‘ஸ்னாப்சேட்’டில் தமிழ்: கல்விக் கழக மாணவரின் கைவண்ணம்

ஆர்த்தி சிவ­ரா­ஜன்

 

படங்­கள், காணொ­ளி­க­ளைப் பகிர்­வ­தற்­குப் பயன்­படும் சமூக ஊட­கத் தள­மான ஸ்னாப்­சேட்டில் (snapchat) தமி­ழைப் பயன்­ப­டுத்­தும் வச­தியை ஸ்னாப்­சேட்­டு­டன் சேர்ந்து உரு­வாக்­கி­யுள்­ளார் 28 வயது திரு ஜெ.எஸ். சசி­கு­மார்.

சிங்­கப்­பூர் தேசிய கல்­விக் கழ­கத்­தில் பயி­லும் இவர் சிறு வய­தி­லி­ருந்தே வரை­பட வடி­வ­மைப்­பில் ஆர்­வம் கொண்­ட­வர்.

இவ­ரது இன்ஸ்­டா­கி­ராம் பக்­கத்­தில் உள்ள வரை­ப­ட வடி­வ­மைப்­பு­க­ளைப் பார்த்த ஸ்னாப்­சாட்­டின் மூத்த வடி­வ­மைப்­பா­ளர் ஒரு­வர் அவ­ரு­டன் தொடர்­பு­கொண்டு ஸ்னாப்­சாட்­டில் தமிழ் வரை­ப­டங்­களை உரு­வாக்­கு­வது குறித்து இவ­ரு­டன் பேசி­னார். '

ஃபில்டர்ஸ்', 'ஸ்டிக்­கர்ஸ்' ஆகி­ய­வற்றைத் தமி­ழில் உரு­வாக்­கும் திட்டத்தை நான்கு கட்­டங்­க­ளாக தற்ச­ம­யம் மேற்­கொண்டு வரு­கி­றார் திரு சசி­குமார்.

ஒவ்­வொரு கட்­டத்­திற்­கும் ஒரு குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யி­லான வடி­வ­மைப்­பு­களை உரு­வாக்­கு­கிறார். இரண்­டாம் கட்­டத்தை முடித்­துள்ள இவர், தற்­போது மூன்­றாம் கட்­டத்­தில் இறங்­கி­யுள்­ளார்.

"முதல் இரண்டு கட்­டங்­க­ளி­லும் சில கருப்­பொ­ருட்­களை கொடுத்­தார்கள். அவை தொடர்­பான தமிழ் வார்த்­தை­களை, தனிப்­பட்ட வடி­வ­மைப்­பு­க­ளாக உரு­வாக்கி கொடுத்­தேன். இவை தற்­கா­லத்­துக்கு ஏற்ற­, நவீன எழுத்­து­ருக்­க­ளைக் கொண்­ட­வை­யாக இருப்­பதை உறு­தி­செய்­தேன்," என்­றார் திரு சசி­கு­மார்.

எடுத்­துக்­காட்­டாக, இந்­தத் தளத்­தில் 'குட்­மார்­னிங்' என்­பது தமி­ழில் "காலை வணக்­கம்" என்று தோன்­றும். ஒரு­வர் போகும் இடத்­திற்கு சம்­பந்­தப்­பட்ட தமிழ் வார்த்­தை­களும் அந்த செய­லி­யில் தோன்­றும். கடற்­கரைக்­குச் சென்­றால், "கடற்­க­றைக் காற்று" என்ற வார்த்­தை­கள் தோன்­றும். ஒரு­வர் இந்­தச் செயலி எடுக்­கும் புகைப்­ப­டங்­களில் அல்­லது காணொ­ளி­களில் இந்­தத் தமிழ் வார்த்­தை­க­ளைச் சேர்த்­துக்­கொள்­ள­லாம். பெரும்­பா­லான ஃபில்டர்ஸ் மாற்ற முடி­யா­தவை. சில ஃபில்டர்ஸ் 'ஜிஃப்' வடி­வத்­தில் இருக்­கும் என பகிர்ந்­தார் அவர்.

தமிழ் எழுத்­து­ருவை வடி­வ­மைப்­ப­தற்கு 'இல்­லஸ்ட்­ரேட்­டர்' (illustrator), 'போட்­டோஷாப்' (photoshop) ஆகிய மென்­பொ­ருள்­களை இவர் பயன்­படுத்­து­கி­றார்.

முதல் கட்­ட­மாக, தமிழ் எழுத்­துரு இந்­தி­யா­வில் மட்­டும் வெளி­யி­டப்­படும். பின்­னர், தமிழ் புழங்­கும் நாடு­க­ளி­லும் 'ஸ்னாப்­சேட்'டில் தமிழ் கிடைக்­கும் வாய்ப்­பு­கள் உள்­ளது என்­றார் இவர்.

வரை­பட வடி­வ­மைப்பை சுய­மாக கற்ற திரு சசி­கு­மார், தனது படைப்­பு­களை இன்ஸ்­டா­கி­ரா­மில் ஜேஎஸ்­எஸ் க்ரி­யே­டிவ்ஸ் (JSS Creatives) என்ற பக்­கத்­தில் வெளி­யிட்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!