உட்லண்ட்சில் புதிய சமூக வளாகம்

சிங்­கப்­பூ­ரின் வடக்­குப் பகு­தி­யில் உதவி தேவைப்­படும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு மேலும் சிறந்த பங்­கா­ளி­க­ளாக இருந்து ஆத­ரவு வழங்க, மூன்று லாப நோக்­கற்ற அமைப்­பு­கள் ஒரே கூரை­யின்­கீழ் வர­வுள்­ளன. புதிய சமூக வளா­கத்தை நேற்று கல்வி அமைச்­ச­ரும் மார்­சி­லிங்-இயூ டீ குழுத்­தொ­கு­தி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான லாரன்ஸ் வோங் திறந்து வைத்­தார்.

ஃபார் ஈஸ்ட் ஆர்ச்­சர்ட், ஃபார் ஈஸ்ட் நிறு­வ­னம், செகி­சுய் ஹவுஸ் ஆகிய மேம்­பாட்­டா­ளர்­கள், இப்­புதிய 21,500 சதுர அடி 'ஸ்பேஸ்@வூட்ஸ் ஸ்கு­வேர்' இடத்தை நன்­கொ­டை­யாக அளித்­துள்­ள­னர்.

'கேர் கானர் சிங்­கப்­பூர்', 'நியூ லைஃப் சமூ­கச் சேவை­கள்', 'வோர்ல்ட் விஷன் சிங்­கப்­பூர்' ஆகிய மூன்று லாப நோக்­கற்ற அமைப்­பு­களும் ஒருங்­கி­ணைந்த முறை­யில் கைகோத்து சிறந்த சேவை­களை வழங்­கு­வ­தன் மூலம் சமூ­கத்­திற்­குப் பல­னும் பல­மும் கிட்­டும் என்று 'கேர் கானர் சிங்­கப்­பூர்' வெளி­யிட்ட அதன் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

"அர­சாங்­கம் மேலும் அதிக உத­வித் திட்­டங்­களை நடை­முறைப்­ப­டுத்தி வந்­தா­லும் சமூ­கத்­தி­ன­ரி­டையே உதவி மற்­றும் ஆத­ரவு நல்­கும் உணர்­வை­யும் கூட்­டு­ற­வை­யும் நாம் வலு­வாக்­கு­கிறோம்," என்­றார் 'கேர் கானர் சிங்­கப்­பூர்' அமைப்­பின் புர­வ­ல­ரா­க­வும் உள்ள திரு வோங்.

மக்­க­ளுக்கு அமைப்­பு­கள் மேலும் சிறந்த முறை­யில் சேவை­யாற்­ற­வும் புதிய தொண்­டூ­ழி­யர்­க­ளைச் சென்­ற­டை­யும் முயற்­சி­களை விரி­வாக்­க­வும் இப்­பு­திய வளா­கம் வழி­கோ­லும் என்­றார் அவர்.

புதிய வளா­கத்­தில் மன­ந­லச் சோதனை, மன­ந­லப் பிரச்­சி­னை­களு­டைய இளை­யர்­க­ளுக்கு அடிப்­படை ஆத­ரவு போன்ற சேவை­களை கேர் கானர் அமைப்­பின் ஒருங்­கிணைந்த இளை­யர் சேவை முன்­னோட்­டத் திட்­டம் வழங்­க­வுள்­ளது.

அமைப்­பின் மூத்­தோர் சேவை­கள் குழு, முதி­ய­வர்­க­ளுக்­கான உடல் வலி­மைப் பயிற்­சி­களை நடத்­த­வுள்­ள­தா­க­வும் கூறப்­பட்­டது.

எழுத்­த­றிவு மற்­றும் சிறு­வர்­களுக்­கான வழி­காட்­டித் திட்­டங்­களைப் புதிய வளா­கத்­தைக் கொண்டு நியூ லைஃப் சமூ­க சேவை­கள் அமைப்பு விரி­வு­ப­டுத்­தத் திட்­ட­மிட்­டுள்­ளது. சிங்­கப்­பூர் இளை­யர் படை, நீ ஆன் பல­துறை தொழிற்­கல்­லூரி ஆகிய பங்­கா­ளி­களு­டன் வோர்ல்ட் விஷன் அமைப்பு இணைந்து வளா­கத்­தின் மூலம் இளை­யர்­க­ளுக்­குச் சேவைக் கற்­றல் வாய்ப்­பு­களை வழங்­க­வுள்­ளது.

தொண்­டூ­ழி­யர்­க­ளுக்­குப் பயிற்சி அளிக்­கும் மைய­மா­க­வும் வளா­கத்­தைப் பயன்­ப­டுத்த மூன்று அமைப்­பு­களும் திட்­ட­மிட்­டுள்­ளன.

தொலை­பேசி மூலம் ஆலோ­சனை வழங்­கு­தல், நட்­பு­றவு ஏற்­படுத்­து­தல், வழி­காட்­டு­தல், பயிற்சி அ­ளித்­தல், இளை­யர் சமூ­கத் திட்­டங்­கள் என ஓர் ஆண்­டில் கிட்­டத்­தட்ட 2,000 தொண்­டூ­ழி­யர்­களுக்கு இவ்­வி­டத்­தில் பயிற்சி அளிக்­கப்­படும் என்று கூறப்­பட்­டது.

சமூ­கம், பொதுத் துறை, தனி­யார் துறை ஆகி­ய­வற்­றின் ஒருங்­கி­ணைந்த முயற்­சி­க­ளின் பலன் இப்­பு­திய வெளி என்­றார் கேர் கோனர் அமைப்­பின் தலைமை நிர்­வாக அதி­காரி யாப் போ கெங்.

சிங்கப்பூரர்களுக்கு லாப நோக்கற்ற அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆதரவு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!