பேரங்காடிகளில் நெகிழி பைகளுக்குக் கட்டணம்

சிங்­கப்­பூ­ரில் பேரங்­கா­டி­களில் நெகிழி (பிளாஸ்­டிக்) பைகளை பயன்­ப­டுத்த கட்­ட­ணம் விதிக்­கும் ஓர் ஏற்­பாட்­டின் பேரில் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சும் தேசிய சுற்­றுப்­புற வாரி­ய­மும் இப்­போது செயல்­பட்டு வரு­கின்­றன.

நீடித்த நிலத்­தன்மை, சுற்­றுப்­புற மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர் நேற்று இதனை அறி­வித்­தார். ஒரு முறை பயன்­ப­டுத்­தி­விட்டு கழிக்­கப்­படும் பிளாஸ்­டிக் பைக­ளின் பய­னீட்­டைக் குறைக்­கும் நோக்­கத்­தில் இந்த முயற்­சி­கள் இடம்­பெ­று­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

இந்த அமைச்­சும் வாரி­ய­மும் எற்­பாடு செய்த நிகழ்ச்சி ஒன்­றைத் தொடங்கி வைத்து அமைச்­சர் உரை­யாற்­றி­னார். பிளாஸ்­டிக் பைகள் பய­னீட்­டைக் குறைத்­துக்­கொள்ள குடி­மக்­கள் பணிக்­கு­ழுக்­கள் முன்­வைத்த யோச­னை­க­ளுக்கு அமைச்­சும் வாரி­ய­மும் அந்த நிகழ்ச்­சி­யில் பதி­ல­ளித்­தன.

ஒரு முறை பயன்­ப­டுத்­தப்­பட்டு ஒதுக்­கப்­படும் பிளாஸ்­டிக் பைக­ளுக்­குக் கட்­ட­ணம் விதிக்­கும் ஏற்­பாட்டை உரு­வாக்­கு­வ­தன் தொடர்­பில் அமைச்­சும் வாரி­ய­மும் பொது கலந்­து­ரை­யா­டல்­க­ளைத் தொடங்­கும் என்­றார் அமைச்­சர்.

பிளாஸ்­டிக் பைக­ளுக்கு கட்­ட­ணம் விதித்­தால் குறைந்த வரு­மான குடும்­பங்­க­ளுக்­குப் பாதிப்பு ஏற்­ப­டுமா என்­பது பற்றி பரி­சீ­லிக்­கப்­படும் என்­றும் டாக்­டர் கோர் கூறி­னார்.

ஒரு பைக்கு கட்­ட­ணம் விதிப்­பதா அல்­லது ஒரு பரி­வர்த்­த­னைக்கு கட்­ட­ணம் விதிப்­பதா என்­பது பற்றி அர­சாங்­கம் முடிவு செய்­யும் என்­றும் அவர் விளக்­கி­னார்.

ஒரு பைக்கு ஐந்து காசு அல்­லது 10 காசு என்ற கட்­ட­ணம் சாத்­தி­ய­மா­க­லாம் என்­பதை அவர் எடுத்­துக்­காட்­டா­கக் குறிப்­பிட்­டார்.

கட்­ட­ணத்தை நடப்­புக்­குக் கொண்டு வர தேவைப்­ப­டக்­கூ­டிய கால­வ­ரம்பு பற்­றி­யும் பரி­சீ­லிக்­கப்­படும் என்­றார் அவர். சட்­ட­பூர்வ திருத்­தங்­க­ளைச் செய்ய வேண்­டிய தேவை இருக்­கக்­கூ­டும் என்­றும் டாக்­டர் கோர் மேலும் கூறி­னார்.

பிளாஸ்­டிக் பைகள் மூலம் வசூ­லா­கும் தொகை எந்த அமைப்­பி­டம் சென்று சேர வேண்­டும் என்­ப­தைப் பற்றி அர­சாங்­கம் சிந்­திக்க வேண்டி இருக்­கும் என்­றும் தெரி­வித்த அமைச்­சர், பொது­மக்­க­ளு­டன் கூடிய ஆலோ­ச­னை­க­ளைத் தொடர்ந்து பிளாஸ்­டிக் பைக­ளுக்­கான கட்­டண விவ­ரங்­கள் முடிவு செய்­யப்­படும் என்­றார்.

குடி­மக்­கள் பணிக்­குழு கடந்த ஜன­வரி மாதம் அர­சாங்­கத்­தி­டம் 14 யோச­னை­க­ளைத் தாக்­கல் செய்­தது. அவற்­றில் எட்டு யோச­னை­ க­ளுக்கு அமைச்­சும் வாரி­ய­மும் ஆத­ரவு அளிக்­கின்­றன.

பேரங்­கா­டி­களில் பயன்­ப­டுத்­தப்­படும் பிளாஸ்­டிக் பைக­ளுக்­குக் கட்­ட­ணம் விதிக்­கும் ஏற்­பாடு அந்த யோச­னை­களில் ஒன்று.

ஒரு முறை பயன்­ப­டுத்­தப்­படும் பிளாஸ்­டிக் பொருட்­க­ளுக்­குக் கட்­ட­ணம் விதிப்­ப­தைப் பய­னீட்­டா­ளர்­கள் ஏற்­றுக்­கொள்­ளும் போக்கு அதி­க­மாகி வரு­கிறது. கட்­ட­ணம் வசூ­லிக்க அர­சாங்­கம் முடிவு செய்­த­தற்கு இது­வும் ஒரு கார­ணம் என்று டாக்­டர் கோர் கூறி­னார்.

என்­டி­யுசி ஃபேர்பி­ரைஸ் நிறு­வ­னம் 2019 முதல் தனது 25 கடை­களில் பிளாஸ்­டிக் பைக­ளுக்­கான கட்­ட­ணத்தை அமல்­ப­டுத்தி வரு­கிறது. 2019க்கும் 2020க்கும் இடை­யில் இந்­தக் கடை­கள் 15.6 மில்­லி­யன் பிளாஸ்­டிக் பைக­ளை மிச்­சப்­ப­டுத்தி இருக்­கின்­றன என்­பதை அமைச்­சர் சுட்­டி­னார்.

யுனிக்லோ, வாட்ஸ்­சன்ஸ், எச்&எம், தி பாடி ஷாப் போன்ற கடை­களும் ஒரு முறை பயன்­

ப­டுத்­தக்­கூ­டிய பிளாஸ்­டிக் பைக­ளுக்­குக் கட்­ட­ணம் விதிக்­கின்­றன. 2019ல் ஏறத்­தாழ இத்­த­கைய 200,000 டன் பிளாஸ்­டிக் கழி­வு­கள் எரி ஆலைக்கு அனுப்­பப்­பட்­டன. இந்த நிலைமை நீடித்­தால் 2035ல் செம­காவ் தீவில் கழி­வு­க­ளைக் கொட்ட இடமின்றிப் போய்­வி­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!