பெண்களைக் கண்ணியத்துடன் நடத்த வலுவான ஊக்குவிப்பு

ஆர்த்தி சிவ­ரா­ஜன்

உல­கின் பெரும்­பா­லான பகு­தி­களில் பெண்­கள் ஆண்­களை விட முறை­யான கல்­வி­யைப் பெறு­கி­றார்­கள். அதே நேரத்­தில், பெண்­க­ளின் சொந்த அறிவு, திறன்­கள் மற்­றும் சாத­னை­கள் பெரும்­பா­லும் அங்கீ ­க­ரிக்­கப்­ப­டா­மல் போகின்­றன.

பெண்­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­கும் பாது­காப்­ப­தற்­கும் உயர்த்­து­வ­தற்­கும் எவ்­வாறு முயற்சி செய்­ய­லாம் என்­ப­து குறித்து சிங்­கப்­பூர் சார­ணியர் படை இணை­யம் வழி ஓர் உரை­யா­டலை கடந்த மாதம் 8ஆம் தேதி நடத்­தி­யது.

இந்த உரை­யா­ட­லில் கலந்­து­கொண்ட சார­ணியர் மற்­றும் இளஞ்­சா­ர­ணி­யர்­க­ளின் தந்­தையர், தங்­கள் மகள்­க­ளுக்கு சம­மான பாலினச் சூழலை எவ்­வாறு உரு­வாக்கத் தர முடி­யும் என்­பது பற்றிய கருத்­து­க­ளைப் பகிர்ந்­த­னர்.

வீட்­டில் ஆண்­களும் பெண்­களும் எவ்­வித பொறுப்­பு­களை ஏற்­றுக்­கொள்ள வேண்­டும் என்­பதை பற்­றிய எண்­ணங்­களை மாற்ற கல்வி மிக அவ­சி­யம் என சில தந்­தையர்­கூறி­னர்.

உதா­ர­ணத்­திற்கு, தாய்­மார்­கள் இல்­லத்­த­ர­சி­க­ளா­க­வும், தந்­தை­கள் வேலைக்குச் சென்று சம்­பா­திப்­ப­வர்­க­ளா­க­வும் இருக்க வேண்­டும் என்­பதே பொது­வான எதிர்­பார்ப்பு. இதை மாற்ற வேண்­டும் என தந்­தை­யர் கலந்­து­ரை­யா­டி­னர்­.

இளம் வய­தி­லேயே தங்­கள் மகள்­க­ளுக்கு எவ்­வாறு வழி­காட்டு­வது என்­ப­தைப் பற்றி பேசும்­போது, வெவ்­வேறு வாழ்க்கை தரு­ணங்­களில் பெண்­க­ளின் மாற்­றங்­களை ஆத­ரிக்­கும் வகை­யில் கூடு­தல் வளங்­கள் வேண்­டும் என பகிர்ந்­த­னர்.

பெண்­களை மரி­யா­தை­யு­டன் நடத்த தந்­தை­கள் தங்­கள் மகன்­களுக்கு கற்­பிக்க வேண்­டும் என்ற பரிந்­து­ரை­யும் இந்த உரை­யா­ட­லில் இடம்பெற்றது.

இந்த இணைய உரை­யா­ட­லில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­துக்­கொண்­டார் கலா­சார, சமூக, இளை­யர்துறை அமைச்­சரும் இரண்­டாம் சட்ட அமைச்­சருமான திரு எட்­வின் டோங்.

"நான் மூன்று மகள்­க­ளின் தந்­தை­யாக இருப்­ப­தால், மற்ற தந்­தை­கள் பகிர்ந்துகொண்ட கருத்து­கள் என்­னுள் ஆழ­மாகப் பதிந்­தன.

"நம் மகள்­கள் இந்த உல­கத்தை எவ்­வாறு பார்க்­கி­றார்­கள், எவ்­வாறு ஆண்­க­ளு­டன் பழ­கு­கி­றார்­கள், எவ்­வாறு மற்­ற­வர்­க­ளால் நடத்­த­ப­ட வேண்டும் என்று எதிர்­பார்க்­கி­றார்­கள் ஆகி­ய­வற்றை வடி­வ­மைப்­ப­தில் தந்­தை­க­ளா­கிய நாம் ஒரு முக்­கிய பங்­காற்­று­கி­றோம். நாம் அவர்­க­ளின் முதல் மற்­றும் சிறந்த முன்­மா­தி­ரி­கள்," எனக் கூறி­னார்.

பெண்­க­ளா­கிய நாம், உல­கத்­தி­லும் சமு­தா­யத்­தி­லும் நாம் என்ன எதிர்­பார்க்­கி­றோம் என்­பதை பற்றி பேச­லாம். ஆனால், இந்த எதிர்­பார்ப்­பு­களை உண்­மை­யாக்க பெண்­கள் மட்­டு­மல்­லா­மல், ஆண்­களும் அவர்­க­ளின் பங்கை செய்ய வேண்­டும். கைகளைத் தட்ட இரு கைகள் தேவை. அதேபோல், தந்­தை­யர்­கள் தான் மற்ற கை," என்­றார் சிங்­கப்­பூர் சார­ணியர் படை­யின் தலை­வர் முனை­வர் சீதா சுப்­பையா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!