சவால்களை முறியடித்து சாதித்த இளையர்கள்

ஆர்த்தி சிவ­ரா­ஜன்

ஒரு­வர் வாழ்­வில் எத்­தனை தடை­க­ளைச் சந்­தித்­தா­லும் இறு­தி வரை விடா­மு­யற்­சி­யு­டன் இருப்­பது முக்கி­யம்.

'ஊக்­க­மது கைவி­டேல்' எனும் ஔவை­யா­ரின் ஆத்­திச்­சூடி இதற்கு மிகச் சிறந்த சான்­றா­கும். தன்­னம்­பிக்­கையை இழக்­கா­மல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்­ப­தற்கு 29 வயது திரு கணே‌ஷ் பூமி­நா­தன், 35 வயது திரு­மதி கௌசல்யா செல்­வ­ராஜ் ஆகி­யோர் எடுத்­துக்­காட்­டாக விளங்­கு­கின்­ற­னர்.

அழ­கப்பா கல்வி நிலைய முன்­னாள் மாண­வர் குழு நடத்­திய 'ஊக்­க­மது கைவி­டேல்' என்ற நிகழ்ச்­சி­யில் இவ்­விரு இளை­யர்கள் சிறப்­புப் பேச்­சா­ளர்­க­ளாக கலந்­து­கொண்டு தங்­கள் தனிப்­பட்ட அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­த­னர். இந்த நிகழ்ச்சி இம்­மா­தம் 18ஆம் தேதி மாலை 2 மணிக்கு இணை­யம் வழி நடந்­தது.

இளம் சாத­னை­யா­ளர் என அறி­மு­க­மான திரு கணே­‌‌ஷுக்கு 12 வய­தி­லேயே மூச்­சுக்­கு­ழா­யில் புற்­று­நோய் கட்டி இருப்­ப­தாக கண்­ட­றி­யப்­பட்­டது.

ஒன்­றரை ஆண்­டு­க­ளாக கதிரி­யக்க சிகிச்சை பெற்­ற­து­டன் அவ­ரது தொடக்­க­நிலை இறுதி ஆண்டு தேர்­வை­யும் வெற்­றி­க­ர­மாக எழுதினார்.

பட்­டப்­ப­டிப்பு இறுதி ஆண்­டில் அவ­ரது மூச்­சுக்­கு­ழா­யில் மீண்­டும் ஒரு கட்டி உரு­வா­கி­யது. அதை அகற்ற நான்கு அறுவை சிகிச்­சை­கள் தேவைப்­பட்­டன. இருப்­பி­னும் மனந்­த­ள­ரா­மல் தமது பட்­டப்­ப­டிப்பை வெற்­றி­க­ர­மாக முடித்­தார்.

தற்போது மாண­வர்­கள் பல­ருக்கு விண்­வெளி பொறியியல் சார்ந்த படிப்­பைக் கற்­றுக்­கொ­டுத்து வரும் இவர், விண்­வெ­ளிக்கு அனுப்­பப்­படும் முதல் சிங்­கப்­பூர் வீரர் என்ற GOSPACE திட்­டத்­தில் பொறியிய லாளராக ஈடு­பட்டு வரு­கி­றார்.

வாழ்க்­கை­யில் சிர­மங்­கள் ஏற்­பட்­டா­லும், அவற்றை கடந்து வந்தபோது மகிழ்ச்­சி­யாக இருந்த தாக அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

மற்­றொரு பேச்­சா­ள­ரான

திரு­மதி கௌசல்யா செல்­வ­கு­மார், சாதா­ரண நிலைத் தேர்­விற்கு படிக்­கும் நேரத்­தில் கரு­வுற்­றார்.

குழந்­தை­யைப் பெற்­றெ­டுக்க வேண்­டும் என்ற முடிவை எடுத்த பின் அவ­ரால் 'ஓ' நிலைத் தேர்வை எழுத முடி­ய­வில்லை.

முதல் கண­வரை விவ­கா­ரத்து செய்து, மீண்­டும் திரு­ம­ணம் செய்து, மேலும் மூன்று பிள்­ளை­களைப் பெற்­றெ­டுத்த திரு­மதி கௌசல்­யா­விற்கு தனது முன்னேற்றத்திற்கு ஏதும் செய்ய வில்­லையே என்ற எண்­ணம் உறுத்­தி­யது.

மருத்­து­வத் துறை­யில் நாட்­டம் கொண்ட திரு­மதி கௌசல்யா 31 வய­தில் தொழில்­நுட்ப கல்­விக்கழ­கத்­தில் சேர்ந்து தாதி­யர் துறை­யில் நைடெக் படிப்பை மேற்­கொண்­டார்.

சக மாண­வர்­க­ளை­விட மூத்­த­வ­ராக இருந்­தா­லும், அவர்­க­ளது ஆத­ரவு அவ­ருக்கு ஊக்­கம் அளித்­தது. ஹாங்­காங், அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளுக்­குச் செல்­லும் வாய்ப்­பு­களையும் அவர் பெற்­றார்.

தற்­போது அவர் நீ ஆன் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் ஒருங்­கி­ணைந்த கல்­வித்­திட்­டத்­தில் சேர்ந்து பயின்று வரு­கி­றார்.

"மற்ற இளம் மாண­வர்­கள்போல் படிப்­பிற்கு மட்­டுமே முன்­னு­ரிமை காட்ட முடி­ய­வில்லை. என் பிள்ளை ­க­ளை­யும் கண­வ­ரை­யும் பார்த்­துக்­கொள்­ளும் பொறுப்­பும் எனக்கு இருக்­கிறது. அவ்­வப்­போது சோர்­வ­டை­யும் தரு­ணங்­களில், கடந்­த­காலத்­தில் எனக்கு ஏற்­பட்ட அவ­மா­னங்­கள், விரக்­தி­நிலை ஆகி­யவை நினை­வுக்கு வரும்.

"வாழ்­வில் ஏற்­படும் சவால்­களை வென்று சாதிக்க வேண்­டும் என்ற உந்­து­தலை இது எனக்­குத் தரும். முடி­யா­தது என்­பது ஒன்­றும் இல்லை என்று உணர்ந்து செயல்­ப­டு­வேன்," என்று பகிர்ந்­தார் திரு­மதி கௌசல்யா.

தங்­கள் வாழ்க்­கைப் பாதை­யில் தடை­கற்­களை படி­கற்­க­ளாக மாற்­றிய இரு­வ­ரும் அவர்­க­ளின் அனு­ப­வங்­க­ளை­யும் வெற்­றி­க­ளை­யும் பகிர்ந்துகொள்­வ­தன் மூலம் பல­ருக்கு உத்­வே­கம் அளிப்பதாக உள்ளது என்று கூறி­னார் முனைவர் இரத்­தின வெங்­க­டே­சன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!