மெய்நிகர் உலகை விளக்கும் ‘மெய்நிகரி’ நாவல்

மெய்­நி­கரும் உண்­மை­யும்­ க­லந்த உல­கத்­தில் நாம் தற்­போது வாழ்­கி­றோம் என்று பல­ரும் நினைக்­கக்­கூ­டும். ஆனால், நாம் அனை­வ­ரும் மெய்­நி­கர்தான் மெய் என கரு­தப்­படும், நேர­லைத் தொழில்­நுட்­பம் சார்ந்த உல­கத்­தில் தற்­போது இருக்­கி­றோம் என்று கூறி­யுள்­ளார் திரு கபி­லன் வைர­முத்து.

கவி­ஞ­ரும், பாட­லா­சி­ரி­ய­ரும், எழுத்­தா­ள­ரு­மான திரு கபி­லன் வைர­முத்து, 39, தமது 18வது வய­தி­லி­ருந்து எழு­தி­ வ­ரு­கி­றார். 2014-ல் இவர் வெளி­யிட்ட 'மெய்­நி­கரி' நாவல், கவ­னம் பெற்­றது.

இந்த நாவலை தழுவி கே. வி. ஆனந்த் இயக்­கத்­தில் நடி­கர் விஜய்­சே­து­பதி நடித்த 'கவண்' திரைப்­ப­டம் உரு­வா­கி­யது.

சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தமிழ்­மொ­ழிப் பாடத்­திட்­டத்­தி­லும் மெய்­நி­கரி சேர்க்­கப்­பட்­டது.

திரு கபி­ல­ன் பிர­பல பாட­லா­சி­ரி­ய­ரும் கவி­ஞ­ரு­மான திரு வைர­முத்­து­வின் மக­னும்­கூட.

தேசிய நூலக வாரி­யத்­தின் ஏற்­பாட்­டில் நடை­பெ­றும் வாசிப்பு விழா 2021-ல் சிறப்பு எழுத்­தா­ளர்­களில் ஒரு­வ­ரான திரு கபி­லன், மெய்­நி­கரி நாவ­லில் அடங்­கி­யுள்ள தொழில்­நுட்­பக் கூறு­கள் குறித்­தும் தமது கவிதை அனு­ப­வத்­தை­யும் அண்­மை­யில் பகிர்ந்­து­கொண்­டார்.

இந்த நிகழ்ச்சி, ஜூன் 26ம் தேதி மாலை நூல­கத் தமிழ்ச் சேவை­க­ளின் பேஸ்­ஃபுக் பக்­கத்­தில் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பப்­பட்­டது.

நமது உல­கங்கள்

நம் முன்­னால் எத்­தனை உல­கங்­கள் உள்­ளன, இந்த உல­கங்­க­ளின் இலக்கு என்ன என்ற இரு கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்க முற்­பட்­டார் திரு கபி­லன்.

ஆரம்­ப­கா­லத்­தில் எந்தவித மெய்­நி­கர் தொழில்­நுட்ப வளர்ச்சியும் இல்­லா­மல், மெய் மட்­டுமே இருந்த உல­கமே முதல் வகை­யான உல­கம். இரண்­டா­வது உல­கம், மெய்­நி­க­ரை­யும் மெய்­யும் கொண்ட ஓர் உல­கம் (virtual and real world). இதில் தக­வல் தொடர்­பும் தொழில்­நுட்ப பிம்­பங்­களும் வளர்ந்­தன என்று திரு கபி­லன் கூறி­னார்.

மூன்­றா­வது, நேரலை என்­னும் தொழில்­நுட்­பம் சார்ந்த தற்­போ­தைய உல­கம்.

இவற்­றை­யும் தாண்டி நான்­கா­வது வகை உல­கத்­திற்கு நாம் செல்­வோமோ என்ற கேள்­வியை திரு கபி­லன் எழுப்­பி­னார். அந்த நான்­கா­வது உல­கத்­தில் நாம் ஒரு­

வ­ருக்கு ஒரு­வர் பார்த்­துப் பேசு­வ­தற்கு நேரடி சந்­திப்­பும் சம்­ம­த­மும் அவ­சி­ய­மில்லை என்ற கற்­ப­னையை அவர் முன்­வைத்­தார்.

மேல் குறிப்­பிட்ட உல­கங்­கள் எந்த மாதி­ரி­யான உல­காக இருந்­தா­லும், அவற்­றின் அடிப்­படை இலக்கு மனி­தர்­க­ளின் நிரந்­தர மகிழ்ச்­சியே என்றார் திரு கபிலன்.

குழந்­தை­க­ளின் எதிர்­கா­லம்

பதின்ம பரு­வத்­தில் நம் ஆழ் மனதைப் பாதித்த எண்­ணங்­க­ளின் தொகுப்பு வெளிப்­பாடுதான் இன்­றைய நிகழ்­கா­லம் என்­றும், இன்­றைய குழந்­தை­க­ளின் ஆழ்மன­தில்தான் உண்­மை­யான எதிர்­கா­லம் உரு­வா­கி வருகிறது என்­றும் அவர் கூறி­னார்.

பெற்­றோ­ரின் கண்­கா­ணிப்­பும் தக­வல் யுகத்­தின் கண்­கா­ணிப்­பும் குழந்­தை­களை சூழ்ந்­துள்­ளது எனக் கூறிய திரு கபி­லன், குழந்­தை­கள் பெரும்­பா­லும் தக­வல் யுகத்­தின் கண்­கா­ணிப்பை நோக்கி செல்­கின்­ற­னர் என்­றார். இச்­சூ­ழ­லில், எதை­யும் கேள்வி கேட்­கும் தன்­மையை அவர்­

க­ளுக்கு கற்­றுத்தரு­வதே அவர்­க­ளுக்கு நாம் ஆற்­றும் பங்கு என்­றார்.

மின்­னு­வது எல்­லாம் பொன் அல்ல

மெய்­நி­க­ரால் ஆன எதிர்­கால உல­கத்­தில் எது உண்மை, எதை நம்ப வேண்­டும் என்று இளை­யர்­கள் பிரித்­துப் பார்க்க, அவர்­க­ளுக்­குக் கரு­வி­கள் ேவண்­டும் என்­றும் திரு கபி­லன் கோடி­காட்­டி­னார்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் ஊட­கத் துறை­யில் அவர் படித்­துக்­கொண்­டி­ருந்­த­போது 'கட்­ட­மைப்பு கூறாய்வு (discourse analysis)' என்ற பாடத்­தைப் பயின்­றார்.

ஒரு மொழியை அதன் சமூ­கப் பின்­ன­ணி­யோடு புரிந்­து­கொள்­வதே கட்­ட­மைப்பு கூறாய்வு. ஊடகம் அதைப் பயன்படுத்தும் விதம் பற்றி 'கவண்' திரைப்­ப­டத்­தில் திரு கபி­லன் எழு­தி­யுள்­ளார்.

கட்­ட­மைப்பு கூறாய்வை அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்கு ஒரு அடிப்­ப­டைத் திற­னாக வளர்க்க வேண்­டும் என்றார் அவர்.

தமது மூன்­றா­வது நாவ­லான மெய்­நி­க­ரி­யில் 70% தமது சொந்த அனு­ப­வம் என்­றும் மீத­முள்ள 30% நண்­பர்­க­ளின் அனு­ப­வம் என்­றும் அவர் கூறி­னார்.

"நம்­மைச் சுற்றி ஆயிரமாயிர ஊட­கங்­கள் இயங்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றன. இவை­தான் நாம் கொண்டிருக்கும் நம்­பிக்­கை­களை நிர்­ண­யிக்­கின்­றன. ஊடக உல­கத்­திற்­குள் என்­னென்ன நிகழ்­கின்­றன, அதன் நிர்­வாக முகம் என்ன என்­ப­தைத் தெளி­வாக மெய்­நி­கரி எடுத்­து­ரைக்­கிறது," என்­றார் திரு கபி­லன்.

"இதில், பல தக­வல்­களும் உள்­ளன. TRP எனும் தொலை­க்காட்சிப் பார்­வை­யா­ளர் புள்ளி எவ்­வாறு கணக்­கி­டப்­ப­டு­கிறது, நிகழ்ச்­சி­கள் உரு­வாக்­கப்­படும் விதம், எவ்­வகை ஒலிபெ­ருக்­கி­களும் புகைப்­ப­டக் கரு­வி­களும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன போன்­றவை அவற்­றில் சில. மாண­வர்­க­ளுக்கு இத்­த­க­வல்­க­ளைக் கொடுக்க வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் இதை எழு­தி­னேன். அது பட­மா­க­வும் ஆயிற்று, பாட­மா­க­வும் ஆயிற்று," என்­றார் அவர்.

'மெய்­நி­கரி: ஒரு கவிப்­பார்வை' என்ற இளை­யர் கவி­ய­ரங்கு, வாசிப்பு விழா 2021ன் தொடர்­பில் நிகழ்ச்­சி­யாக ஜூலை 10ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடை­பெ­ற­வி­ருக்­கிறது.

செய்தி: ஆர்த்தி சிவராஜன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!