தீப்பிடித்த வீட்டில் ஆடவரைக் காப்பாற்றினார்

தீப்பிடித்த வீட்டில் ஆடவரைக் காப்பாற்றினார்

1 mins read
530a662f-08d5-4592-a76b-86ecf7b7dd1c
படங்கள்: வான்பாவ், ரேமண்ட் சீத்தோ -
Google News Preferred Icon

புக்­கிட் பாத்­தோக்­கில் நேற்று முன்­தி­னம் காலை நிகழ்ந்த தீவி­பத்­தின் போது ஆட­வர் ஒரு­வர் தமது மனை­வி­யு­டன் ஓடிச்­சென்று உத­வி­னார்.

முகம்­மது நசி­ரு­தீன் முகம்­மது காலித், 32, எனப்­படும் அவர், தமது இரு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது புக்­கிட் பாத்­தோக் ஈஸ்ட் அவென்யூ 3ல் தமது புளோக் 238ன் மாடி­யில் அண்டை வீட்­டி­லி­ருந்து புகையும் கருகிய வாடையும் வரு­வ­தைக் கண்டு அந்த வீட்டை நோக்கி ஓடி­னார்.

வீட்­டி­னுள் ஆட­வர் ஒரு­வர் சுயநினைவின்றி விழுந்து கிடப்­ப­தைக் கண்ட அவர் சற்­றும் தாம­திக்­கா­மல் சன்­னல் கத­வைத் தட்­டி­விட்டு உள்ளே நுழைந்­தார். அவ­ரது மனைவி தீய­ணைப்­புச் சாத­னத்தை தமது வீட்­டி­லி­ருந்து எடுத்து வர ஓடி­னார்.

சம்­ப­வம் குறித்து 'த நியூ பேப்­பர்' செய்­தித்­தா­ளி­டம் நசி­ரு­தீன் விவ­ரித்­தார். "ஒரே கரும்­பு­கை­யாக இருந்­தது. அந்த ஆட­வரை எப்­ப­டியோ சமா­ளித்து வெளியே இழுத்து பொதுத் தாழ்­வா­ரத்­திற்­குக் கொண்டு வந்­தேன். தட்டி எழுப்பியதும் அவர் எழுந்துவிட்டார். சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் வரும் வரை பொது­மக்­கள் தண்­ணீரை ஊற்றி நெருப்பை அணைத்­தார்­கள்," என்­றார்.

இவ­ரும் வீட்­டி­லி­ருந்து மீட்­கப்­பட்ட 37 வயது ஆட­வ­ரும் சுய­நி­னை­வு­டன் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். அந்த வீட்­டில் அவர் வாட­கைக்­குத் தங்கி இருந்­த­தா­கத் தெரிய வந்­தது. தீ பற்­றிய விதம் குறித்த விசா­ரணை தொட­ரு­கிறது.

குறிப்புச் சொற்கள்