உயரும் கடல் நீர்மட்டத்திற்கு தயாராகுங்கள்

பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்த இணையக் கருத்தரங்கில் நிபுணர்கள் கலந்துரையாடல்

சிங்­கப்­பூ­ரி­லும் அதைச் சுற்­றி­யும் நீர்­மட்­டம் உயர பரு­வ­நிலை மாற்­றம் கார­ண­மாக அமை­கிறது. கடந்த சனிக்­கி­ழமை தீவின் பல பகு­தி­களி­லும் ஏற்­பட்ட திடீர் வெள்­ளம் பரு­வ­நிலை மாற்­றத்­தின் ஓர் அறி­கு­றி­யாக இருந்­தது.

வடி­கால் திட்­டத்­தைச் சோதிக்­கும் அள­வுக்கு அடிக்­கடி கன­மழை பெய்­வ­தற்கு பரு­வ­நிலை மாற்­றம் கார­ண­மாக உள்­ளது. அது­மட்­டு­மல்­லா­மல், கடல்­ நீர்மட்­டத்­தை­யும் அது உயர்த்­து­கிறது.

தாழ்­வான பகு­தி­களில் அமைந்­துள்ள சிங்­கப்­பூர் போன்ற நாடு­க­ளுக்கு அது ஒரு மிரட்­ட­லாக விளங்­கு­கிறது.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழ் நேற்று ஏற்­பாடு செய்த கடல்­நீர் மட்ட உயர்வு குறித்த இணை­யக் கருத்­த­ரங்­கில் கலந்­து­கொண்டு பேசிய நிபு­ணர்­கள் மேற்­கண்ட கருத்தை முன்­வைத்­த­னர்.

இந்­தக் கருத்­த­ரங்­கில் பங்­கேற்ற மூன்று நிபு­ணர்­களில் ஒரு­வர் பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­தின் கரை­யோ­ரப் பாது­காப்­புத் துறை இயக்­கு­ந­ரான திரு­மதி ஹேஸல் கூ. சிங்­கப்­பூ­ரின் 30 விழுக்­காடு அளவு, சரா­சரி கடல்­நீர் மட்­டத்­தில் இருந்து 5 மீட்­ட­ருக்­கும் குறை­வான உய­ரத்­தில் அமைந்­துள்­ளதை அவர் சுட்­டி­னார்.

இன்று பூமி தினத்தை முன்­னிட்டு நடத்­தப்­பட்ட இந்­தக் கருத்­த­ரங்­கில் பேசிய திரு­மதி கூ, "கடல்­ நீர்மட்ட உயர்வு ஏற்­ப­டுத்­தும் பாதிப்பு நிச்­ச­ய­மாக மோச­மா­ன­தாக இருக்­கும். எனவே, அத்­த­கைய நிலை ஏற்­ப­டு­வ­தைத் தவிர்க்க இப்­போதே செயல் நட­வ­டிக்கை தேவை," என்று வலி­யு­றுத்­தி­னார்.

வெள்­ள பாதிப்பை முழு­மை­யாக எதிர்­கொள்ள பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் அதன் பங்­கை­யாற்றி வரு­கிறது. நாட்­டில் உயர்ந்­து­வ­ரும் கடல்­ நீர்மட்­ட­மும் அடிக்­கடி பெய்­து­வ­ரும் கன­ம­ழை­யும் ஏற்­படுத்­தும் இரட்­டை பாதிப்­பைக் கழ­கம் ஆராய்ந்து வரு­வ­தாக திரு­மதி கூ சொன்­னார்.

கடந்த சனிக்­கி­ழமை பெய்த கன­மழை குறித்­தும் அவர் பேசி­னார். பொது­வாக ஏப்­ரல் மாதம் முழு­வ­தும் பெய்­யும் சரா­சரி மழை­யில் 90 விழுக்­காட்­டிற்­கும் அதி­க­மான அளவு கடந்த சனிக்­கி­ழமை சிங்­கப்­பூ­ரின் மேற்­குப் பகு­தி­யில் ஒரு சில மணி­நே­ரத்­தி­லேயே பெய்து­விட்­ட­தாக திரு­மதி கூ தெரிவித்தார்.

"இது­போன்ற கன­மழை அடிக்­கடி பெய்­யும் என்­பதை நாம் எதிர்­பார்க்­க­லாம்," என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரின் கரை­யோ­ரப் பகு­தி­க­ளுக்­குப் பரு­வ­நிலை மாற்­றம் ஏற்­ப­டுத்­தும் பாதிப்பை ஆராய உத­வும் மாதி­ரிப் படி­வம் ஒன்றை உரு­வாக்க சிங்­கப்­பூர் தேசிய பல்­கலைக்­க­ழ­கத்­து­ட­னும் 'ஹைட்­ரோ­இன்­ஃபர்­மேட்­டிக்ஸ் இன்ஸ்­டி­டி­யூட்' நிறு­வ­னத்­து­ட­னும் இணைந்து பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் பணி­யாற்றி வரு­கிறது.

'ஸூம்' தளத்­தில் நடத்­தப்­பட்ட இந்­தக் கருத்­த­ரங்கு, ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழின் யூடி­யூப் ஒளி­வழி­யில் நேற்று மாலை பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டது.

கடல்­ நீர்மட்­டம் உயர்ந்து வரு­வதால் இந்த வட்­டா­ரத்­தில் உள்ள உயி­ரி­னங்­கள் வாழும் பகு­தி­க­ளுக்­கும் பாதிப்பு ஏற்­படும் என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த டாக்­டர் ஸெங் யிவென் கூறி­னார்.

பரு­வ­நிலை மாற்­றத்­திற்கு எதி­ராக மனி­த­கு­லத்­தின் போராட்­டத்­திற்கு உயி­ரி­னங்­க­ளின் வசிப்­பி­டங்­கள் உத­வு­கின்­றன.

அத்­த­கைய வசிப்­பி­டங்­க­ளுக்கு இல்­ல­மாக தென்­கி­ழக்­கா­சியா உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!