எம்ஆர்டி ரயிலில் முகக்கவசம் அணிய மறுத்து பயணம் செய்தவர் கைது

எம்­ஆர்டி ரயி­லில் முகக்­க­வ­சம் அணி­யா­மல் சென்ற 39 வயது நபரை போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

பொது­மக்­க­ளுக்கு அவர் தொந்­த­ரவு விளை­வித்­த­தா­க­வும் பாது­காப்பு இடை­வெளி விதியை அவர் மீறி­ய­தா­க­வும் போலி­சார் தெரி­வித்­த­னர்.

சமூக ஊட­கங்­களில் பர­விய காணொ­ளி­யில் “நான் சம­யப்­பற்­றுள்­ள­வன், மாமா மற்­றும் தாத்­தாக்­கள் முகக்­க­வ­சம் அணிந்து செல்­வ­தைப் பார்க்­கும்­போது வெறுப்­பாக இருக்­கிறது,” என்று மற்ற பய­ணி­க­ளி­டம் அவர் உரக்­கக் கூறு­வதை கேட்க முடி­கிறது.

சக பயணி ஒரு­வர், அவ­ருக்கு முகக்­க­வ­சம் வழங்­கி­னார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்­து­விட்­டார். ஒரு பெண் பய­ணிக்­குப் பக்­கத்­தில் அவர் அமர்ந்­த­போது அந்­தப்­பெண் பயணி எழுந்து சென்­று­விட்­டார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு 11.00 மணி­ய­ள­வில் நடந்த சம்­ப­வத்தை கற்­றல் நிறு­வ­னத்­தின் இயக்­கு­ந­ரான ஜெரோம் டான் என்­ப­வர் பதிவு செய்­தி­ருந்­தார்.

ஜூ கூன் நிலை­யத்தை நோக்­கிச்­சென்­ற­போது முகக்­க­வ­சம் அணி­யாத நபர் ரயி­லில் ஏறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சுக்கு அளித்த பேட்­டி­யில் அவர் கூறி­னார்.

ரயி­லில் இருந்த முதி­ய­வ­ரை­யும் முகக்­க­வ­சம் எடுக்­கச் சொல்லி அந்­தப் பயணி வற்­பு­றுத்­தி­ய­தா­க­வும் முகக் கவ­சத்­தால் நோய் உண்­டா­கும் என்­று அவர் கூறி­ய­தா­க­வும் திரு டான் சொன்­னார்.

ரெட்­ஹில் எம்­ஆர்டி நிலை­யத்­தில் டான் இறங்­கி­ய­போது அந்­தப் பயணி தொடர்ந்து ரயிலில் பய­ணம் செய்துகொண்­டி­ருந்­தார்.

இந்­தச்­சம்­ப­வத்தை எம்­ஆர்டி நிலைய ஊழி­ய­ரி­டம் அவர் தெரி­வித்­த­போது அடுத்த நிலை­யத்­தில் உள்ள அதி­கா­ரி­க­ளுக்கு தக­வல் தெரி­விப்­ப­தாக எம்ஆர்டி ஊழி­யர் கூறினார்.

இதை­ய­டுத்து முகக்­க­வ­சம் அணிய மறுத்­த­வரை போலி­சார் கைது செய்துள்ளனர். போலி­சார் விசா­ரணை தொடர்­கிறது.

இதற்­கி­டையே ஞாயிற்­றுக் கிழமை வெளி­யிட்ட ஃபேஸ்புக் பதி­வில் மற்­ற­வர்­க­ளின் பாது­காப்பை பாதிக்­கும் சமூ­கப்­பொ­றுப்­பற்ற நடத்­தை­களை அனு­ம­திக்க முடி­யாது என்று ரயில் சேவையை நடத்­தும் எஸ்­எம்­ஆர்டி தெரி­வித்­தது.

இதற்கு முன்பு நடந்த சம்பவத் தில் ஷுன்ஃபு மார்ட் உணவங்காடி நிலையம் அருகே முகக்கவசம் அணியாமல் பிரேம்ஜீத் கவுர், 41 என்பவர் வழிபோக்கர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இவருக்குப் பின்னர் இரண்டு வாரச் சிறைத் தண்டனையும் 2,000 வெள்ளி அபராதமும் விதிக்கப் பட்டது.

இவரது காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

தான் ஒரு சுய அதிகாரம் பெற்றவர் என்று அவர் கூறியதை காணொளி காட்டியது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!