மாறிய கற்றல் முறைக்கு மாறும் மாணவர்கள்

இந்து இளங்­கோ­வன்

கட்­டுப்­பா­டு­கள் மெல்ல மெல்ல குறைந்து நண்­பர்­க­ளோடு வகுப்­பு­

க­ளுக்­குச் செல்­ல­வும் சேர்ந்து படிக்­க­வும் சாப்­பி­டப் போக­வும் தொடங்­கிய வேளை­யில் மீண்­டும் தலை­தூக்­கி­யி­ருக்­கிறது கொவிட்-19 கிரு­மிப் பர­வல்.

இத­னால் மாண­வர்­க­ளுக்­குத் திரும்­ப­வும் வீட்­டி­லி­ருந்தே படிக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. கடந்த ஆண்டு சில மாதங்­க­ளுக்கு இணை­யம் வழி கற்­றல் அணு­கு­முறை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது.

ஒவ்­வொரு நாளும் கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்துக்கு கணினியின் முன் அமர்ந்து ஆசி­ரி­யர்­கள் கற்பிக்கும் பாடங்களில் கவனம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

'ஸூம்' தளத்­தைப் பயன்­ப­டுத்­தும் முறை, காணொளி, ஒலி அமைப்­பு­க­ளின் தொழில்­நுட்­பத்­தை­யும் புரிந்­து­கொள்­வ­தற்கே சில நாட்­கள் எடுத்­தன. பரிச்சயமில்லாத இணையம் வழி கற்றல் நடை முறைகளால் மாணவர்களுடன் பெற்றோரும் சிரமப்பட்டனர்.

இம்­முறை இணை­யம் வழி கற்­ற­லில் உள்ள சவால்­களை அறிந்து அதற்­கேற்ப தங்­களைத் தயார்ப்­படுத்­திக்­கொண்­டுள்­ளன பள்­ளி­கள். ஆனால் என்­ன­தான் தயார்­நிலை கூடி­யி­ருந்­தா­லும், கட்­டுப்­பா­டு­கள் ஏற்­ப­டுத்­தி­யுள்ள மாற்­றங்­களை மாண­வர்­கள் எவ்­வாறு மன­ரீ­தி­யா­க­வும் உடல் ரீதி­யா­க­வும் கையா­ளப் போகி­றார்­கள் என்­பதைப் பொறுத்­தி­ருந்­து­தான் பார்க்க வேண்­டும்.

ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள்

கடந்த வார­மும் இந்த வார­மும் தொடக்­கக்கல்­லூ­ரி­களில் அரை­யாண்டுத் தேர்­வு­கள் நடை­பெற இருந்­தன. ஆனால் திடீ­ரென்று விதிக்­கப்­பட்­ட­ கட்­டுப்­பா­டு­க­ளால் தேர்­வு­கள் ஜூலை மாதத்­துக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த தேர்­வு­க­ளைத் தொடக்­கக் கல்­லூ­ரிகள் தற்­போது ஒத்­தி­வைத்­தா­லும், வரும் அக்­டோ­பர் மாதம் நடை­பெ­ற­வி­ருக்­கும் ஜிசிஇ மேல் நிலைத் ('ஏ' நிலை) தேர்­வு­க­ளுக்­குத் தயார் செய்து­கொண்­டி­ருக்­கும் இரண்­டாம் ஆண்டு மாண­வர்­கள் சில­ருக்கு இந்த இணை­யம் வழி­கற்­ற­லில் ஈடு­பாடு இல்லை.

நேர­டி­யாக வகுப்­பில் ஆசி­ரி­யர் கற்­பிக்க, உட­ன­டி­யாக சந்­தே­கங்­களை நண்­பர்­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி தீர்த்­துக்­கொள்­வ­தற்கு இணை­யம் வழி கற்­றல் முறை ஈடா­காது என்­பது இவர்­க­ளின் கருத்து.

"கடந்த வெள்­ளிக்­கி­ழமை தமிழ் வாய்­மொ­ழித் தேர்வு நடை­பெற இருந்­தது. ஆனால் இணை­யம் வழி கற்­ற­லுக்கு மாறி­யுள்­ள­தால் அத்­தேர்வு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. இதில் எங்­க­ளுக்­குப் பதற்­ற­ம­ளிப்­பது என்­ன­வென்­றால், ஜூலை மாதம் தொடக்­கத்­தில் ஜிசிஇ மேல் நிலை தமிழ் வாய்­மொழித் தேர்வு உள்­ளது.

"அதற்கு எங்­க­ளைத் தயார்ப்­படுத்த ஆசி­ரி­யர்­க­ளின் உதவி தேவை. இணை­யம் வழி கற்­றல் சிறந்த கற்­ற­லுக்கு வழி­வ­குக்­குமா என்­ப­தில் எனக்கு சந்­தே­கம் உள்­ளது. நேர­டி­யாக வகுப்­ப­றை­யில் ஆசி­ரி­ய­ரு­டன் அமர்ந்து வாய்­மொழித் தேர்­வுக்­குத் தயார் செய்­வதைத்­தான் நான் விரும்­பு­கி­றேன்," என்று கத்­தோ­லிக்கத் தொடக்­கக்­கல்­லூ­ரி­யின் முத­லாம் ஆண்டு மாண­வ­னான 17 வயது கண்­ணன்

வைந்­த­ய­நா­தன் தமிழ் முர­சி­டம் பகிர்ந்துகொண்­டார்.

கல்வி கற்க ஏற்ற சூழ­லும்

கட்­ட­மைப்­பும் தேவை

சுவா சூ காங் உயர்­நி­லைப்­

பள்­ளி­யில் உயர்­நிலை ஒன்­றாம் வகுப்­பில் பயி­லும் ப. விகாஸ்னி சென்ற ஆண்டு இணை­யம் வழி கற்­ற­லின்­போது இணைய சேவை­களில் தாம் சந்­தித்த பிரச்­சினை­களைப் பற்­றி­யும் வீட்­டில் இருந்த ஒரே ஒரு கணி­னியை தாமும் தமது தம்­பி­யும் பகிர்ந்­து­கொண்ட அனு­பவங்­க­ளை­யும் நினை­வு­கூர்ந்­தார்.

இவ்­வாண்­டுக்­கான இணை­யம் வழி கற்­ற­லுக்கு ஏற்ற தனிப்­பட்ட கற்­றல் சாத­னங்­க­ளைப் பள்­ளியே இவ­ருக்கு தந்­துள்­ளது.

விகாஸ்­னியைப் போன்றே பல மாண­வர்­க­ளுக்­குப் பள்­ளி­களே சாத­னங்­களை வழங்­கு­கின்­றன.

வீட்­டில் போதிய கணி­னி­கள் இல்­லாத பிள்­ளை­கள் படிப்­பில் பின்­தங்­கி­வி­டா­மல் இருப்­பதை இது உறு­தி­செய்­கிறது.

வீட்­டில் படிப்­ப­தற்கு ஏற்ற சூழல் அனை­வ­ருக்­கும் கிடைப்­ப­தில்லை. புதிய கட்­டுப்­பா­டு­க­ளால் குடும்ப உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் வீட்டி­லி­ருந்­த­வாறே வேலை செய்­கின்­ற­னர், படிக்­கின்­ற­னர்.

வேலை செய்­ய­வும் படிக்­க­வும் வீட்­டில் போதிய இட வசதி இல்­லா­த­தால் இணைய பாடங்­க­ளின்­போது பல கவனச் சித­றல்­க­ளுக்கு ஆளா­வ­தாக சில மாண­வர்­கள் தெரி­வித்­த­னர்.

அதேநேரத்தில் சில மாணா­வர்­கள் இணை­யம் வழி கற்­றலை வர­வேற்­கின்­ற­னர். ஆசி­ரி­யர்­கள் பாடம் கற்­பிப்­ப­தைக் காட்­டும் காணொ­ளி­கள் மாண­வர்­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கப்­ப­டு­கின்­றன. அந்­தக் காணொ­ளி­களை மீண்­டும் பார்த்துப் பாடங்­க­ளைப் புரிந்­து­ கொள்­ளும் வசதி இப்­போது இருப்­ப­தாக மாண­வர்­கள் கூறி­னர்.

நண்­பர்­க­ளு­டன் இணைந்து

பாடம் படிப்­பது

சக மாண­வர்­க­ளு­டன் இணைந்து செய்­யும் ஒப்­ப­டைப்­பு­களை முடிப்­ப­தில் மாண­வர்­க­ளுக்குச் சிர­மம் ஏற்­பட்­டுள்­ள­தாக ரிபப்­ளிக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் மனித வள மேலாண்மை துறை­யில் பயி­லும் நூர் இஷானா தெரிவித்தார்.

"எங்­கள் ஒப்­ப­டைப்­பு­களை இணை­யம் வழி ஆசி­ரி­யர்­கள் முன் படைத்­துக்­காட்­டும் முறை ஏற்­பட்­டுள்­ளது. வகுப்­பில் அனை­வ­ருக்­கும் முன்­னால் படைத்­துக் காட்டு ­வ­தற்­கும் இணை­யம் வழி படைத்­துக்­காட்­டு­வ­தற்­கும் நிறைய வேறுபாடுகள் உள்­ளன. குழு­வாகச் சேர்ந்து செய்­யும் பாடங்­க­ளுக்கு இணை­யம் வழியே கலந்­து­ரை­யா­டல் செய்­ய­வேண்­டிய நிலையும்

வந்­து­விட்­டது." என்றார் இஷானா.

'ஸூம் சோர்வு' (Zoom Fatigue)

இந்­நி­லை­யில், இணை­யம் வழி கற்­ற­லால் மாண­வர்­க­ளுக்கு 'ஸூம் சோர்வு' ஏற்­படும் சாத்­தி­யம் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

'ஸூம் சோர்வு' என்­பது பல மணி நேரத்­துக்கு இணை­யம் வழி நடத்­தப்­படும் நிகழ்ச்­சி­களில் கலந்து­ கொள்­வ­தால் ஏற்­படும் சோர்­வா­கும். இதைச் சமா­ளிக்க சில பள்­ளி­களில் ஒவ்­வொரு பாடத்­திற்குப் பிற­கும் இடை­வெளி தரப்­ப­டு­கிறது.

புதிய கற்­றல் முறை­யால் பல புதிய சவால்­களை மாண­வர்­கள் சந்­தித்து வரும்­போ­தி­லும் மனந்­த­ள­ரா­மல் தங்­கள் கல்­விப் பய­ணத்­தைத் தொடர்­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!