ஓங்: சிங்கப்பூருக்குள் நுழைய தடுப்பூசி ஒரு தகுதியாகாது

சிங்­கப்­பூ­ருக்­குள் பய­ணி­கள் வரு­வ­தற்கு கொவிட்-19 தடுப்­பூசி போட்­டி­ருக்க வேண்­டும் என்ற தகு­தியை அமல்­ப­டுத்­தும் திட்­டம் இல்லை என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

“அதற்கு மாறாக, சோத­னை­க­ளா­லும் வீட்­டில் தங்­கி­யி­ருக்­கும் உத்­த­ர­வு­களா­லும் பய­ணி­கள் கிரு­மி­த்தொற்றை நமது சமூ­கங்­க­ளுக்­குள் கொண்டு வரா­மல் தொடர்ந்து கண்­கா­ணிப்­போம்.

“தடுப்­பூசி போடாத சில பயணி­கள் கடந்த ஆண்­டில் சிங்­கப்­பூ­ருக்கு வர அனு­ம­திக்­கப்­பட்­டார்­கள்,” என்­றும் திரு ஓங் விவ­ரித்­தார்.

“தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்கு எல்­லைக் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­க­ளைத் தளர்த்­து­வது பற்றி இப்­போ­தைக்கு முடி­வெ­டுக்க இய­லாது. அத்­து­டன் வெவ்­வேறு தடுப்­பூ­சி­க­ளுக்கு வெவ்­வேறு கட்­டுப்­பாட்­டுத் தளர்­வு­களை அறி­விக்­க­வும் இய­லாது.

“எந்­தத் தடுப்­பூ­சி­யால் ஒரு தனி­ந­பர் மற்­ற­வர்­க­ளுக்­குக் கிரு­மி­யைப் பரப்­பும் வாய்ப்பு குறைவு என்று சுகா­தார அமைப்­பு­கள் உறுதி­செய்ய, போதிய அறி­வி­யல் தரவுச் சான்­று­கள் இல்லை என்­பதே அதற்­குக் கார­ணம்.

“இருந்­தா­லும், நாடு­க­ளுக்கு இடை­யில் தடுப்­பூசி சான்­ற­ளிப்பை பரஸ்­பர முறை­யில் அங்­கீ­க­ரிக்­கும் முறை பற்றி ஆரா­யப்­படும். இதற்­கி­டையே, அழிக்க முடி­யாத, எளி­தில் சரி­பார்க்­கக்­கூ­டிய மின்­னி­லக்க தடுப்­பூசி சான்­றி­தழ் திட்­டத்தை சிங்­கப்­பூர் அமல்­ப­டுத்தி உள்­ளது,” என்­றும் அமைச்­சர் ஓங் விளக்­கி­னார்.

“இத்­த­கைய சான்­றி­தழ் அளிக்­கும் பரஸ்­பர அங்­கீ­கா­ரத் திட்­டம் பற்றி சிங்­கப்­பூர், அனைத்­து­லக விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைப்­பு­ட­னும் பல்­வேறு நாடு­க­ளு­ட­னும் பேச்­சு­வார்த்­தை­கள் நடத்தி வரு­கிறது.

“இத்­த­கைய பேச்­சு­வார்த்­தை­களும் ஆலோ­ச­னை­களும் நிறைவு­பெற சில காலம் பிடிக்­கும்,” என்றார் திரு ஓங்.

இந்­தப் புதிய மின்­னி­லக்­கச் சான்­றி­தழ் முறை ‘ஹெல்த்­செர்ட்ஸ்’ முறை­யைச் சார்ந்­துள்­ளது. அர­சாங்க தொழில்­நுட்ப அமைப்­பும் சுகா­தார அமைச்­சும் இணைந்து கூட்­டாக கொவிட்-19 சோதனை முடி­வு­க­ளைத் தெரி­விக்­கும் மின்­னி­லக்­கச் சான்­றி­தழ் அளிக்­கும் கட்­ட­மைப்பை உரு­வாக்­கி­யுள்­ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!