இளம் நிபுணர்கள்: மின்னிலக்க விளம்பரத் துறையில் வாய்ப்புகள் ஏராளம்

இர்­ஷாத் முஹம்­மது

 

கடந்த ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் உள்­ளூர் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயின்று எந்­தத் துறை­யில் வேலை­யைத் தேடு­வது என்று நினைத்த பல­ரில் கி.ஹர­வின், லக்ஷ்மி மேனன் இரு­வ­ரும் அடங்­கு­வர்.

இவர்­கள் வெவ்­வேறு பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பயின்று கடந்த சில ஆண்­டு­க­ளாக ஒரே நிறு­வ­னத்­தில் பணி­யாற்­று­கின்­ற­னர்.

வாய்ப்­பு­கள் மிகுந்த மின்­னி­லக்க விளம்­ப­ரத் துறை­யில் பரி­ண­மிக்­கும் இவர்­க­ளுக்கு, இன்­னும் அதிக எண்­ணிக்­கை­யில் இளம் சிங்­கப்­பூ­ரர்­கள் இந்­தத் துறை­யில் இணை­ய­லாம் என்ற வேட்­கை­யும் உண்டு.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் வர்த்­த­கத் துறை­யில் 2016ல் இள­நி­லைப் பட்­டம் பெற்­ற­வர் ஹர­வின், 31. அதற்கு முந்­தைய ஆண்டு நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இதே துறை­யில் பட்­டம் பெற்­ற­வர் லக்ஷ்மி மேனன்.

இரு­வ­ருக்­கும் மின்­னி­லக்க விளம்­ப­ரம் என்­றாலே என்­ன­வென்று தெரி­யாத நிலை­யில்­தான் 'குரூப்­எம்' எனும் உல­கின் முன்­னணி ஊடக முத­லீட்டு நிறு­வ­னத்­தில் சேர்ந்­த­னர்.

"நான் படிப்பை முடித்து ஓராண்டு வங்­கித் துறை­யில் பணி­யாற்­றி­னேன். வேறொரு துறை­யில் சேர­வேண்­டும் என்ற எண்­ணம் உதிக்­கவே முன்பு படித்­த­போது பயிற்சி வேலை­யில் பணி­யாற்­றிய மின்­னி­லக்­கத் துறைக்­குச் செல்­ல­லாம் என்று முடி­வெ­டுத்­தேன்," என்­றார் ஹர­வின்.

இத்­து­றை­யைப் பற்றி அப்­போது அவ்­வ­ள­வாக தெரி­யாது. அதில் பணி­பு­ரி­வது சுவா­ர­சி­ய­மாக இருக்­கும் என்று தாம் திரட்­டிய தக­வல்­கள் மூலம் தெரி­ய­வந்­த­தாக இவர் குறிப்­பிட்­டார்.

"பட்­டம் பெற்று ஒரு­சில மாதங்­கள் வேலை தேடி­னேன். எந்த வேலை­யைத் தேர்ந்­தெ­டுப்­பது என்­ப­தில் கவ­ன­மாக இருந்­தேன். அப்­போது மின்­னி­லக்­கமே எதிர்­கா­லத்­தில் முக்­கிய அங்­கம் வகிக்­கும் என்ற எண்­ணம் என்­னுள் இருந்­தது. அந்த அனுமா­னத்­தில் நான் இத்­து­றை­யில் சேர்ந்­தேன்," என்­ற லக்ஷ்மி, மின்னிலக்க விளம்பரத் துறையில் சேருவோம் என்று ஆரம்பத்தில் தாம் நினைத்துப் பார்த்ததுகூட இல்லை என்று கூறினார்.

கண்­மூடித் திறப்­ப­தற்­குள் ஐந்­து ஆண்­டு­கள் கடந்­து­விட்­ட­தா­கக் கூறிய இவர், தின­மும் புதி­ய­வற்றைக் கற்­றுக்­கொள்­ளும் வாய்ப்பு­கள் உள்­ள­தைச் சுட்­டி­னார்.

இந்த வேலை­யில் சேர்­வ­தற்கு ஆர்­வம் ஒன்றே போதும் என்ற கருத்தை வெளிப்­ப­டுத்­திய ஹர­வி­னும் லக்ஷ்மி­யும், வேலை­யில் கற்றுக்­கொள்­ளும் ஏரா­ள­மான வாய்ப்­பு­கள் இருப்­ப­தைச் சுட்­டி­னர்.

இந்­தத் துறை சிங்­கப்­பூ­ரில் ஆரம்­பக்­கட்ட வளர்ச்­சி­யில் இருப்­பதா­கக் கூறும் இவர்­கள், இந்தத் துறையில் இன்­னும் வாய்ப்­பு­கள் ஏரா­ளம் என்­கின்­ற­னர்.

"இது சுவா­ர­சி­ய­மா­க­வும் சவா­லா­க­வும் இருக்­கும் ஒரு துறை. நாம் சவாலை எதிர்­கொண்­டால் இந்­தத் துறை­யில் நிறைய சாதிக்­க­லாம். ஆனால் நாம் சிறப்­பாக செயல்­பட வேண்­டும்," என்­றார் ஹர­வின்.

"தொழில்­நுட்­பம் வேக­மாக மாறி வரு­கிறது. பெரிய நிறு­வ­னங்­களும் மின்­னி­லக்­கத் தளத்­தில் விளம்­ப­ரம் செய்­யும் கால­கட்­டத்­திற்கு நாங்­கள் தயா­ராக இருக்­கி­றோம்," என்று விளக்­கி­னார் லக்ஷ்மி.

"இந்­தத் துறை­யில் வாடிக்­கை­யா­ளர்­க­ளு­டன் பேசு­வது, அவர்­களின் தேவையை அறி­வது, குழு­வி­ன­ரு­டன் கலந்­தா­லோ­சித்து தீர்வு­க­ளைக் கண்­ட­றி­வது, பின்­னர் இதர குழுக்­க­ளு­டன் இணைந்து வெவ்­வேறு திட்­டங்­களை வரை­வது, அதற்­கான விநி­யோ­கிப்­பா­ளர்­களுடன் உரை­யாடி பரி­வர்த்­த­னையை மேற்­கொள்­வது என பல நிலை­களில் பல வேலை­களை இந்தத் துறை கொண்­டுள்­ளது," என்று விளக்­கிய ஹர­வின், ஒவ்­வொ­ரு­வருக்­கும் ஏற்ற வேலை­களைக் கண்­ட­றி­ய­லாம் என்­றார்.

"வழக்­க­மான வர்த்­தக நிறு­வனத்தின் செயல்­பா­டு­கள்­தான் இந்த நிறு­வ­னத்­தி­லும் இருக்­கின்­றன என்­றா­லும் இவை மின்­னி­லக்­கத்தை மைய­மா­கக் கொண்டு செயல்­ப­டுத்­தப்­ப­டு­வதே வித்­தி­யாசம்," என்று எடுத்­து­ரைத்­தார் லக்ஷ்மி.

எதிர்­கா­லத்­தில் எல்­லாமே மின்­னி­லக்­க­ம­ய­மாக போகிறது என்­பதும் இந்­தத் துறை என்­றுமே பசு­மை­யாகவே தேவை­கள் நிறைந்து இருப்­பதும் இத்­து­றை­யின் அனு­கூ­லங்­கள்.

காலப்­போக்­கில் இத்­துறை நல்ல வாய்ப்­பு­க­ளு­டன் இருப்­பது உறுதி என்று கூறும் இவர்­கள், இன்­னும் அதி­க­மான சிங்­கப்­பூ­ரர்­கள் இந்­தத் துறை­யில் பணி­யாற்ற ஆர்­வம் கொள்­ள­லாம் என்­கின்­ற­னர்.

பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளி­லும் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­க­ளி­லும் படிப்பை முடித்து வேலைக்­குச் செல்ல காத்­தி­ருப்­போர், இந்­தத் துறை­யில் சேர்­வ­தில் நாட்­டம் கொள்­ள­லாம் என்­பது இவர்­க­ளின் கருத்து.

வேறொரு துறை­யில் தற்­போது பணி­பு­ரிந்­து­வ­ரும் இளை­யர்­கள், வேறொரு பணிக்­குச் செல்­லும் எண்­ணம் கொண்­டி­ருந்­தால் அவர்­களும் இத்­த­கைய துறைக்­குத் தங்­க­ளின் தெரி­வு­களை விரி­வு­படுத்­த­லாம்.

"ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் திட்­டம் மூலம் அர­சாங்­கம் பல வச­தி­களை சிங்­கப்­பூ­ரர்­கள் அனை­வ­ருக்­கும் வழங்­கி­யி­ருக்­கிறது. அவற்­றில் மின்­னி­லக்­கத் துறைக்கு உகந்த பல பாடத்­திட்­டங்­கள் உள்­ளன.

"இளை­யர்­கள் அத்­த­கைய பாடங்­க­ளைக் கற்­ப­தால் அவர்­க­ளால் இத்­து­றை­யில் காலடி எடுத்­து­வைக்க சற்று எளி­தாக இருக்­கும்.

"பின்­னர் புதிய வேலை­யில் சேர்ந்­த­வு­டன் மேலும் ஆழ­மான ஆற்­ற­லை­யும் திறன்­களை­யும் வளர்த்­துக்­கொள்­ள­லாம்," என்று பகிர்ந்­தார் ஹர­வின்.

"பயிற்­சிக்­கான வாய்ப்­பு­கள் நிறைய இருக்­கின்­றன. பொது­வாக எல்­லா­ருக்­குமே பயிற்சி வழங்­கப்­படு­கிறது. இணை­யத்­தி­லேயே அதில் சான்­றி­தழ் பெற­லாம். கட்­ட­ணம் செலுத்­தா­மல் சில பயிற்­சி­களில் சேர­லாம்.

"முக்­கி­ய­மாக, நாம் அதற்கு முயற்சி செய்­ய­வும் நேரம் செல­வ­ழிக்­க­வும் வேண்­டும்," என்று எடுத்­து­ரைத்­தார் லக்ஷ்மி.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழ­லி­லும் இவர்­கள் பணி­யாற்­றும் 'குரூப்­எம்' நிறு­வ­னம் ஒரு­வ­ரைக்­கூட இங்கு ஆட்­கு­றைப்பு செய்­ய­வில்லை. சம்­ப­ளக் குறைப்­பா­லும் யாரும் பாதிக்­கப்­ப­ட­வில்லை.

"இன்­னும் சொல்­லப்­போ­னால் எங்­கள் நிறு­வ­னம் வளர்ச்­சிப் பாதையை நோக்­கிச் செல்­கிறது," என்று பெரு­மி­தத்­து­டன் பகிர்ந்­த­னர் இவர்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!