$33 மில்லியன் மாயம்; வழக்கறிஞருக்குப் பிணை மறுப்பு

தமது சட்ட நிறு­வ­னத்­தில் வைக்­கப்­பட்­டி­ருந்த $33 மில்­லி­ய­னைக் கையாடி மலே­சி­யா­வுக்­குச் சென்ற வழக்­க­ஞ­ருக்­குப் பிணை மறுக்­கப்­பட்­டுள்­ளது.

43 வயது ஜெஃப்ரி ஓங் சு ஓனின் பிணை மனுவை மாவட்ட நீ்திபதி டெரன்ஸ் டே நேற்று ஏற்க மறுத்­தார்.

ஓங் காணொளி மூலம் நீதி­

மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டார். நம்­பிக்கை துரோ­கக்

குற்­றம் தொடர்­பாக 31 குற்­றச்­சாட்டு ­க­ளை­யும் மோசடி போன்ற குற்­றங்­கள் தொடர்­பாக 45 குற்­றச்­சாட்­டு ­க­ளை­யும் ஓங் எதிர்­நோக்­கு­கி­றார்.

ஓங் கையாடிய தொகையை சிங்­கப்­பூ­ரில் வழக்­க­றிஞர் ஒரு­வ­ரால் கையா­டப்­பட்ட ஆகப் பெரிய தொகை என அர­சாங்க வழக்­

க­றி­ஞர்­க­ளால் முத­லில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

மலே­சி­யத் தலை­ந­கர்

கோலா­லம்­பூ­ரில் உள்ள ஹோட்­ட­லில் ஓங் கைது செய்­யப்­பட்­டதை அடுத்து, 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்­தில் அவர் தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார்.

அவர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் திருடப்பட்ட மலேசிய பாஸ்போர்ட் இருந்ததாக மலேசிய போலிசார் தெரிவித்தனர்.

2019ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி­யன்று ஓங் சிங்­கப்­பூ­ருக்­குக் கொண்டு வரப்­பட்­டார். தொழில் நிமித்­த­மாக தமது கட்சிக்கா­ரர் கோலா­லம்­பூ­ருக்­குச் செல்ல வேண்­டி­யி­ருப்­ப­தாக ஓங்­கின் வழக்­க­றி­ஞர் நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

ஆனால் ஓங்­கின் சார்­பாக நீதி­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட ஆவ­ணங்­களில் அது குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என்று சுட்­டிய நீதி­பதி பிணை வழங்க மறுத்துவிட்­டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!