தடுப்பூசி மையத்திற்குச் சென்று வர கோஜெக் பயணப் பற்றுச்சீட்டுகள்

தனது சேவை­யைப் பயன்­ப­டுத்தி தடுப்­பூசி போட தடுப்­பூசி மையங்­களுக்­குச் செல்­லும் பய­ணி­களுக்கு தலா $15 மதிப்­புள்ள இரு பய­ணப் பற்றுச்­சீட்­டு­கள் வழங்­கப்­படும் என ‘கோஜெக் சிங்­கப்­பூர்’ தனியார் வாடகை டாக்சி சேவை நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

தடுப்­பூசி மையங்­க­ளுக்­குச் செல்­லவும் அங்­கி­ருந்து திரும்­பவும் அந்தப் பற்­றுச்­சீட்­டு­களைப் பயன்­படுத்­திக்­கொள்­ள­லாம்.

தடுப்­பூசி மையங்­க­ளுக்­குச் செல்ல போக்­கு­வ­ரத்து வசதி தேவைப்­ப­டு­வோர்க்கு உதவி கிடைப்­பதை உறு­தி­செய்­வதே இதன் நோக்­கம் என்று கோஜெக் நிறு­வனம் ஓர் அறிக்கை வாயி­லா­கக் கூறி இருக்­கிறது.

கோஜெக் பய­னா­ளர்­க­ளின் கணக்­கு­களில் அந்த இரு பய­ணப் பற்­றுச்­சீட்­டு­கள் தானா­கவே சேர்க்­கப்­பட்­டு­வி­டும். அவற்றை இந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி­வரை பயன்­ப­டுத்த முடி­யும்.

அந்­தப் பற்­றுச்­சீட்­டு­க­ளைக் கொண்டு, தங்­க­ளது தடுப்­பூசி மையம், பல­துறை மருந்­த­கம் அல்லது மருந்­த­கத்­திற்­குச் செல்ல அல்­லது அங்­கி­ருந்து திரும்ப மானியக் கட்­ட­ணத்­தில் கோஜெக் டாக்­சியை முன்­ப­திவு செய்­ய­லாம். வாரத்­தின் எந்த நாளி­லும் காலை 8 மணி­யில் இருந்து இரவு 8 மணிக்­குள் அந்­தப் பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பயன்­ப­டுத்த இய­லும்.

நேற்று முதல் வரும் 31ஆம் தேதிக்­குள் கோஜெக் செய­லி­யைத் தர­வி­றக்­கம் செய்து, பதிவு செய்­யும் புதிய பய­னா­ளர்­களும் தங்­களது கோஜெக் கணக்­கு­கள் வழி­யாக அப்­பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பெறு­வர்.

இம்­மா­தத் தொடக்­கத்­தில், டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யு­டன் கோஜெக் நிறு­வ­னம் ஒரு பங்­கா­ளித்­து­வத்­தைச் செய்­து­கொண்­டது. அதன்­படி, முன்­க­ளத்­தில் இருந்து பணி­யாற்றி, சிங்­கப்­பூ­ரை­ நல­மா­க­வும் பாது­காப்­பா­க­வும் வைத்­துக்­கொள்­ளும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­கும் வித­மாக, ‘கோஹீ­ரோஸ்’ எனும் திட்­டத்­தின்­மூ­லம் அந்த மருத்­து­வ­மனைப் பணி­யா­ளர்­க­ளுக்­குப் பய­ணப் பற்­றுச்­சீட்­டு­களை கோஜெக் வழங்­கும்.

“கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ரான போராட்­டத்­தில் தடுப்­பூசி ஒரு முக்­கி­ய­மான பாது­காப்பு அடுக்கு. தங்­க­ளது முறை வரும்­போது தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள எங்­கள் ஓட்­டு­நர்­களை ஊக்­கு­விப்­ப­து­போல, எங்­க­ளது சேவை­யைப் பயன்­ப­டுத்­தும் பய­ணி­களும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள எளி­தா­கச் சென்­று­ வர உதவ விரும்­பு­கி­றோம்,” என்று கோஜெக் பொது மேலா­ளர் லியன் சூங் லுவென் கூறி­யி­ருக்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!