மூத்தோருக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

தமது சிறு வயதில் அம்மை நோய்க்­கான தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட 78 வயது திரு டான் ஹோங் சான், அன்­றி­லி­ருந்து நோய்த் தொற்­றி­லி­ருந்­தும் நோய்­க­ளி­லி­ருந்­தும் தடுப்­பூ­சி­கள் நம்­மைப் பாது­காக்­கின்­றன என்ற வலு­வான நம்­பிக்­கையை வளர்த்­துக் கொண்­டார்.

அந்த நம்­பிக்­கை­தான், நேற்று செஞ்சா-கேஷ்யூ சமூக மன்­றத்­தில் இடம்­பெற்ற மூத்­தோ­ருக்­கான தடுப்­பூசி போடும் நிகழ்­வுக்கு அவ­ரைத் துடிப்­பு­டன் அழைத்து வந்­தது.

“தடுப்­பூசி போட்ட பிறகு இத­யத் துடிப்பு சற்று அதி­க­மா­னது. ஆனால் சில நிமி­டங்­களில் அது வழக்­கத்­துக்­குத் திரும்பி விட்­டது. கொள்­ளை­நோ­யி­லி­ருந்து நம்­மைப் பாது­காத்­துக்­கொள்ள தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது முக்­கி­யம் என நான் கரு­து­கி­றேன்,” என்­றார் ஓய்வு பெற்ற அந்த முதி­ய­வர்.

சிங்­கப்­பூ­ரில் 70 வயது மற்றும் அதற்கு மேற்­பட்ட வய­து­டை­ய­வருக்கு தடுப்­பூசி போடும் திட்­டம் நேற்று தொடங்­கி­யது.

மூத்­தோ­ருக்­கான தடுப்­பூசி போடும் முதற்­கட்ட நிகழ்வு ஜன­வரி 27ஆம் தேதி தஞ்­சோங் பகார், அங் மோ கியோ ஆகிய வட்­டா­ரங்­களில் தொடங்­கப்­பட்­டது. அதில் 5,000க்கு மேற்­பட்ட முதி­யோ­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டது.

ஏற்­கெ­னவே வேறு நோய்­க­ளின் பாதிப்புள்ள மூத்­தோர் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டால், அவர்­க­ளின் நோய் மேலும் தீவி­ர­ம­டைந்து அத­னால் பல சிக்­கல்­கள் ஏற்­படும் என்­ப­தால், அந்­தப் பிரி­வி­ன­ருக்கு தடுப்­பூசி போடு­வதில் முன்­னு­ரிமை அளிக்­கப்­பட்­டுள்­ளது.

இன்று புக்­கிட் தீமா, மரின் பரேட், தாமான் ஜூரோங் ஆகிய வட்­டா­ரங்­களில் மூத்­தோ­ருக்­கான தடுப்­பூசி போடு­தல் தொட­ரும்.

அவற்­று­டன் சேர்த்து சிங்­கப்­பூரின் மொத்­தம் 56 தடுப்­பூசி போடும் நிலை­யங்­கள் உள்­ளன. அவற்­றில் குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் உள்ள 14 நிலை­யங்­கள், 20 பல­துறை மருந்­த­கங்­கள், 22 பொதுச் சுகா­தார தயார்­நிலை மருந்­த­கங்­கள் ஆகி­யவை அடங்­கும்.

அடுத்த மாத நடுப்­ப­கு­திக்­குள் 31 தடுப்­பூசி மையங்­கள் செயல்­படும் என்­றும் அவை ஒவ்­வொரு வட்டாரத்திலும் இருக்­கும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மொத்­தத்­தில், கிட்­டத்­தட்ட 40 தடுப்­பூசி மையங்­கள் செயல்­படும். அவை ஒவ்­வொன்­றும் நாள்­தோ­றும் 2,000 தடுப்­பூசி வரை போடும் ஆற்­றல் பெற்­ற­தாக இருக்­கும்.

அனைத்து மூத்­தோ­ருக்­கும் மார்ச் மாத நடுப்­ப­கு­திக்­குள் தடுப்­பூசி போடப்­பட்­டு­வி­டும். அடுத்த மூன்று வாரங்­க­ளுக்­குள் 70 வயது மற்றும் அதற்கு மேற்­பட்ட வய­து­டை­ய­வர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள விண்­ணப்­பிக்­கும் அழைப்­புக் கடி­தங்­கள் அனுப்­பப்­படும்.

பல­துறை மருந்­த­கங்­கள் அல்­லது தடுப்­பூசி மையங்­க­ளுக்கு அரு­கில் வசிக்­கும் மூத்­தோ­ருக்கு முத­லில் அழைப்­புக் கடி­தங்­கள் அனுப்பி வைக்­கப்­படும்.

60 வயது முதல் 69 வய­து­டை­ய­வர்­க­ளுக்­கான தடுப்­பூசி போடு­தல் மார்ச் மாத இறு­தி­யில் தொடங்­கும். அவர்­கள் தங்­கள் அழைப்­புக் கடி­தங்­களை மார்ச் நடுப்­ப­குதி வாக்­கில் பெறு­வார்­கள்.

செஞ்சா-கேஷ்யூ சமூக மன்­றத்­தில் செயல்­படும் தடுப்­பூசி நிலை­யத்தை தாம்­சன் மருத்­து­வக் குழு­மம் ஏற்று நடத்­து­கிறது. அக்­கு­ழு­மம் பீஷான் சமூக மன்­றத்­தில் மற்­றொரு நிலை­யத்தை நடத்­து­கிறது.

செஞ்சா-கேஷ்யூ சமூக மன்­றத்­தில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட மூத்­தோர், தடுப்­பூசி பெற்­றுக்­கொண்ட பிறகு தங்­க­ளுக்கு எவ்­விதப் பிரச்­சி­னை­யும் ஏற்­ப­ட­வில்லை என்று தெரி­வித்­த­னர்.

அவர்­களில் ஒரு­வ­ரான 78 வயது திரு செங் சூன் கியாங், “ஊசி போட்­டுக்­கொள்­ளும்­போது வலி ஏதும் இல்லை. அதன் பிறகு உட­லில் எவ்­விதக் கோளா­றும் ஏற்­ப­ட­வில்லை. இரண்­டா­வது முறை தடுப்­பூசி போட்டவு­டன் கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து முழு­மை­யான பாது­காப்பு எனக்­குக் கிடைத்­து­வி­டும்,” என்­றார்.

இம்­மா­தம் 18ஆம் தேதி வரை 250,000 பேர் தங்­க­ளது முதல் தடுப்­பூ­சி­யைப் போட்டுக்­கொண்­ட­னர்.

செய்தி: ஷபானா பேகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!