சமய நல்லிணக்கம் வழி மலரும் உறவுப் பாலம்

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

அனைத்து வழி­பாட்­டுத் தலங்­க­ளி­லும் குறைந்த எண்­ணிக்­கை­யில் பக்­தர்­கள் அனு­ம­திக்­க­ப்ப­டு­வது கொவிட்-19 கிரு­மித்­தொற்­றின் தாக்­கத்­தி­னால் ஏற்­பட்­ட­தா­கும்.

இருப்­பி­னும், கட்­டுப்­பா­டு­க­ளுக்கு இடையே உற்­சா­கம் குறை­யா­மல் புனித ரம­லான் மாதத்­தில் முஸ்­லிம்­கள் நோன்பு துறப்­ப­தற்கு ஏது­வாக இதர சமயப் பங்­கா­ளி­த்துவ அமைப்புகள் மாதம் முழு­வ­தும் ஆத­ரவு நல்கி வரு­கின்­றன.

அவ்­வ­ரி­சை­யில் இந்து அறக்­கட்­டளை வாரி­யம் ஆறு பள்­ளி­

வா­சல்­க­ளுக்­கும் ஜாமியா சிங்­கப்­பூர் அமைப்­பிற்­கும் நேற்று முன்­தி­னம் 100,000 பேரீச்­சம்­ப­ழங்­களை நன்­கொ­டை­யாக வழங்­கி­யது.

"கடந்த சில ஆண்­டு­களில் ரம­லான் மாதத்­தில் அரிசி பைகளைப் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு விநி­யோ­கம் செய்­தோம். தற்­போது குறை­வான எண்­ணிக்­கை­யில் பக்­தர்­கள் வரு­வ­தால், பேரீச்­சம்­ப­ழங்­களை விநி­யோ­கிக்க முடிவு செய்­தோம். சில பகு­தி­களில் பேரீச்­சம்­ப­ழங்­கள் கடை­களில் எளி­தில் கிடைக்க முடி­யாத பற்­றாக்­கு­றை­யை­யும் இது பூர்த்தி செய்­கிறது," என்று தெரி­வித்­தார் இந்து அறக்­கட்­டளை வாரிய தலைமை நிர்­வாக அதி­காரி திரு த.ராஜ­சே­கர்.

அங்கூலியா, அப்துல் கஃபூர், பா'ஆல்வி, ஜாமிஆ (சூலியா), மெளலானா முகம்மது அலி, அல்-அப்ரார் பள்ளிவாசல்களுக்கு தொழுகை நேரத்தில் வரும் பக்தர்களுக்கு இந்த பேரீச்சம்பழ 'பேக்கெட்டு'கள் வழங்கப்படும்.

"பல இனத்­த­வர்­கள் பள்­ளி­

வா­சல்­களில் நோன்பு கஞ்­சி­களை பெற்­றுக்­கொள்­ளும் அதேவேளை­யில் பல சமய அமைப்­பு­களும் இது­போன்று எங்­க­ளுக்கு நன்­கொடை வழங்­கு­வது நாட்­டின் சமூக நல்­லி­ணக்­கத்­தை­யும் ஒற்­று­மை­யை­யும் வலுப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது. இது பெரு­மைக்­கு­ரி­யது," என்று கூறி­னார் அங்­கூ­லியா பள்­ளி­வா­சல் இமாம் திரு முஹம்­மது சர்­பு­தீன் அப்­துல்லா.

ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மா­ள்

ஆல­யத்­தில் இந்தப் பேரீச்­சம்­ப­ழங்­களைச் சிறிய பெட்­டி­களில் பிரித்து, விநியோ­கிக்க உத­வு­வ­தில் இந்து அறக்­கட்­டளை வாரிய இந்து இளை­யர் கட்­ட­மைப்­பின் தொண்­டூ­ழி­யர்­கள், ஊழி­யர்­கள் மற்­றும் ஹொப் இனி­‌ஷி­யேட்­டிவ் அலா­யன்ஸ் (HIA) அமைப்­பின் தொண்­டூ­ழி­யர்­கள் என 30க்கும் மேற்­பட்­டோர் இணைந்­த­னர்.

"இது­போன்ற இதர சமய அமைப்­பு­க­ளு­டன் இணைந்து­

செ­யல்­ப­டு­கை­யில் எங்­க­ளி­டையே நட்­பு­றவு மலர்­கிறது. முஸ்­லிம்­க­ளின் நோன்புக் காலத்­தில், நிறை­வாக ஒரு காரி­யத்தைச் செய்­துள்­ளோம் என்ற திருப்­தி­யும் இதன் வழி கிடைக்­கிறது," என்று குறிப்­பிட்­டார் தாதி­யாகப் பணி­யாற்­றும் இந்து அறக்­கட்­டளை வாரிய இந்து இளை­யர் கட்­ட­மைப்­பின் தொண்­டூ­ழி­யர் குமாரி அனு­ப்பி­ரியா பன்­னீர்­செல்­வன், 35.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!