சாதகமற்ற வேலைச் சந்தை: தயார்ப்படுத்திய கூகல்

எஸ்.வெங்­க­டேஷ்­வ­ரன்

ஜூன், ஜூலை மாதங்­கள் பல இளை­யர்­கள் படிப்பை முடித்து பட்ட தாரி­க­ளாக உரு­மா­றும் கால­கட்­டம். வேலை வாய்ப்பு தேடி பலர் தொழில் சந்­தைக்­குள் வரும் இச்­ச­ம­யத்­தில் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் பெரும் சவா­லாக உள்­ளது.

இந்­நே­ரத்­தில் வேலை தேடும் இளை­யர்­க­ளுக்­குக் கைகொ­டுக்­கும் வண்­ணம் கடந்த 26ஆம் தேதி கூகல் நிறு­வ­னம் பயி­ல­ரங்கு ஒன்றை வழி­ந­டத்­தி­யது.

சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கம், (சிண்டா), மெண்­டாக்கி, 'தி கோடேட் பிரா­ஜெக்ட்' (The Codette Project) ஆகிய அமைப்­பு­க­ளு­டன் இணைந்து கூகல் ஏற்­பாடு செய்த இந்­நி­கழ்­வில் சிண்­டா­வின் 'மென்­டோர் மி' (Mentor Me) திட்­டத்­தின்கீழ் பயனடையும் 64 இளை­யர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

கடந்த ஆண்டு வேலை இல்­லாத இளை­யர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மா­ன­தை­யும் தற்­போது சீராகி வரும் பொரு­ளா­தா­ரச் சூழ­லில் இந்­திய இளை­யர்­க­ளுக்­கும் பட்­ட­தாரி களுக்­கும் வேலை வாய்ப்­பு­கள் உயர்ந்து வரு­வ­தை­யும் சுட்­டி­னார் சிண்­டா­வின் தலைமை நிர்­வாக அதி­காரி அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன்.

"இது­போன்ற முயற்­சி­க­ளின் மூலம் நம் இளை­யர்­கள் வேலை வாய்ப்­பு­கள் குறித்த விழிப்­பு­ணர்­வையும் அதைப் பெறும் சாத்­தி­யத்­தை­யும் அடை­கி­றார்­கள். இளை­யர்­கள் வாழ்க்­கைத் தொழில் குறித்த நல்ல இலக்­கு­களை அமைத்­துக்­கொள்ள விழிப்­பு­ணர்வே முதல் படி," என்­றார் திரு அன்­ப­ரசு.

வேலை, கல்­விச் சாத­னை­களை பட்­டி­ய­லி­டும் அனு­ப­வக் குறிப்பை (CV) எழு­தும் முறை­கள், நேர்­கா­ணல்­களை அணு­கு­வ­தற்­கான திறன்­கள், வேலை­யி­டத்­தில் சிறப்­பா­கப் பணி செய்­வ­தற்­கான வழி­மு­றை­கள், கூகல் ஊழி­யர்­க­ளின் அனு­ப­வங்­களும் ஆலோ­ச­னை­களும் என பங்­கேற்­பா­ளர்­க­ளுக்­குப் பய­னுள்ள பல தக­வல்­கள் பயி­ல­ரங்­கில் பகி­ரப்­பட்­டன.

அனுபவக் குறிப்பில் கவனம்

"அனு­ப­வக் குறிப்­பில் நிறைய தக­வல்­களை உள்­ள­டக்­கு­வ­தை­விட முக்­கி­ய­மான தக­வல்­களை மட்­டும் சுருக்கி எழு­து­வது நல்­லது. விண்­ணப்­பிக்­கும் வேலைக்கு ஏற்ற வகை­யில் குறிப்பை மாற்­றி­ய­மைக்க கற்­றுக்­கொண்­டேன்," என்­றார் நன்­யாங் தொழில்­நுட்பப் பல்­க­லைக்­க­ழக வர­லாற்­றுத் துறை பட்­ட­தாரி குமாரி மாதங்கி இளங்­கோ­வன், 23.

தற்­போது முழு­நேர வேலை­யைத் தேடிவரும் மாத­ங்கி, பயி­ல­ரங்­கில் தாம் கற்ற நேர்­கா­ணல் திறன்­களும் வேலை­யில் உற்­பத்­தித்­தி­றன், மன ­ந­லன், உடல்­ந­லம் ஆகி­ய­வற்­றுக்கு முன்­னு­ரிமை அளிக்கத் தரப்பட்ட ஆலோ­ச­னை­களும் உதவும் என்றார்.

ஆராய்ச்சி தேவை

"நேர்­கா­ண­லுக்கு முன், விண்­ணப்­பிக்­கும் நிறு­வ­னத்­தை­யும் அங்­குள்ள ஊழி­யர்­க­ளை­யும் பற்றி நன்கு ஆராய்­வது முக்­கி­யம். தன்­னம்­பிக்­கை­யு­டன் பதில்­கள் சொல்­வ­து­டன், நேர்­கா­ணல் நடத்­து­ப­வ­ரி­டம் கேள்­வி­கள் கேட்­க­வும் தயா­ராக இருக்­க­வேண்­டும்," என்­றார் மாதங்கி.

கல்வி, வேலை அனு­ப­வத்தை வார்த்­தை­க­ளால் மட்­டும் விவ­ரிக்­கா­மல் அது குறித்த முக்­கிய தர­வு­களை அனு­ப­வக் குறிப்­பில் உள்­ள­டக்­கு­வது அதற்கு சிறப்பு சேர்க்­கும் என்­றார் சிங்­கப்­பூர் தேசிய பல் கலைக்­க­ழ­கத்­தின் இயந்­திரப் பொரு­ளி­யல் துறை­யில் நான்­காம் ஆண்டு படிக்­கும் திரு அமி­ருல் ஆஷிக்.

"வெற்றி கிடைத்­தால் மட்­டுமே மகிழ்ச்­சி­யாக இருப்­பேன் என்று இல்­லா­மல் மகிழ்ச்­சி­யு­டன் பணி­யாற்­று­வதே தொழி­லில் வெற்றி காண்­ப­தற்கு சிறந்த வழி என்­பது நான் எடுத்­துச்­செல்­லும் முக்­கிய பாடம்," என்­றார் அமி­ருல், 24.

பாதி வெற்றியை அடையலாம்

ஊழி­யர் சந்­தைக்­குள் நுைழவது கடி­ன­மான அனு­ப­வ­மாக இருக்­க­லாம் என்று குறிப்­பிட்­டார் கூகல் நிறு­வ­னத்­தின் பொருள் விளம்­ப­ரத் துறை துணை நிர்­வாகி திரு ஷாஃப்பிக் ஹானா­ஃப்பி.

"வலு­வான அனு­ப­வக் குறிப்பை உரு­வாக்கி நேர்­கா­ணல்­களில் நன்கு தோற்­ற­ம­ளிப்­ப­தன் மூலம் சேர விரும்­பும் நிறு­வ­னத்­தி­டம் உங்­கள் மதிப்பை எடுத்­துை­ரக்­கும் போரில் பாதி வெற்றி கண்டு ­வி­ட­லாம். இளை­யர்­க­ளின் திறன்­களை மேம்படுத்தி அவர்­க­ளின் வேலை வாய்ப்­பு­களை அதி­க­ரிக்க உள்­ளூர் சமூக பங்­கா­ளி­க­ளு­டன் நெருக்­க­மாகப் பணி­யாற்றி வரு­கி­றோம்," என்­றார் திரு ஷாஃப்பிக், 26.

'மென்­டோர் மி' திட்டம்

இதற்­கி­டையே, இவ்­வாண்­டுக்­கான சிண்­டா­வின் 'மென்டோர் மி' திட்­டம் கடந்த ஐந்து மாதங்­க­ளாக இயங்கி வரு­கிறது.

நான்கு ஆண்­டு­க­ளாக நடப்­பில் இருக்­கும் இத்­திட்­டம், வேலை தேடும் இளை­யர்­களை தொழில் நிபு­ணர்­க­ளு­டன் இணைக்­கிறது. நிபு­ணர்­க­ளின் வழி­காட்­டு­தலின் மூலம் வேலை வாய்ப்­பு­க­ளைப் பெறும் முயற்­சிக்கு இத்­திட்­டம் கைகொ­டுக்­கிறது.

வேலை தேடுவோருக்கான முக்கிய குறிப்புகள்

1. அனுபவக் குறிப்பில் நீங்கள் செய்த அனைத்தையும் அடக்குவது அவசியமில்லை. முக்கிய தகவல்களை மட்டும் சுருக்கமாக எழுதினால் கடுமையான போட்டிக்கிடையே உங்கள் குறிப்பைத் தனித்துத் தெரியவைக்கும். தொழில் உலகில் குறைந்த அனுபவம் பெற்றவர்கள் அல்லது புதிதாக நுழைபவர்கள் ஒரு பக்கத்திற்கும் நீண்டகால அனுபவம் உள்ளவர்கள் இரண்டு பக்கங்களுக்கும் உட்பட்டு குறிப்பை எழுதுவது நல்லது.

2. காப்புக் கடிதம் (cover letter) எழுத வேண்டிய தேவை இல்லை. ஒரு நிறுவனம் அதைக் கேட்டாலோ அனுபவக் குறிப்பில் உள்ள இடைவெளிகளைக் குறித்த விளக்கம் வழங்கவோ காப்புக் கடிதத்தைச் சமர்ப்பிக்கலாம். பொதுவாக, அனுபவக் குறிப்பைச் சிறப்பாக்குவதில் முழு கவனத்தைச் செலுத்துங்கள்.

3. ஒவ்வொரு வேலைக்கும் அதற்கான குறிப்பிட்ட தேவைகள் இருக்கும். விண்ணப்பிக்கும் வேலைக்கு தகுந்த வகையில் அனுபவக் குறிப்பை மாற்றுவது நல்லது. ஒரு பிரதானக் குறிப்பை தயாரித்துவிட்டு, பிறகு அந்தந்த வேலைக்கு ஏற்றதுபோல அதை மாற்றியமைக்கலாம்.

4. எளிதாக புரிந்துகொள்ளும் மொழியில், சுருக்கமாக, மொழி சார்ந்த பிழைகள் இல்லாமல், குளறுபடி இல்லாத குறிப்பை அனுப்பவும். எவ்வளவு சாதனைகளை நீங்கள் படைத்திருந்தாலும் சில வேளைகளில் ஓர் எழுத்துப் பிழைக்காககூட உங்கள் விண்ணப்பத்தை நிறுவனங்கள் நிராகரிக்க வாய்ப்பு உள்ளது.

5. நேர்காணலுக்கு முன், சேர விரும்பும் நிறுவனத்தைப் பற்றி நன்கு ஆராயவும். முடிந்தால் நேர்காணலை நடத்துபவர் யார் என்று தெரிந்துகொள்வதும் நல்லது. முடிந்த அளவுக்கு கூடுதல் விவரங்களைத் திரட்டி, அவற்றை மையமாகக் கொண்டு, அந்த நிறுவனத்திற்கு உங்களால் என்ன மதிப்பைக் கூட்ட முடியும் என்பதையும் சுட்டிக் காட்டலாம். இவ்வாறு தயார் செய்வதினால் நேர்காணலின்போது இயல்பாக தன்னம்பிக்கை வரும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!