கொவிட்-19 சுயபரிசோதனைக் கருவி 16ஆம் தேதியில் இருந்து மருந்தகங்களில் விற்பனை

இம்­மா­தம் 16ஆம் தேதி­யில் இருந்து கார்­டி­யன், யூனிட்டி, வாட்­சன்ஸ் ஆகிய மருந்­த­கங்­களில் கொவிட்-19 சுய­ப­ரி­சோ­த­னைக் கருவி விற்­பனைக்கு வரும் என்று சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

"அதி­க­மான நட­வ­டிக்­கை­களை நாம் மீண்­டும் தொடங்க விரும்பு­வ­தால், கொரோனா பரி­சோ­த­னையை விரைந்­தும் எளி­தி­லும் அனை­வர்க்­கும் கிடைக்க வழி­வகை செய்ய வேண்­டி­யுள்­ளது," என்று கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்குழு நேற்றைய செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­தார்.

அனை­வர்க்­கும் போது­மான அள­வில் விநி­யோ­கம் இருப்­பதை உறு­தி­செய்­யும் வித­மாக, தொடக்­கத்­தில் ஒரு­வர்க்கு அதி­க­பட்­சம் 10 ஆன்­டி­ஜன் விரை­வுச் சோதனை (ஏஆர்டி) கரு­வி­கள் மட்­டுமே விற்­கப்­படும்.

படிப்­ப­டி­யாக அவை அதி­க­மான சில்­லறை விற்­பனை நிலை­யங்­களில் கிடைக்க வழி­வகை செய்­யப்­படும்.

'ஏஆர்டி' பரி­சோ­த­னைக் கரு­வியை எளி­தா­க­வும் சுய­மா­க­வும் பயன்­ப­டுத்த முடி­யும் என்­றும் அதன்­மூ­லம் 20 நிமி­டங்­க­ளுக்­குள் முடி­வைத் தெரிந்­து­கொள்­ள­லாம் என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது.

"இந்த 'ஏஆர்டி' பரி­சோ­த­னைக் கருவி, நமது ஒட்­டு­மொத்த கண்­கா­ணிப்பு உத்­தியை முழு­மை­யாக்­கும்.

"இந்த விரை­வான, எளி­தில் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய பரி­சோ­த­னைக் கருவி, குறிப்­பாக தீவிர மூச்­சுத்­தொற்று அறி­குறி இல்­லாத, அதே நேரத்­தில் கொவிட்-19 தொற்­றுக்கு ஆளாகி இருக்­க­லாம் எனக் கவ­லைப்­ப­டு­வோ­ரி­டத்­தில் கொரோனா பாதிப்பை விரைந்து கண்­ட­றிய உத­வும்," என்று சுகா­தார அமைச்­சின் மருத்­துவ சேவை­கள் இயக்கு­நரும் இணைப் பேரா­சி­ரி­ய­ரு­மான திரு கென்­னத் மாக் கூறி­னார்.

எடுத்­துக்­காட்­டாக, கிரு­மித்­தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு­வர் சென்று வந்த இடத்­திற்­குச் சென்று வந்த மற்­ற­வர்­க­ளுக்கு இந்தச் சுய­ப­ரி­சோ­த­னைக் கருவி உத­வும்.

"ஒரு­வரை கொரோனா தொற்­றி­யுள்­ள­தாக 'ஏஆர்டி' சுய­ப­ரி­சோ­த­னைக் கருவி முடிவு காட்­டி­னால், அவர் உட­ன­டி­யாக பொதுச் சுகா­தார ஆயத்­த­நிலை மருந்­த­கத்­திற்குச் சென்று 'பிசி­ஆர்' உறு­திச் சோதனை செய்­து­கொள்ள வேண்­டும்.

"அதன்­பின் பிசி­ஆர் சோத­னை­யில் தமக்குத் 'தொற்று இல்லை' என முடிவு வரும்­வரை அவர் தம்­மைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்," என்று அமைச்சு அறிவுறுத்தி இருக்­கிறது.

அதே­போல, 'ஏஆர்டி' சுய­ப­ரி­சோ­த­னை­யில் 'தொற்று இல்லை' என முடிவு வந்­தா­லும் தொடர்ந்து விழிப்­பு­டன் இருக்க வேண்­டும் என்­றும் பாது­காப்பு நிர்­வாக நட­வடிக்­கை­க­ளுக்கு இணங்கி நடக்க வேண்­டும் என்­றும் அமைச்சு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

தீவிர மூச்­சுத்­தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் இருப்­போர், 'ஏஆர்டி' சுய­ப­ரி­சோ­த­னைக் கரு­வியை நம்பி­ இ­ரா­மல் முழு­மை­யான சோ­த­னைக்­கா­க­வும் பிசி­ஆர் சோத­னைக்­கா­க­வும் மருத்­து­வரை அணுக வேண்­டும் என்­றும் அமைச்சு கேட்டுக்­கொண்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!