ஒப்பற்ற சேவைக்கு கிடைத்த கௌரவம்

கி. ஜனார்த்­த­னன்

 

கொவிட்-19 கிரு­மிப்­ ப­ர­வல் கடந்­த­ஆண்டு வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­கு­வி­டு­தி­களை உலுக்கி வந்­த­போது ஊழி­யர்­க­ளுக்­காக கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­த­னை­களில் ஈடு­பட்­டி­ருந்த சுகா­தார மேம்­பாட்டு ஆலோ­ச­கர் ஜய­லட்­சுமி ஆரத்தி, 30, கலைப்­ப­டைப்பு ஒன்­றில் சித்­தி­ரிக்­கப்­பட்ட முன்­க­ளப் பணி­யா­ளர்­களில் ஒரு­வர்.

தேசிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு குழு­மத்­தில் சுகா­தார மேம்­பாட்டு ஆலோ­ச­க­ரா­கப் பணி­யாற்­றும் திருவாட்டி ஜய­லட்­சுமி இடம்­பெற்ற படம் கடந்த மாதம் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஐயோன் ஆர்ச்­சர்ட் கலைக்­கூ­டத்­தில் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

'நமது காலத்­தின் நாய­கர்­கள்' என்ற பொரு­ளைக் கொண்­டுள்ள 'ஹீரோஸ் ஆஃப் அவர் டைம்' கண்­காட்­சி­யில் 200க்கும் மேற்பட்ட கலைப்­ப­டைப்­பு­கள் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. சிங்­கப்­பூர் கலைச் சங்­கத்­தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த அக்கண்­காட்­சிக்கு சுகா­தார, தொடர்பு தக­வல் துறை­க­ளுக்­கான மூத்த துணை­ய­மைச்­சர் ஜனில் புதுச்­சேரி சிறப்பு வருகை மேற்­கொண்­டார்.

'ஹீரோஸ் ஆஃப் அவர் டைம்' என்ற கலைப்­ப­டைப்­பு­களில் திருவாட்டி ஜய­லட்­சுமி இடம்­பெற்ற ஓவி­மும் அடங்­கும். 1.8 மீட்­டர் உய­ர­மும் 3 மீட்­டர் அக­ல­மும் கொண்­டுள்ள இப்படத்தை சிங்­கப்­பூர் கலைச் சங்­கத்­தைச் சேர்ந்த 18 ஓவி­யர்­கள் உரு­வாக்­கி­னர்.

கண்­காட்­சிக்­குப் பிறகு அந்த ஓவி­யம் தேசிய தொற்­று­நோய் நிலை­யத்­திற்கு வழங்­கப்­பட்­டது. அக்­ரி­லிக் ஓவி­ய­மான இந்த ஓவி­யத்­திற்­கான பணி­கள் கடந்­தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி நிறை­வே­று­வ­தற்கு ஆறு மாதங்­கள் ஆன­தாக சம்­பந்­தப்­பட்ட ஓவி­யர்­களில் ஒரு­வ­ரான கலைச் சங்­கத்­தின் தலை­வர் டெரன்ஸ் டியோ கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழ் கடந்த மாதம் தெரி­வித்­தது.

புற்­று­நோய் உள்­ளிட்ட நாட்­பட்ட நோய்­க­ளுக்­கான பரி­சோ­தனை முறை­களை அமைப்­பது திரு­வாட்டி ஜய­லட்­சு­மி­யின் வழக்­க­மான பணி.

ஆனால் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­கு­வி­டு­தி­களில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்­கிய கிரு­மிப் பர­வல் மோச­மா­னதை அடுத்து, அவர் அந்த விடுதிகளுக்கு அனுப்­பப்­பட்­டார்.

கிட்­டத்­தட்ட 30 வெவ்­வேறு விடு­தி­களில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட கொவிட்-19 மருத்­து­வப் பரி­ சோ­த­னை­கள் சுமு­க­மாக நடை­பெறு­வதை உறுதி செய்­த­து­டன், கிரு­மிப் பர­வல் தொடர்பான சுகா­தாரப் பழக்கவழக்­கங்­களை ஊழி­யர்­க­ளுக்­கு கற்­றுத்­தந்த திருவாட்டி ஜய­லட்­சுமி, அவர்களது பயத்­தைப் போக்­கு­வ­தற்­காக உற்­சாக வார்த்­தை­க­ளைப் பேசி அவர்­க­ளுக்­குத் தைரி­யமூட்­டி­ய­தா­கக் கூறி­னார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளு­டன் பேசி அவர்­க­ளது உணர்­வைப்

பகிர்­ந்துகொண்டது மறக்க முடியாத தரு­ணமாக அமைந்­த­தா­கக் கூறி­னார் திரு­வாட்டி ஜய­லட்­சுமி தெரி­வித்­தார்.

"தங்­க­ளுக்கு இந்­திய உணவு கிடைக்­க­வில்லை என்று அவர்­கள் என்­னி­டம் தெரி­வித்­த­னர். நான் உட­ன­டி­யாக இது­கு­றித்து விடுதி நிர்­வா­கி­க­ளி­டம் பேசி அவர்­ளுக்கு இந்­திய உணவு வழங்­கும்­படி கேட்­டுக்­கொண்­டேன்," என்றார் அவர்.

விடு­தி­க­ளி­லுள்ள அறி­விப்­புப் பல­கை­களை இவர் தமி­ழாக்­கம் செய்­த­தும் குறிப்­பி­டத்­தக்­கது. தமிழ் பேசும் ஊழி­யர்­க­ளு­டன் பேசி அவர்­ க­ளு­டய கருத்­து­க­ளைப் பகிர்ந்­து­கொள்­வது எளி­தாக இருந்­த­தாக அவர் தெரி­வித்­தார்.

அதை­யும் தாண்­டிய பரிவு, அன்பு போன்ற உணர்­வு­களை ஒரு­வ­ருக்கு ஒரு­வர் வெளிப்­ப­டுத்­து­வது, கிரு­மிப்­ ப­ர­வல் போன்ற ஆபத்­தான சூழலில் ஆறு­த­லாக இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

"எனவே உணர்­வு­களை ஓவி­யத்­தில் வெளிப்படுத்த முடிந்தது மன­நி­றைவைத் தருகிறது," என்று அவர் தெரி­வித்­தார்.

"இந்த ஓவி­யத்­தில் சுகா­தார மற்­றும் முன்­க­ளப் பணி­யா­ளர்­களின் உழைப்­பைக் காட்­டு­வது அவர்­களது குழு உணர்வு, கட­மை­யுணர்வு, ஒரு­மைப்­பாடு ஆகி­ய­வற்­றை­யும் பிர­தி­ப­லிக்கிறது.

"சமூ­கத்­தைப் பாது­காப்­பாக வைப்­ப­தற்­காக கட­மைக்கு அப்பாற்­பட்டு பணி­யாற்­றிய முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் இவ்­வாறு தொடர்ந்து அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­வ­தைக் கண்டு மகிழ்ச்சி அடை­கி­றேன். ஆயி­னும், கொவிட்-19க்கு எதி­ரான போர் முடி­வுக்கு வர கால­மெ­டுக்­கும். இப்போரில் வெற்­றி பெற சமு­தா­யத்­தி­லுள்ள அனை­வ­ரும் பங்­காற்ற வேண்­டும்," என்றார் திருவாட்டி ஜய­லட்­சுமி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!