பங்குனி உத்திர விழாவில் கட்டுப்பாடுகள், பக்திப் பெருக்கு, அமைதி, மனநிறைவு

எஸ்.வெங்­க­டே­‌ஷ்­வ­ரன்

காவடி ஆட்­டம், மேள தாள முழக்கம் என்று ஆண்­டு­தோ­றும் கோலா­க­ல­மாக நடந்­தே­றும் பங்குனி உத்­தி­ரத் திரு­விழா இவ்­வாண்டு கொவிட்-19 பாது­காப்பு விதி­மு­றை­களுக்கு இணங்க அமை­தி­யான, பாது­காப்­பான முறை­யில் நடத்­தப்­பட்­டது.

ஈசூன் தொழிற்­பேட்­டை­யில் அமைந்­துள்ள புனிதமரம் ஸ்ரீ பால­சுப்­பி­ர­ம­ணி­யர் கோயி­லில் பிர­தானமாக நடந்­தே­றும் திரு­விழாக் கொண்­டாட்­டங்­கள் கடந்த ஆண்டை காட்­டி­லும் இவ்­வாண்டு நல்ல முன்­னேற்­றங்­க­ளைக் கண்­டிருந்தன.

கடந்த ஆண்­டின் தொடக்­கத்­தில் கிரு­மித்­தொற்று பர­வ­லாக இருந்­த­தால் பக்­தர்­கள் கோயி­லுக்குள் நுழைய அனு­மதிக்கப்பட வில்லை.

கோயில் வாச­லில் மூல­வரைத் தரி­சித்து பால் பொட்­ட­லங்­கள் மட்டுமே வாங்கி, வழங்க முடிந்­தது.

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்­த­ளங்­க­ளின் மூலம் பல பக்தர்­கள் விழா­வில் மெய்­நி­க­ராக இணைந்­தி­ருந்­த­னர்.

கிரு­மித்­தொற்று சூழல் சீராகி வரும் இப்போ­தைய நிலை­யில் பால் குடம் எடுப்­பது, கோயி­லுக்­குள் சென்று வழி­ப­டு­வது, பால் அபிஷேகம் செய்­வது, கோயில் பிர­சா­தம் பெறு­வது போன்ற ஏற்­பா­டு­கள் இடம்பெற்று இருந்தன.

சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம் சிறப்பு விருந்­தி­ன­ராகக் கலந்­து­கொண்­டார்.

போக்குவரத்து அமைச்­சர் ஓங் யி காங், செம்­ப­வாங் குழுத் தொகுதி­யின் சக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான விக்­ரம் நாயர், மரி­யம் ஜாஃபர், லிம் வீ கியாக், போ லி சான் ஆகி­யோ­ரும் திரு­வி­ழா­விற்கு வருகை புரிந்­த­னர்.

"பொது­வாக கடந்த ஆண்­டு­களில் பங்­குனி உத்திரத் திருவிழாக் கொண்­டாட்­டங்­களில் சுமார் பத்­தா­யி­ரம் பேர் பங்­கேற்­பார்­கள். ஆனால் இந்த ஆண்டு அப்­படி செய்ய முடி­யாது. இருந்­தா­லும் நிர்­வாகக் குழு சிறப்­பான முயற்­சி­களை எடுத்­துள்­ள­து," என்­றார் திரு விக்­ரம்.

கொவிட்-19 தடுப்­பூ­சி­கள் மக்­களுக்குப் போடப்பட்ட பின்­னர் திரு­வி­ழாவை முன்பு போல நடத்து­வதற்­கான வாய்ப்­பு­கள் உள்­ளன என்­றும் அந்த நிலையை எட்­டு­வதற்கு எல்­லா­ரும் பங்­காற்ற வேண்­டும் என்­றும் திரு விக்­ரம் கேட்டுக் கொண்டார்.

நள்ளிரவு 12 மணி முதல் காலை 9.30 மணி வரை கிட்­டத்­தட்ட 2,500 பக்­தர்­கள் பால்­கு­டம் எடுத்­த­னர். மதி­யம் 1 மணி அள­வில் மொத்த பக்­தர்கள் வருகை எண்­ணிக்கை ஏறத்­தாழ 5,500ஆக இருந்­தது.

நேற்­றி­ரவு 9 மணி அள­வில் நிறை­வ­டைந்த திரு­வி­ழா­வில் மொத்­தம் ஏறக்­கு­றைய 7,000 பக்­தர்­கள் கலந்­து­கொண்­ட­தாக நம்பப்படுவ தாக கோயில் நிர்­வா­கம் கூறியது.

"பாது­காப்பு விதி­மு­றை­களை மீறா­மல் திரு­வி­ழா­வைச் சிறப்­பாக நிர்­வ­கிக்க பல திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­னோம்.

"கைச் சுத்­தி­கரிப்­பான், முகக்­கவசங்­கள், தொண்­டூ­ழி­யர்­களும் கோயில் ஊழி­யர்­களும் போட்­டுக்­கொள்ள கையு­றை­கள் போன்ற தேவை­யான அனைத்துப் பொருட்­களை­யும் தயார்­ப­டுத்­தி­னோம்.

"பக்­தர் கூட்­டத்தை முறை­யாக நிர்­வ­கிக்க தடை­ அரண்­களை வைத்து தெளி­வான பாதை­களை அமைத்­தோம்.

"இணை­யம் வழி பக்­தர்­களை பதி­யவைத்து வேறு­பட்ட நேரங்­களில் பக்­தர் வரு­கைக்கு ஏற்பாடு செய்தோம். எதிர்­பார்த்­த­தைப் போலவே எல்லாம் சுமூ­க­மாக நடந்­தே­றி­ன," என்­றார் கோயில் நிர்­வா­கக் குழுச் செய­லா­ளர் திரு அண்­ணா­துரை அழ­கப்­பன்.

எந்­நே­ரத்­தி­லும் கோயி­லுக்­குள் இருந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை மொத்­தம் 250 பேருக்கு உட்­பட்டு இருக்க வகை செய்ய, கோயி­லுக்கு அருகே இருந்த திட­லில் ஒரு கூடா­ரம் அமைக்­கப்­பட்­டது. இதில் பக்­தர்­கள் பதிவு செய்­வ­தற்­கும் பால் குடங்­க­ளைப் பெறு­வ­தற்­கும் வசதி­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.

கிட்­டத்­தட்ட 200 தொண்­டூ­ழி­யர்­க­ளின் உத­வி­யால் விழா சீராக நிர்­வ­கிக்­கப்­பட்­டது.

பக்­தர்­க­ளுக்கு வழி­காட்­டி­யாக இருப்­பது உட்­பட முதி­யோர், உடல் குறை­பாடு உள்ளோர், கர்ப்பிணிகள் போன்றவர்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுத்து அவர்­களின் வழி பாட்டிற்குத் தொண்­டூ­ழி­யர்­கள் உத­வி­ய­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

"உதவி தேவைப்­ப­டு­வோர் சிலரை நானே கோயி­லுக்­குள் அழைத்து சென்று வழி­பட உத­வி­னேன். இரவு நேரத்­தில் தனி­யாக வந்த சில பக்­தர்­க­ளுக்குத் தொண்­டூ­ழி­யர்­கள் கூடவே இருந்து வழி­காட்­டி­னோம்.

"பொது­வாக பக்­தர்­கள் விதி­முறை­க­ளைப் புரிந்து நிதா­ன­மாக வழி­பட்டு சென்­ற­னர்," என்­று தொண்­டூ­ழி­யர் திரு­மதி விஜ­ய­லட்­சுமி சங்­க­ரன் பிள்ளை, 56, தெரி வித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!