உலகளாவிய போட்டித்தன்மை: முதலிடத்தை இழந்து 5ஆம் இடத்துக்கு வந்த சிங்கப்பூர்

உல­கி­லேயே ஆக அதி­க­மான போட்­டித்­தன்மை வாய்ந்­தப் பொரு­ளி­யல் எனும் நிலையை இழந்து, சிங்­கப்­பூர் ஐந்­தா­வது இடத்­துக்கு இறங்­கி­யி­ருக்­கிறது.

எனி­னும், நிர்­வாக மேம்­பாட்­டுக் கழ­கத்­தின் (ஐஎம்டி) உல­கப் போட்­டித்­தன்மை பட்­டி­ய­லின்­படி சிங்­கப்­பூர் ஆசி­யா­வின் ஆக அதி­க­மா­ப் போட்­டித்­தன்மை வாய்ந்த பொரு­ளி­ய­லாக அது குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

நிர்­வாக மேம்­பாட்­டுக் கழ­கம் சுவிட்­சர்­லாந்­தை­யும் சிங்­கப்­பூ­ரை­யும் தள­மா­கக் கொண்­டி­ருக்­கிறது.

பட்­டி­ய­லின் முதல் நான்கு இடங்­களை தற்­போது ஐரோப்­பிய நாடு­கள் பிடித்­துள்­ளன. முதல் இடத்­தில் சுவிட்­சர்­லாந்து உள்­ளது. இரண்­டா­வது இடத்­தில் சுவீ­ட­னும் மூன்­றாம் நான்­காம் இடங்­களில் முறையே டென்­மார்க்­கும் நெதர்­லாந்­தும் உள்­ளன.

போட்­டித்­தன்­மையை மதிப்­பி­டும் அம்­சங்­களில் ஒன்­றான பொரு­ளி­யல் செயல்­பாட்­டில் சிங்­கப்­பூர் முதல் இடத்­தில் வந்­த­தாக ஐஎம்டி கூறி­யது.

ஆனால் உல­க­ளா­விய வர்த்­த­கச் செயல்­தி­ற­னில் அது ஒன்­ப­தா­வது இடத்­துக்­கும் உல­க­ளா­விய கட்­ட­மைப்­பில் 11வது இடத்­துக்­கும் சிங்­கப்­பூர் இறங்­கி­யது.

வேலை இழப்பு, உற்­பத்­தித் திறன் குறைவு, ஆகி­ய­வற்­று­டன் கொவிட்-19 பர­வ­லின் பொரு­ளி­யல் பாதிப்பு ஆகி­ய­வற்­றால் சிங்­கப்­பூர் சிக்­கல்­க­ளைச் சந்­தித்­த­தாக ஐஎம்டி தெரி­வித்­தது.

பட்­டி­ய­லில் கீழ் இறங்­கிய மற்ற நாடு­க­ளைப் போல, சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­கள் குறைந்­தன. வேலை வளர்ச்சி விகி­தம் குறைந்­த­து­டன், அர­சாங்­கக் கடன், பொதுக் கடன் ஆகி­யவை அதி­க­ரித்­த­தும் அது பட்­டி­ய­லில் இறங்­கி­ய­தற்­குக் கார­ணங்­க­ளா­கக் கூறப்­பட்­டன.

இருப்­பி­னும் அனைத்­து­லக வர்த்­த­கம், தொழில்­நுட்­பக் கட்­ட­மைப்பு ஆகிய அம்­சங்­களில் சிங்­கப்­பூர் முதல் இடத்­தில் வந்­தது. அனைத்துலக முதலீடு, வர்த்தகத் துறைச் சட்டங்கள் ஆகிய அம்சங்களிலும் அது சிறப்பாக செயல்பட்டது.

சிங்கப்பூரின் நிலவியல் கூறு அதற்கு சாதகமாக இல்லாததும் அது பட்டியலில் இறங்கியதற்கு ஒரு காரணம் என்றது ஐஎம்டி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!