நீ ஆன் கல்லூரி முன்னாள் மாணவர்கள் புகார்: வகுப்பில் இன சமய உணர்வுகளை மீறி விரிவுரையாளர் நடந்துகொண்டார்

நீ ஆன் பல­துறைத் தொழில்­கல்லூரி விரி­வு­ரை­யா­ளர் டான் பூன் லீ, வகுப்­பில் இன, சமய உணர்­வு­களுக்கு மதிப்­ப­ளிக்­க­ாமல் நடந்­து­கொண்­ட­தாக அந்­தக் கல்­லூ­ரி­யின் முன்­னாள் மாண­வர்­கள் புகார் கூறி இருக்­கி­றார்­கள்.

சுமார் நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன் 2017 ஜூலை­யில், அந்த விரி­வுரை­யா­ள­ரிடம் தான் படித்தபோது தான் ஒரு முஸ்­லிம் என்­பதை வகுப்­பில் குறிப்­பிட்டு, இஸ்­லாம் பற்றி அவ­ம­திப்­பான விவாதம் ஒன்றை விரி­வுரை­யா­ள­ர் கிளப்­பி­விட்­ட­தாக அத்­த­கைய மாண­வர்­களில் ஒரு­வ­ரான நூருல் ஃபாத்திமா இஸ்­கந்­தர், 22, என்­பவர் புதன்­கி­ழமை இன்ஸ்­ட­கி­ரா­மில் தெரி­வித்­தார்.

இஸ்­லாம் பற்­றிய இணை­யத் தளங்­களை அந்த விரி­வுரையாளர் தொடங்­கி­ய­தும் திருக்­கு­ரான் போதனை­களில் சிலவற்றைத் தான் ஏற்­றுக்­கொள்­ளா­தது ஏன் என்­பதை அவற்­றில் அவர் விளக்­கி­ய­தும் தனக்கு நினை­வில் இருப்­ப­தாக குமாரி நூருல் ஃபாத்திமா இஸ்­கந்­தர் தொலை­பேசி மூலம் தன்­னி­டம் தெரி­வித்­த­தாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்­டது.

தன்னை முஸ்­லிம் என்று குறிப்பிட்டு அந்­த அம்சங்கள் பற்றி விவா­திக்க அவர் முயன்­றார் என்­றும் முன்­னாள் மாணவி கூறி­னார்.

அந்த விரி­வு­ரை­யா­ளர்­தான் மதிப்­பெண்­களை அளித்து தான் உட்­பட தன் வகுப்பு மாண­வர்­க­ளைத் தரப்­படுத்­து­ப­வர் என்­ப­தால் பதில் எதையும் வெளி­யி­டா­மல் இருப்­பதே விவே­க­மா­னது என்று தான் முடிவு செய்­த­தா­க­வும் அந்த மாணவி தெரிவித்தார். பிறகு அவர் தான் படிக்கும் கல்­லூரிக்கு அது பற்றி மின்­னஞ்சல் ஒன்றை அனுப்­பி­னார்.

ஆனால் அதற்­குப் பதில் இல்லை என்­றா­ரவர்.

பிறகு அந்தச் சம்பவம் பற்றி இன்ஸ்டகிராமில் அவர் பதிவேற்றி னார். அந்த விரிவுரையாளரின் மேலும் பல தளங்கள் பற்றிய தகவல்கள் இதர மாணவர்கள் மூலம் தன் கவனத்திற்கு வந்ததாக வும் அந்த மாணவி தெரிவித்தார்.

ஒரு­நே­ரத்­தில் அந்த விரி­வுரை­யா­ளர் வகுப்­பில் கிறிஸ்­துவ சம­யம் பற்றி இகழ்ச்­சி­யான கருத்­து­களை தெரி­வித்­த­தாக இன்ஸ்டகி­ராம் புழங்கி ஒரு­வர் தெரி­வித்­தார்.

தலையை மூடும் துணியை அகற்­றும்­படி அந்த விரி­வுரையாளர் தன்­னி­டம் கூறி­ய­தாக வேறு ஒரு மாண­வி தெரி­வித்­தார்.

இத­னி­டையே, இது­பற்றி அந்த விரி­வுரை­யா­ள­ரி­டம் கருத்து கேட்­ட­போது, இப்­போ­தைக்கு கருத்து எதை­யும் கூற முடி­யாது என்று அவர் மறுத்­து­விட்­டதாகவும் இருந்­தா­லும் நூருல் ஃபாத்திமா இஸ்­கந்­தர் முன்பு தன்னிடம் படித்தவர் என்று தனக்கு நினை­வி­ருப்­ப­தாக அவர் கூறி­யதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

ஆர்ச்­சர்ட் ரோட்­டில் சனிக்­கிழமை இர­வில் டேவ் பிர­காஷ், 26, அவ­ரின் காதலி ஜாக்­கு­லின் ஹோ 27, என்ற இரண்டு பேரிடம் இன­வாதக் கருத்­து­களை விரி­வுரை­யா­ளர் டான் தெரி­விப்­பதை ஒரு காணொளி காட்­டி­யது. இதை அடுத்து இப்­போது போலிஸ் விரி­வுரை­யா­ளரை விசா­ரித்து வரு­கிறது.

பாட­போ­தனை பணி­களில் இருந்து விரி­வுரை­யா­ளரை தற்­கா­லி­க­மாக நீக்கி­ இருக்கும் அக்கல்­லூரியும் அவரை விசாரிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!