என்.பி.எஸ் சர்வதேசப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய ஓவியக் கண்காட்சி

இந்தியா முழுவதும் பல்வேறு மொழி பேசும் சமூகங்கள் அவரவர் மொழிகளின் பாரம்பரியப் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

கேரளாவில் ‘விஷு’ என்றும் அசாமில் பிஹு என்றும் பஞ்சாபில் பைஷாக்கி, மேற்கு வங்காளத்தில் போஹேலா போய்சாக் என்றும் கொண்டாடுகிறார்கள்.

குறிப்பாக மணிப்பூர், திரிபுரா, ஒடிசா, பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் ஒரே நாளில் தங்கள் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர்.

இந்தப் பாரம்பரியப் புத்தாண்டை சிங்கப்பூரிலும் கொண்டாட இந்திய மரபுடைமை நிலையமும் என்.பி.எஸ் சர்வதேசப் பள்ளியும் இணைந்து, புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற தலைப்பில் நான்கு மாணவர்கள் வரைந்த ஆறு ஓவியங்களை கண்காட்சிக்கு வைத்தனர்.

இந்த ஓவியக் கண்காட்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகத்தின் முதல் செயலாளர் மரியாதைக்குரிய சாஸ்வதி தேய் ஏப்ரல் 30ஆம் தேதி பார்வையிட வந்திருந்தார்.

+++

வெவ்வேறு புத்தாண்டு கொண்டாட்டங்களைப் மையமாக்கி உருவாக்கப்பட்ட ஓவியங்கள் குறித்த விவரம்:

விசாலி சுப்பிரமணியத்தின் தமிழ்ப் புத்தாண்டு:

தமிழ்ப் புத்தாண்டை உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் வீடுகளில் கோலம் போட்டு, விளக்கேற்றி, பொங்கல் வைத்து, முக்கனிகள் படைத்து கோவிலுக்குச் சென்று வழிபட்டு சிறப்பாக கொண்டாடுவார்கள். அதைக் குறிக்கும் விதமாக விசாலி ஓவியத்தை வரைந்திருந்தார். வீடுகளில் விளக்கு ஏற்றினால் தீமை அகன்று நன்மை ஏற்பட்டு நமது வாழ்க்கை பிரகாசமடையும் என்பதைத் தெரிவிக்கும் வண்ணம் வரைந்திருந்தார். ஓவியத்தைப் பார்த்த திருமதி சாஸ்வதி ஓவியத்தின் அளவீடு மிகச் சரியாக இருப்பதாகவும் பேனா கொண்டு தீட்டப்பட்ட நிறம் நுணுக்கமாகவும் அழகாகவும் இருப்பதாகக் கூறினார்.

மாளவிகா ரமேஷின் விஷூ கொண்டாட்டம்:

கேரள மாநிலத்தின் புத்தாண்டுப் பண்டிகை விஷூவை வரவேற்கும் வகையில் மாளவிகா ரமேஷின் ஓவியங்கள் இருந்தன.கேரள மாநிலத்தின் மிகப் பிரபலமான கதகளி நடனத்தைப் பற்றிய ஒவியம் அந்த மாநிலத்தின் இயற்கை வளங்களையும் செழிப்பையும் எடுத்துக்காட்டுவதாக இருந்தது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இருந்தது அந்த ஓவியம். ஓவியத்தைப் பார்த்த திருமதி சாஸ்வதி ஓவியம் மிக நுணுக்கமாகவும் பொருத்தமான வண்ணங்களை தேர்வு செய்து வரைந்துள்ளதாகவும் கூறினார். மேலும் நடனமாடுபவர் முக உணர்ச்சிகளின் வெளிப்பாடு மிக அழகாக இருப்பதாகவும் கூறினார்.

ஆதியா குட்டப்பாவின் பைசாக்கி கொண்டாட்டம்:

பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களாலும் இந்துக்களாலும் அறுவடைத் திருநாளாக பைசாக்கி கொண்டாடப்படுகிறது. அதைக் குறிப்பிடும் விதமாக சீக்கியர்கள் அவர்களுடைய பாரம்பரிய உடையுடன் அவர்களின் தனிச்சிறப்புமிக்க பாங்கரா நடனமாடுவதை ஒவியத்தில் வெளிப்படுத்தியிருந்தார். ஆதியா குட்டப்பா. அந்த ஓவியத்தைக் காணும்போது கற்பனையில் அந்த துடிப்புமிக்க இசையும், துள்ளல் நடனமும் நம் முன் காட்சியாக விரிகின்றன. ஓவியத்தைப் பார்த்த திருமதி சாஸ்வதி பளிச்சென இருக்கும் நிறங்கள் கொண்டாட்டத்திற்கு உயிரூட்டுகிறது என்று கூறினார்.

சாரா மரியாவின் போஹேலா போய்ஷாக் கொண்டாட்டம்:

வங்காளதேச மக்கள் புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்டமே போஹேலா போய்ஷாக். அந்த மக்கள் புத்தாண்டின் போது புத்தாடை அணிந்து பூ சூட்டிக் கொண்டு, இனிப்பு பலகாரங்கள் செய்து, மண் கோப்பைகளில் இனிப்புத் தயிர் பரிமாறி, பாட்டு பாடி, நடனமாடிக் கொண்டாடுவதை சாரா மரியா தனது ஓவியத்தில் வரைந்திருந்தார். ஓவியத்தின் பின்னணியில் ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகள் எழுதப்பட்டிருந்தது தனிச் சிறப்பாக இருந்தது. இவரது ஓவியம் மிக அழகான அருமையான தேர்வு என்றும் ரவீந்திரநாத் தாகூரின் கவிதையை கொண்டாடத்தோடு தன்னால் பொருத்திப் பார்க்க முடிந்தது என்றும் கூறினார் திருமதி சாஸ்வதி.

+++

ஓவிய ஆசிரியர் திரு சக்தி வேல் விஜயரங்கம் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதனால் புத்தாண்டின் கலாசாரத்தை ஓவியத்தில் வெளிப்படுத்த மாணவர்களுக்கு பேருதவியாக இருந்தது. இந்த ஓவியங்கள் வரையும்போது மாணவர்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர். கலாச்சாரத்தையும், பண்பாட்டையும்,கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தையும் நன்றாகப் புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்தது.

செய்தி: விசாலி சுப்பிரமணியன், என்.பி.எஸ் சர்வதேசப் பள்ளி மாணவர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!