மாணவர்களுக்கு நவீன தயாரிப்பு நிலையம்

மாணவர்களுக்கு நவீன தயாரிப்பு நிலையம்

2 mins read
6898849e-3096-49cb-bba4-ff92a6606039
செயற்கை நுண்ணறிவு வசதிகளைக் கொண்ட நவீன தயாரிப்பு நிலையத்தை கல்வி அமைச்சர் சான் சுன் சிங் (இடமிருந்து 2வது) நேற்று தொடங்கிவைத்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

எதிர்கால ஊழியர் அணிக்கு நேரடி அனுபவங்கள் மூலம் மாணவர்களை தயார்ப்படுத்துவதற்காக தெமாசெக் பலதுறைத் தொழில்கல்லூரியில் நவீன தயாரிப்பு நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

ஏழு மில்லியன் வெள்ளி செலவில் அமைக்கப்பட்டுள்ள அந்தத் தொழிற்சாலையில் ஆறு வெவ்வேறு பொருட்களை ஆரம் பத்திலிருந்து தயாரிக்க முடியும்.

இணையத்தொடர்புள்ள கைக்கடி காரம், 'தம்ப் டிரைவ்', இயந்திர விசைக்கருவிகள் உள்ளிட்டவற்றை மாணவர்களே உருவாக்கும் வசதி கள் இங்கு உள்ளன.

ஒரு தொழிற்சாலையில் மாண வர்கள் நேரடியாகக் கற்றுக் கொள்ளும் சூழலை வழங்குதே இதன் நோக்கமாகும்.

இதில் பயிற்சி பெறும் மாண வர்கள் ஆர்வமிகுதியால் எதிர்காலத் தில் தயாரிப்புத்துறை வேலையில் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது.

தெம்பனிசில் உள்ள தெமாசெக் பலதுறைத் தொழில் கல்லூரியில் புதிய நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

ஆண்டுக்கு 2,500 மாணவர் களுக்கு பயிற்சியளிக்க இங்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு வசதி இருப்பதால் சிறிய எண்ணிக்கையில் பலதரப்பட்ட பொருட்களை நிலை யத்தில் தயாரிக்க முடியும். மேலும் விவேகமான முறையில் சரக்குகளை கையாளும் வசதிகளும் நிலையத் தில் செய்யப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சர் சான் சுங் சிங் புதிய நிலையத்தை நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

புதிய வசதி, மின்னிலக்கத்திற்கு மாற விரும்பும் நிறுவனங்களுக்கும் தொழில்துறை பங்காளிகளுக்கும் ஆதரவாகச் செயல்படும்.

அவர்களுக்குத் தேவையான ஆேலாசனைகளயும் திட்டங்களையும் அது வழங்கும்.

கல்லூரியின் முதல்வரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பீட்டர் லாம், இளையர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளும் இங்கு உருவாக்கப்படும் திட்டங்களும் குறிப்பாக சிறிய, நடுத்தர நிறு வனங்களுக்கு நாங்கள் வழங்கும் ஆலோசனைகளும் நமது தொழில் துறையில் போட்டித்திறனையும் உற்பத்தியையும் பெருக்கும் என்றார்.

நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பதால் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றார் அவர்.

இதற்காக ஓம்ரான் எலக்ட் ரானிக்ஸ், ஃபுஜிட்சு சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் பகுதிமின்கடத்தி தயாரிப்பு சங்கம் போன்றவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

இதன் மூலம் ஓம்ரான் நிறுவனத் தின் ஆறு மாதப் பயிற்சி திட்டத்தில் சேர்ந்த 3வது ஆண்டு மாணவரான முஹமட் அடீல், தானியக்க வழி காட்டும் வாகனங்களைப் பற்றி தெரிந்துகொண்டதால் எதிர்காலத் தொழிற்துறைக்குத் தயாராகிவிட்ட தாகக் கூறினார்.