கிறது. இந்த ஆண்டு இந்தப் பாடத்தை எடுத்து பயி­லும் ஒரே மாணவி, ஆண்­டர்­சன் -சிராங்­கூன் தொடக்­கக்­ கல்­லூரியைச் சேர்ந்த நந்­தினி.

தொடக்­கக்­கல்­லூ­ரி­யில் உயர்­தரம் 2 தமிழ் இலக்­கியப் பாடத்தை எடுத்த இவர், தொடக்­கக்­கல்­லூரி இரண்­டாம் நிலைக்குச் சென்­ற­போது உயர்தரம் (H3) தமிழ்மொழி மற்­றும் இலக்­கிய பாடத்தைத் தனிப் பாட­மா­க­வும் எடுத்து பயின்று வரு­கி­றார். எதிர்­கா­லத்­தில் தமிழ் ஆசி­ரி­ய­ரா­க­வும் தமிழ் எழுத்­தா­ள­ரா­க­வும் ஆக­வேண்­டும் என்ற இலட்­சி­யம் இவருக்கு உண்டு.

“தொடக்­கக் கல்­லூ­ரிக்­குச் செல்­லும் பெரும்­பா­லான மாண­வர்­கள் உயர்­நி­லை­ப் பள்ளியில் உயர்­கல்வி எடுத்­த­தால் தொடக்­கக்­கல்­லூ­ரி­யில் தமிழ்ப் பாடத்தைத் தேர்­வு­செய்­வ­தில்லை.

“பல ஆண்­டு­க­ளாக நிலைமை இப்­படி இருந்­தா­லும் தமிழ் விருப்­பப்­பாடத் திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட கடந்த சில ஆண்­டு­களில் உயர்தர தமிழ்ப் பாடங்­களை முன்­வந்து எடுக்­கும் மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை மெல்ல உயர்ந்து வரு­கிறது,” என்­றார் ஆண்­டர்­சன்- சிராங்­கூன் தொடக்­கக்­கல்­லூரி தமிழ் ஆசி­ரி­யர் திரு வீர­முத்து கணே­சன்.

தமிழ்மொழி விருப்­பப்­பா­டம் பற்­றிய தக­வல்­கள்:

தமிழ்மொழி­யி­லும் இலக்­கி­யத்­தி­லும் ஆர்­வ­முள்ள மாண­வர்

களுக்கு இந்த தமிழ்­மொழி விருப்பப்­பா­டத் திட்­டம் ஆண்­டர்­சன் - சிராங்­கூன் தொடக்­கக்­கல்­லூரி, தேசிய தொடக்­கக்­கல்­லூரி ஆகிய இரண்டு கல்­லூ­ரி­களில் தற்­போது வழங்­கப்­படு­கிறது.

தகுதி பெறும் மாண­வர்­கள்

ஜிசிஇ சாதா­ரணநிலை தேர்­வில் பின்­வ­ரும் தரங்­களில் ஏதே­னும் ஒன்­றைப் பெற்ற மாண­வர்­கள்: உயர் தமி­ழில் ≥ தரம் B3, உயர் தமி­ழில் ≥ தரம் B4 மற்­றும் தமிழ் இலக்­கி­யத்­தில் ≥ தரம் B3, தமிழ்ப் பாடத்­தில் தரம் ≥ A2, சாதா­ரணநிலை தேர்வு முடித்த மாண­வர்­கள், கூட்­டுச் சேர்க்கை நட­வ­டிக்கை வழி­யா­கவோ நேர­டிப் பள்ளி நுழை­வுச் சேர்க்கை வழி­யா­கவோ தமிழ் மொழி விருப்­பப்­பா­டம் வழங்­கும் பள்­ளி­க­ளுக்கு விண்­ணப்­பிக்­க­லாம்.

அந்­தந்த பள்­ளி­களில் சேர 2 போனஸ் புள்­ளி­க­ளுக்கு அவர்­கள் தகுதி பெறு­வார்­கள்.

தமிழ்மொழி விருப்­பப்­ பாடத்தைத் தேர்வு செய்­யும் மாண­வர்­கள் உயர்தரம் 2 தமிழ் மொழி மற்­றும் இலக்­கிய பாடத்தைக் கட்­டா­ய­மாக எடுத்து பயி­ல­வேண்­டும்.

மாண­வர்­க­ளுக்கு உயர் தரம் 3 தமிழ் மொழி மற்­றும் இலக்­கியப் பாடத்­தை­யும் பயில வாய்ப்பு தரப்­படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!