விமான நிலைய வருகைக் கூடமும் பெட்டிகள் வரும் இடமுமே தொற்று கிளம்பிய இடங்கள்

சாங்கி விமான நிலை­யம் முனையம் 3 தொடர்­பான கொவிட்-19 தொற்றுக் குழு­மத்­தின் தோற்­று­வாய், அந்த முனை­யத்­தின் வருகை வாயில்­களும் பயணிகள் சரக்­குப் பெட்­டி­களை எடுத்துக்கொள்ளும் கூட­மும்­தான் என்­பது புலன்­விசா ரணை­ மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

அந்த இடங்­களில் தரை­யி­றங்­கி வந்த பய­ணி­க­ளு­டன் மிக அணுக்­க­மாக இருந்து ஊழி­யர்­கள் செயல்­பட்­ட­தாக சாங்கி விமான நிலையக் குழுமம் (CAG) தெரிவித்துள்ளது.

கொவிட்-19 கிருமி தொற்றி இருப்­ப­தா­கத் தெரி­ய­வந்த விமான நிலைய ஊழி­யர்­களில் ஏறத்­தாழ பாதிப்­பேர் வரு­கைக் கூடத்­தில்­தான் பர­வ­லாக வேலை பார்த்­தார்­கள்.

இதை வைத்­துப் பார்க்­கை­யில் ஊழி­யர்­க­ளுக்­கும் தரை­யி­றங்­கும் பய­ணி­க­ளுக்­கும் இடை­யில், அந்த இடங்­க­ளில்­தான் அணுக்­கத் தொடர்பு இருந்­தது என்­பது தெரி­ய­வ­ரு­கிறது.

இதுவே முதல் நிலை தொற்று என்­றும் தொற்று ஏற்­ப­டு­வ­தற்­கான மூல இட­மாக அந்த இடங்­களே இருந்து இருக்­கின்­றன என்­றும் இந்­த விமான நிலையக் குழு­மம் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி லீ சியோவ் ஹியாங் தெரி­வித்­தார்.

அந்­தப் பகு­தி­களில் வேலை பார்த்த ஊழி­யர்­கள், இடை­வ­ழிப் பய­ணி­கள் பகு­தி­க­ளி­லும் புறப்­பாட்டுக் கூடங்­க­ளி­லும் கீழ்த்தளம் 2ல் உள்ள உண­வுக் கூடத்­தி­லும் மற்­ற­வர்­க­ளு­டன் கலந்­து­ற­வா­டி­னார்­கள். இதன் கார­ண­மாக இரண்­டாம் நிலை தொற்­றுக் குழு­மம் ஏற்­பட்டு அது பெருகி கடை­சி­யில் 100 பேருக்­கும் அதி­க­மா­ன­வர்­கள் பாதிக்­கப்­பட்­டு­விட்­டார்­கள்.

விமான நிலை­யத்­தின் இதர பகு­தி­கள் கிரு­மி­யின்றிச் சுத்­த­மாக இருந்­தன என்­றும் திரு லீ கூறினார்.

எடுத்­துக்­காட்­டாக மத்­திய இடை­வ­ழிப் போக்­கு­வ­ரத்துப் பகுதி­யில் ஏறத்­தாழ 2,000 பேர் வேலை பார்க்­கி­றார்­கள். இப்­போ­தைய நில­வ­ரப்­படி அவர்­களில் ஏறக்­கு­றைய 97 விழுக்­காட்­டி­ன­ருக்குப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­ட­தில் ஒரு குறிப்­பிட்ட தொற்­றுக் குழு­மத்­தைத் தவிர வேறு யாருக்­கும் கிரு­மித்­தொற்று இல்லை.

அந்­தத் தொற்­றுக்­குக் கார­ணம் வரு­கைக் கூடத்­தில் இருந்­த­வர்­களு­டன் ஊழி­யர்­கள் அணுக்­கத் தொடர்­பில் இருந்­தது என்­பது புலன்­வி­சா­ரணை மூலம் தெரி­ய­வந்­த­தாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அவர் கூறி­னார். இன்­றைய தேதி­யில் விமான நிலைய ஊழி­யர்­களில் மொத்­தம் 43 பேருக்கு தொற்று இருப்­பது தெரி­ய­வந்து இருக்­கிறது.

அவர்­களில் கிட்­டத்­தட்ட 10 பேர் முனை­யம் 3ல் உள்ள பய­ணி­கள் வரு­கைப் பகு­தி­யில் இருக்­கும் வருகைக் கூடத்­தி­லும் 11 பேர் சரக்குப் பெட்­டி­கள் எடுக்­கும் கூடத்­தி­லும் வேலை பார்ப்பவர்கள்.

இந்த 21 பேரில் 12 பேர் கீழ்த் தளம் 2ல் இருக்­கும் உண­வுக் கூடத்­திற்­குச் சென்று இருக்­கி­றார்­கள். அது முதல் அந்த உண­வ­கத்­திற்­குச் சென்று வந்த 10 ஊழி­யர்­களுக்­குத் தொற்று கண்­டு­பி­டிக்­கப்­பட்டு உள்­ளது.

விமான நிலைய பொது இடங்­களில் ஊழி­யர்­கள் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளாகி இருப்­பது இதுவே முதல் முறை என்­றும் திரு லீ கூறி­னார். அலு­வ­ல­கங்­கள், சில்­லறை வர்த்­தக நிறுவனங்­கள் முத­லா­னவை அந்­தப் பொது இடங்­களில் அடங்­கும்.

இவ்வேளையில், சாங்கி விமான நிலை­யம் முனை­யம் 3 கிரு­மித்­தொற்று குழு­ம­மாக மாறி­ய­தற்கு ஒரு குடும்­பமே கார­ணம் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

ஆனால் அந்­தக் குடும்­பத்­தி­னர் இந்­தி­யா­வி­லி­ருந்து வந்­த­வர்­கள் அல்­லர் என்று சிங்­கப்­பூர் அர­சாங்­கம் தெளி­வு­ப­டுத்தி உள்ளது.

இப்­போது சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடையே செயல்­படும் ஒரே பய­ணி­கள் விமா­னம் 'வந்தே பாரத்' விமா­னங்­க­ளா­கும்.

இந்த விமா­னங்­கள் முனை­யம் ஒன்­றில் மட்­டுமே செயல்­ப­டு­கின்­றன என்று சிங்­கப்­பூர் போக்­கு­வரத்து, வெளி­யு­றவு, மனி­த­வள அமைச்சுகள் வெளி­யிட்ட கூட்­ட­றிக்கை தெரி­வித்­தது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்­தி­லி­ருந்து அனைத்துலக விமானங்களுக்கு இந்­தியா தடை விதித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!