தடுப்பூசி தயாரிக்கும் ‘பயோஎன்டெக்’ நிறுவனத்தின் வட்டார தலைமையகம் சிங்கப்பூரில்

தடுப்­பூசி தயா­ரிக்­கும் நிறு­வ­ன­மான ‘பயோ­என்­டெக்’ தனது வட்­டார தலை­மை­ய­கத்­தை­யும் உற்­பத்­தித் தளத்­தை­யும் சிங்­கப்­பூ­ரில் அமைக்­க­உள்­ளது.

கொவிட்-19 தடுப்­பூசி தயா­ரிப்­புக்­காக ‘ஃபைசர்’ நிறு­வ­னத்­து­டன் இணைந்­தி­ருந்த ‘பயோ­என்­டெக்’, அதன் தென்­கி­ழக்­கா­சிய வட்­டா­ரத் தலை­மை­ய­கத்தை அமைக்க சிங்­கப்­பூ­ரைத் தேர்ந்­தெ­டுத்­துள்­ளது.

ஒப்­பு­த­லைப் பொறுத்து நிறு­வனம் தன் சிங்­கப்­பூர் அலு­வ­ல­கத்தை இங்கு திறப்­ப­து­டன் அதன் ‘எம்­ஆர்­என்ஏ’ உற்­பத்­தித் தளத்­துக்­கான கட்­டு­மா­னப் பணி­க­ளை­யும் 2021ல் தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அந்­தத் தளம் 2023ஆம் ஆண்­டில் செயல்­ப­டத் தொடங்­கும் என்­றும் குறைந்­தது 80 வேலை­கள் இத­னால் உரு­வாகும் என்­றும் அந்த ஜெர்­மா­னிய நிறு­வனம் நேற்று தெரி­வித்­தது. சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கத்­தின் ஆத­ர­வு­டன் விரி­வாக்­கத் திட்­டம் நிறை­வே­றும் என்று கூறப்­ப­டு­கிறது.

தடுப்­பூசி தயா­ரிக்­கும் மையத்தை சிங்­கப்­பூ­ரில் அமைப்­ப­தால், ‘கொவிட்-19 தடுப்­பூ­சி­களில் ஒரு குறிப்­பிட்ட எண்­ணிக்கை சிங்­கப்­பூ­ருக்கு ஒதுக்­கப்­படும்’ என்று நிறு­வனத்­தின் தலைமை நிர்­வா­கி­யும் இணை நிறு­வ­ன­ரு­மான உகர் சஹின் நேற்று நடை­பெற்ற இணை­யச் சந்­திப்­பின்­போது செய்­தி­யாளர்­களி­டம் கூறி­னார்.

இருப்­பி­னும், அனைத்­து­லக விநி­யோ­கத்­திற்­காக அடுத்த 12 மாதங்­களில் தேவைப்­படும் கொவிட்-19 தடுப்­பூ­சி­கள் தொடர்­பில் சிங்­கப்­பூ­ரின் இப்­பு­திய உற்­பத்­தித் தளம் தங்­க­ளுக்கு உத­வாது என்­றும் அவர் குறிப்­பிட்­டார். தற்­போ­தைய உற்­பத்தி ஆற்­ற­லில் உரு­வா­கும் தடுப்­பூ­சி­களை மேலும் அதி­க­ரிப்­ப­தால் மட்­டுமே அனைத்­து­ல­கத் தடுப்­பூசி விநி­யோ­கத்­தைக் கையா­ள­மு­டி­யும் என்­றார் அவர்.

‘பைசர்’ நிறு­வ­னத்­து­டன் இணைந்து 2021ல் மூன்று பில்­லியன் தடுப்­பூசி அள­வு­களை விநி­யோ­கம் செய்­வதே அதன் திட்­டம். முன்­னர் அறி­விக்­கப்­பட்­ட­தைக் காட்­டி­லும் இந்த அளவு 50% அதி­கம். மேலும் 40 விழுக்­காட்­டுக்கு மேல், குறைந்த மற்­றும் நடுத்­தர வரு­மான நாடு­களுக்கு ஒதுக்­கப்­படும் என்­றார் டாக்­டர் சஹின்.

சிங்­கப்­பூ­ரில் நிறு­வ­னம் செய்­யும் முத­லீடு பல நூறு மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் மதிப்­பு­டை­யது என்று கூறிய அவர், கொவிட்-19 நில­வரத்­தை­யும் தாண்டி நீண்­ட­கால முத­லீ­டாக இதைக் கரு­து­வ­தா­கக் குறிப்­பிட்­டார். வெவ்­வேறு தடுப்­பூ­சி­களுக்­கும் சிகிச்­சை­க­ளுக்­கும் வட்­டார மற்­றும் உல­க­ள­வில் நிறு­வ­னத்தை நிலை­பெ­றச் செய்­வது தங்­க­ளது விருப்­ப­மும் கூட என்­றார் அவர். அதி­ந­வீன உற்­பத்தி மற்­றும் மின்­னி­லக்­கக் கட்­ட­மைப்­பைக் கொண்டு உரு­வா­க­வுள்ள புதிய கட்­ட­டத்­தில் தொற்று நோய்­கள், புற்­று­நோய் ஆகி­ய­வற்­றுக்­கான பல­த­ரப்­பட்ட ‘எம்­ஆர்­என்ஏ’ தடுப்­பூ­சி­களும் சிகிச்­சை­களும் உரு­வாக்­கப்­படும் என்­றது ‘பயோ­என்­டெக்’.

இப்­பு­திய திட்­டத்­தால் சிங்­கப்­பூ­ரி­லுள்ள உயிர்­ம­ருத்­து­வத் துறை­யின் மதிப்பு உய­ரும் என்­றார் இணை­யச் சந்­திப்­பில் கலந்­து­கொண்ட வர்த்­தக, தொழில் அமைச்­சர் சான் சுன் சிங்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!