மின்னிலக்க நூலகப் பயன்பாடு கூடியது; நூல்களை இரவல் பெற்றது குறைந்தது

கொவிட்-19 நோய்ப் பர­வல் சூழ­லால் கடந்த ஆண்­டில் மின்­னி­லக்க நூல­கப் பயன்­பாடு அதி­க­ரித்­தது. அதே வேளை­யில், நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டம் நடை­மு­றை­யில் இருந்­த­போது நூல­கங்­கள் மூடப்­பட்­ட­தால் நூல்­களை இர­வல் பெற்­றது குறைந்­தது.

கடந்த 2019ஆம் ஆண்­டில் 40.5 மில்­லி­ய­னாக இருந்த இர­வல் எண்­ணிக்கை, 2020ஆம் ஆண்­டில் 29.2 மில்­லி­ய­னா­கக் குறைந்­தது.

தேசிய நூலக வாரி­யத்­தின் மின்­னி­லக்க வளங்­க­ளைப் பயன்­படுத்­திய உள்­ளூர்­வா­சி­க­ளின் எண்­ணிக்கை 2019ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் சென்ற ஆண்­டில் 46.5% கூடி­ய­தாக வாரி­யம் தனது ஆண்டு அ­றிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

மின்­னி­லக்க முறை­யில் இர­வல் பெறுவது 26.2% அதி­க­ரித்­தது. நூலக வாரி­யச் செயலி பதி­வி­றக்­கம் ஒட்­டு­மொத்த அள­வில் 36.5% கூடி­யது. அதே­போல, அதன் மின்­னி­லக்­கத் தர­வு­கள் பயன்­பா­டும் 121% அதி­க­ரித்­தது.

பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளு­டன் கடந்த ஜூலை­யில் நூல­கங்­கள் மீண்­டும் திறக்­கப்­பட்­ட­தும் புத்­தக ஆர்­வ­லர்­கள் அங்கு குவி­யத் தொடங்­கி­னர். ஜூலை முதல் டிசம்­பர் வரை­யி­லான கால­கட்­டத்­தில் அவர்­கள் நூல­கங்­களுக்கு வந்து சென்­றது 88.9% அதி­க­ரித்­தது. அதே­போல, அக்­கா­ல­கட்­டத்­தில் நூல்­கள் இர­வல் பெறப்­பட்­ட­தும் 14.2% கூடி­யது.

ஒட்­டு­மொத்­தத்­தில், சென்ற ஆண்­டில் பொது நூல­கங்­க­ளுக்­கும் சிங்­கப்­பூர் தேசிய ஆவ­ணக் காப்­ப­கம் போன்ற நூலக வாரி­யத்­தின் மற்ற நிலை­யங்­க­ளுக்­கும் ஒன்­பது மில்­லி­யன் பேர் வந்து சென்­ற­னர். முந்­திய 2019ஆம் ஆண்­டில் இந்த எண்­ணிக்கை 26.7 மில்­லி­ய­னாக இருந்­தது.

கடந்த ஆண்டு அதிக முறை இர­வல் போன நூல்­க­ளின் பட்­டி­ய­லில் முதல் ஐந்து இடங்­களில் நான்கு இடங்­களை 'ஹாரி பாட்­டர்' தொகுப்புகளே பிடித்­தன. மின்­நூல் களைப் பொறுத்­த­மட்­டில், மிஷெல் ஒபா­மா­வின் '2018 மெம்வா பிக்­க­மிங்' புத்தகம் அதிக முறை இரவல் போனது.

தமிழில் 3,000க்கும் மேற்பட்ட மின்நூல்கள் உள்ளன.

சென்ற ஆண்­டில், நூலக வாரி­யம் தனது முத­லா­வது நூல் இர­வல் சாத­னத்தை சுவா சூ காங்­கில் நிறு­வி­யது. அந்த நூல் இர­வல் சாத­னம் வாயி­லாக கடந்த ஜூலை முதல் இவ்­வாண்டு ஜன­வரி வரை 14,600 இர­வல், இர­வல் நீட்­டிப்பு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

"கொரோனா பர­வ­லால் ஏற்­பட்ட இடை­யூ­று­க­ளுக்கு மத்­தி­யில் நூல் ஆர்­வ­லர்­க­ளுக்­குச் சிறந்த சேவை­யாற்­றும் நோக்­கில், கற்­றல், வாசித்­தல் மற்­றும் திறன் மேம்­பாட்­டிற்கு வகை­செய்­யும் வித­மாக பல்­வேறு மின்­னி­லக்க வச­தி­களை அறி­முகப்­படுத்­தி­னோம்," என்று நூலக வாரி­யத்­தின் தலைமை நிர்­வாகி இங் செர் போங் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!