சிங்கப்பூரால் முடிந்ததை செய்யும்: பிரதமர் லீ

சிறிய நாடாக, பரு­வ­நிலை மாற்றத்தில் சிங்கப்பூர் பெரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்த முடியாது. ஆனால் இயன்ற அளவு சிங்கப்பூர் அதன் பங்­கை­யாற்றி ஆத­ரவு வழங்­கும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­தார்.

"கொவிட்-19 பிடி­யில் உல­கம் சிக்­கி­யுள்ள வேளை­யில் பரு­வ­நிலை மாற்­றத்­தி­லி­ருந்து நமது பார்வை வில­கி­வி­டக்கூடாது," என்று காமன்­வெல்த் நாடு­க­ளின் தலை­வர்­கள் கலந்­து­கொண்ட மெய்­நி­கர் சந்­திப்­பில் ேபசிய பிரதமர் லீ வலியுறுத்தினார்.

"பரு­வ­நிலை மாற்­றம் ஓர் அவ­சர அச்­சு­றுத்­த­லா­கும். மனி­த­குலத்­திற்கு எதி­ரான இந்த உல­க­ளா­விய சவா­லில் அனைத்து நாடு­களும் பாரிஸ் ஒப்­பந்­தத்தைப் பின்­பற்ற வேண்­டும்," என்­று அவர் குறிப்பிட்டார்.

பிரிட்­டிஷ் இள­வ­ர­சர் சார்ல்ஸ் நடத்­திய இந்­தச் சந்­திப்­பில் பிர­த­மர் லீ, சிங்­கப்­பூ­ரின் 'பசு­மைத் திட்­டம் 2030' பற்றி பேசினார்.

கொவிட்-19 பிந்­திய காலத்­தில் சிங்­கப்­பூர் நீடித்து நிலைத்­தி­ருக்­கும் முயற்­சிக்கு இதனை உதா­ர ­ண­மா­க­வும் பிர­த­மர் சுட்­டிக்­காட்­டி­னார்.

சென்ற பிப்­ர­வரி மாதம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட பசு­மைத் திட்­டத்­தின் முக்­கிய அம்­சங்­களை அவர் விவ­ரித்­தார்.

நீடித்த மேம்­பாடு, கரிம வெளி­யேற்­றம் முற்­றி­லும் இல்­லா­தது, பசுமை சார்ந்த பொரு­ளி­யல் ஆகி­ய­வற்­றுக்கு வழி­காட்­டி­யாக பசு­மைத் திட்­டம் திகழ்­கிறது.

முத­லில் கரி­ய­மில வாயுவை வெளி­யேற்­றும் பொரு­ளி­யலை சிங்­கப்­பூர் உரு­மாற்றி வரு­கிறது. கடல்­துறை, விமா­னத் துறை­களில் எரி­பொ­ரு­ளுக்கு மாற்­றாக தானி­யக்­க­ம­யம், மின்­னி­லக்­க­ம­யம், உயர்­தொ­ழில்­நுட்­பம் ஆகி­ய­வற்­றின் மூலம் சிங்­கப்­பூர் கரிம வெளி­யேற்­றத்தைக் குறைத்து வரு­கிறது. எரி­சக்தி, ரசா­ய­னத் துறை­களில் கரிம வெளி­யேற்­றம் அல்­லாத மேம்­பா­டு­களைச் செய்து வரு­கிறது.

உதா­ர­ண­மாக, பெட்­ரோல் ­ரசா­யன மைய­மாக விளங்கும் ஜூரோங் தீவில் சிறந்த தொழில்­நுட்­பங்­க­ளைப் புகுத்தி நீடித்த எரி­சக்தி, ரசா­யன நிலை­ய­மாக உரு­மாற்றி வரு­வதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இரண்­டா­வ­தாக சிங்­கப்­பூர் பசுமை பொரு­ளி­ய­லாக வளர்ச்சி அடை­யும்.

மூன்­றா­வ­தாக நீடித்த வளர்ச்­சிக்கு பசுமை சார்ந்த நிதித் திட்­டங்­க­ளுக்கு சிங்­கப்­பூர் ஆத­ர­வ­ளிக்­கும் என்று பிர­த­மர் லீ தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!