300 பேரை ஆட்குறைப்பு செய்யும் எக்ஸ்ஸோன்மோபில்

ஆட்குறைப்பு செய்யப்படும் அனைவரும் நிபுணர்கள், மேலாளர்கள்

'எக்­ஸ்ஸோன்மோபில்' சிங்­கப்­பூ­ரில் இவ்­வாண்டு இறு­திக்­குள் 300 ஊழி­யர்­க­ளைக் குறைக்­கத் திட்­ட­மி­டு­கிறது. சிங்­கப்­பூ­ரில் அந்த நிறு­வ­னத்­தின் ஆகப் பெரிய சுத்­தி­க­ரிப்பு ஆலை இருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கொவிட்-19 கொள்­ளை­நோய் கார­ண­மாக எதிர்­பா­ராத சந்தை சூழல்­க­ளால் இந்த முடிவு எடுக்­கப்­ப­டு­வ­தாக அந்த நிறு­வ­னம் நேற்று தெரி­வித்­தது. 300 ஊழி­யர்­கள் என்­பது இங்கு அந்த நிறு­வ­னத்­தில் பணி­பு­ரி­வோ­ரில் கிட்­டத்­தட்ட 7%.

இந்த ஆட்­கு­றைப்­பால் பாதிக்­கப்­ப­டு­வோர் அனை­வ­ரும் நிபு­ணர்­கள் மற்­றும் மேலா­ளர்­கள். அவர்­கள் அனை­வ­ருக்­கும் இம்­மா­தம் 8 முதல் 12ஆம் தேதிக்­குள் தக­வல் தெரி­விக்­கப்­படும் என எக்­ஸ்ஸோன்மோபில் சிங்­கப்­பூர் ஊழி­யர்­கள் சங்­கத்­தின் தலை­வர் சியூ பூன் ஜின் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­தார்.

ஆட்­கு­றைப்­புக்கு உட்­படும் ஊழி­யர்­கள் அடுத்த மாதம் 30ஆம் தேதி வரை பணி­யில் இருப்­பர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

அடுத்த ஆண்டு இறு­திக்­குள் அனைத்­து­லக அள­வில் 15 விழுக்­காட்டுப் பணி­யா­ளர்­களை ஆட்­

கு­றைப்பு செய்ய இருப்­ப­தா­கக் கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதத்­தில் எக்­ஸ்ஸோன்மோபில் அறி­வித்­தி­ருந்­த­தைத் தொடர்ந்து சிங்­கப்­பூ­ரில் இந்த ஆட்­கு­றைப்பு இடம்­பெ­று­கிறது.

சிங்­கப்­பூ­ரில் அமைந்­துள்ள எக்­ஸ்ஸோன்மோபில் நிறு­வ­னத்­தின் ஆகப் பெரிய ஒருங்­கி­ணைந்த பெட்­ரோ­-ர­சா­யன வளா­கத்­தில் 4,000க்கும் அதி­க­மா­னோர் பணி­பு­ரி­கின்­ற­னர். அந்த நிறு­வ­னம் நாள் ஒன்­றுக்கு 592,000 பீப்­பாய் எண்­ணெய்யை சுத்­தி­க­ரிக்க முடி­யும்.

பெரிய அள­வி­லான உற்­பத்தி வளா­கம், திறன்­மிகு ஊழி­ய­ரணி இவற்­று­டன் தங்­க­ளது நிறு­வ­னத்­தின் உத்­தி­பூர்வ இருப்­பி­ட­மாக சிங்­கப்­பூர் தொடர்ந்து இருப்­பதாக எக்­ஸ்ஸோன்மோபிலின் அறிக்கை குறிப்­பிட்­டது.

பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­க­ளுக்கு ஆலோ­சனை, வேறு வேலை­யில் சேர உதவி போன்ற ஆத­ரவை எக்­ஸ்ஸோன்மோபில் வழங்­கு­வ­தாக அந்த நிறுவனத்தின் பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார்.

மனி­த­வள அமைச்சு, சங்­கத் தலை­வர்­கள் ஆகி­யோ­ரி­டம் அந்த நிறு­வ­னம் இந்த அறி­விப்­புக்கு முன்­னரே கலந்து ஆலோ­சித்­த­தை­யும் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­க­ளுக்கு வேறு நிறு­வ­னங்­களில் வேலை ஏற்­பா­டு­கள் செய்­வ­தன் தொடர்­பில் அந்த நிறு­வ­னத்­து­ட­னும் இதர அர­சாங்க முக­வை­க­ளு­ட­னும் பொரு­ளி­யல் மேம்­பாட்டு வாரி­யம் இணைந்து செயல்­ப­டு­வ­தாக வாரி­யத்­தின் ஆற்­றல் மற்­றும் வளங்­கள் துறை­யின் தலைவரான திரு லிம் வே லென் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய வெளி­நாட்டு முத­லீட்டு நிறு­வ­னங்­களில் ஒன்­றான எக்­ஸ்ஸோன் மோபில் இங்கு $25 பில்­லி­ய­னுக்­கும் அதி­க­ நிலை­யான சொத்து களில் முத­லீடு செய்­தி­ருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!