‘மாத்தி யோசி’யின் மின்னிலக்கப் பொம்மலாட்டக் கலை

ஆர்த்தி சிவ­ரா­ஜன்

 

தமி­ழர் பாரம்­ப­ரி­யத்­தில் பொம்

மலாட்­டம் ஒரு சிறப்­பம்­சம் கொண்ட கலை ஆகும்.

அத்­த­கைய பொம்­ம­லாட்­டத்­திற்கு மின்­னி­லக்­கம் வாயி­லாக உயி­ரூட்­டு­வதே 'மாத்தி யோசி' என்ற நிகழ்ச்­சி­யின் நோக்­கம்.

சிங்­கைத் தமிழ்ச் சங்­கம், பெக் கியோ இந்­திய நற்­ப­ணிச் செயற்­குழு ஆகி­ய­வற்­றின் ஏற்­பாட்­டில் தமிழ்­மொழி விழாவை முன்­னிட்டு நடை­பெற்ற இந்­நி­கழ்ச்­சி­யில் கலா­சார, சமூக, இளை­யர் துணை அமைச்­ச­ரான திரு ஆல்­வின் டான் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்­து கொண்­டார்.

இம்­மா­தம் 2ஆம் தேதி மாலை 5 மணி­யி­லி­ருந்து 6 மணி வரை இந்த நிகழ்ச்சி ஃபேஸ்புக் வழி­யாக ஒளி­ப­ரப்­பப்­பட்­டது.

சிங்­கைத் தமிழ்ச் சங்­கத்­தின் கௌர­வச் செய­லா­ள­ரான திரு சஞ்சை முத்­துக்­கு­ம­ரன், "நம் தமிழ் இலக்­கி­யங்­கள் பொம்­ம­லாட்­டம் மூலம்­தான் மக்­க­ளி­டம் கொண்­டு­சேர்க்­கப்­பட்­டது. உல­கத்­தில் அனைத்­துமே மின்­னி­லக்­க­ம­ய­மா­கும்­போது, நமது பாரம்­ப­ரிய கலை­யை­யும் மின்­னி­லக்க முறை­யில் படைத்­தால் எப்­படி இருக்­கும் என்ற சிந்­தனை தோன்­றி­யது. ஒரு குறும்­ப­டத்­தில் நடி­கர்­கள் இல்­லா­மல் பொம்­மை­கள் இருந்­தால் எப்­படி இருக்­கும் என்று யோசித்து உரு­வாக்­கி­ய­து­தான் இந்த மின்­னி­லக்­கப் பொம்­ம­லாட்­டம்.

இதற்கு பப்­பெட்­மாஸ்­டர் (PuppetMaster) என்ற ஒரு செய­லியை நாங்­கள் பயன்­ப­டுத்­தி­னோம். நாங்­கள் வரைந்து அல்­லது தொழில்­நுட்­பத்­தைக் கொண்டு உரு­வாக்­கிய உரு­வங்­க­ளுக்கு அந்தச் செய­லி­யின் மூலம் அசை­

வ­ளித்து, பிறகு அவற்­றுக்­குக் குரல் கொடுத்து, அப்­ப­டைப்­பிற்கு இசை­யு­டன் உயிர் அளித்­தோம்," என்று கூறி­னார்.

குழு­விற்கு ஐந்து போட்­டி­யா­ளர்­க­ளாக மொத்­தம் 30 போட்­டி­யா­ளர்­கள் ஆறு குழுக்­க­ளாக மின்னி­லக்­கப் பொம்­ம­லாட்­டக் குறும்­ப­டங்­கள் தயா­ரிக்­கும் போட்­டிக்­குத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­னர்.

சிறந்த மூன்று நிகழ்ச்சியில் படைப்­பு­கள் காண்­பிக்­கப்பட்­டன.

இளை­யர் பிரி­வில் (14-17 வய­தி­னர்) ராஃபிள்ஸ் கல்விக் கழ­கத்­தைச் சேர்ந்த பிர­சன்­னா­ராஜ், பிர­வீன் குமார், அஷ்­வின் குமார், சங்­கர் விக்­னேஷ் மற்­றும் முர­ளி

­கி­ருஷ்­ணன் நிகி­லேஷ் உள்­ளிட்ட குழு முதல் இடத்தைப் பெற்­றது. பெரி­யோர் பிரி­வில் (18-20 வய­தி­னர்) விக்­னேஷ் செந்­தில்­நா­தன், நிகில் பாபு, காம­ராஜ் திருக்­கு­ம­ரன், ரெக்ஸ் ஹூபர்ட் ஃபிளிப், ஸ்ரீகாந்த் அபி­நவ் உள்­ளிட்ட குழு முதல் பரிசை பெற்­றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!