சுகாதாரப் பராமரிப்பில் புத்தாக்கம்: இளையர்களுக்கு விருது

ஜனார்த்­த­னன் கிருஷ்­ண­சாமி

உல­க­நா­டு­க­ளின் சுகா­தா­ரக் கட்­ட­மைப்­பு­க­ளுக்­குச் சவால் விடுத்து அழுத்­தத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது கொவிட்-19 சூழல். இந்த நெருக்­க­டி­யி­லும் நோயா­ளி­க­ளின் நிலை­மையை மேம்­ப­டுத்த, புத்­தாக்­கத்­தைக் கையாள முடி­யும் என்று காட்­டி­யுள்­ள­னர் தேசிய சுகா­தார, புத்­தாக்க விருதை வென்­ற­வர்­கள்.

விருது வென்­ற­வர்­களில் டான் டோக் சேங் மருத்­து­வ­ம­னை­யில் ஏழு ஆண்­டு­க­ளாக பணி­யாற்­றும் மூத்த 'ஃபிசியோ' உடற்­ப­யிற்சி சிகிச்­சை­யா­ளர் ரெத்­தி­னம் கணே­ச­னும் ஒரு­வர்.

இவ­ரின் குழு உரு­வாக்­கிய 'ஹார்ட்-ட்ரேக்' (Heart-Track) திறன்­பேசி செயலி, இதய நோயா­ளி­

க­ளுக்கு உத­வ­வல்­லது. இதய அறுவை சிகிச்சை நோயா­ளி­கள் எந்த அள­வுக்கு உடற்­ப­யிற்சி செய்­ய­லாம் என்­ப­தற்கு வழி­காட்­டு­வ­து­டன் அவ்­வாறு அவர்­கள் உடற்­ப­யிற்சி செய்­யும்­போது இத­யத்­து­டிப்பு உள்­ளிட்ட சில அம்­சங்­க­ளைச் செயலி கண்­கா­ணிக்­கிறது.

செயலி உரு­வாக்­கத்­திற்­கான தொழில்­நுட்ப, மருத்­து­வத் தக­வல்­க­ளைத் திரட்­டித் தந்­தார் 31 வயது ரெத்­தி­னம்.

அத்­து­டன் செய­லி­யை சோதித்துப் பார்ப்பது, செய­லி­யைப் பற்றி மருத்­து­வக் கூட்­டங்­களில் விளக்­கு­வது போன்ற பொறுப்­பு­களும் அவ­ருக்­குத் தரப்­பட்­டன.

"2019ஆம் ஆண்டு நடந்த சிங்­கப்­பூர் மருத்­துவ காங்­கி­ர­சில் நானும் என் குழு­வி­ன­ரும் இந்­தச் செயலி குறித்து பேசினோம்," என்று அவர் தெரி­வித்­தார்.

2018ஆம் ஆண்­டில் தொடங்­கிய செயலி உரு­வாக்­கப் பணி­கள், தற்­போது இறு­திக் கட்­டச் சோத­னை­யில் உள்­ளது என்று கூறிய ரெத்­தி­னம், செய­லி­யின் வெளி­யீட்­டுத் தேதி இன்­னும் உறுதி செய்­யப்­ப­ட­வில்லை என்­றார்.

செயலி தொழில்­நுட்­பம் தனக்­குப் புதிது என்­றா­லும் நோயா­ளி­

க­ளின் நலன் மீதான அக்­க­றையே, இத்­தொ­ழில்­நுட்­பத்­தின் மீதான ஆர்­வத்­தைத் தூண்­டி­யது என்­றார்.

"இதய நோயா­ளி­கள் மருத்­து­வ­

ம­னைக்­குச் செல்ல வேண்­டிய அவ­சி­யம் இருக்­காது. அன்­றாட வாழ்க்­கை­யில் உடற்­ப­யிற்­சி­க­ளைத் தகுந்த முறை­யில் திட்­ட­மிட செயலி உதவு­கிறது," என்று அவர் கூறி­னார்.

விருது வென்­ற­தில் மன­நி­றைவு அடை­வ­தா­கக் கூறிய ரெத்­தி­னம், கிரு­மிப்­ ப­ர­வல் சூழ­லின் கடு­மையை­ எதிர்­கொண்டு நோயா­ளி­க­ளுக்­காக போரா­டிய இந்த அனு­ப­வம், மறக்க முடி­யா­தது என்­றார்.

விருது வென்ற குழுக்­களில் இடம்­பெற்ற மற்­றொ­ரு­வர், 32 வயது முகம்­மது ரசீன் சம்­சு­தீன்.

டான் டோக் செங் மருத்­து­வ­

ம­னை­யின் உரு­மாற்­றப் பிரி­வில் துணை நிர்­வா­கி­யா­கப் பணி­யாற்­று­கி­றார் இவர். குறை­வான வளங்­களை நிறை­வா­கப் பயன்­ப­டுத்தி மருத்­து­வத் துறை­யி­ன­ருக்­காக தொழில்­நுட்ப வச­தி­களை ஏற்­ப­டுத்த உத­வி­யுள்­ளார்.

"மேம்­பாட்­டுத் திட்­டங்­க­ளுக்­கான வச­தியை ஏற்­ப­டுத்­தித் தரு­வ­தும் திறன்­களை வளர்ப்­ப­தற்கு துணை­யாக இருப்­ப­தும் எங்­கள் பிரி­வின் முக்­கிய இலக்­குகளா­கும்," என்று அவர் கூறி­னார்.

பிற­ருக்­குப் பயிற்சி வகுப்­பு­களை ஏற்­பாடு செய்­வ­தில் ஆர்­வம் கொண்­டுள்ள ரசீன், தமது வேலைக்­கான ஒவ்­வொரு பணித்­திட்­டத்­தி­லும் உள்ள சவா­லுக்­குத் தீர்வு காணும் அனு­ப­வம் சுவா­ர­சி­யம் என்­றார்.

தாதி­யர், மருந்­தக நிபு­ணர்­கள், மருத்­து­வப் பரா­ம­ரிப்­பா­ளர்­கள் ஆகி­யோர் தாம் பங்­காற்­றிய பணித்­திட்­டத்­தில் ஈடு­பட்­ட­தாக ரசீன் கூறி­னார். வளங்­கள் விர­ய­ம­டை­வ­தைக் குறைக்­கும் அதே வேளை­யில் இருக்­கும் வளங்­களை முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்­தும் தமது திட்­டம், கொவிட்-19 சூழ­லுக்­குப் பொருத்­த­மாக இருந்­த­தா­கக் கூறி­னார்.

"எந்த இடத்­தில் இருந்­தா­லும் கற்­றல் தொட­ரும்­படி வகை­செய்­யும் செய­லியை நாங்­கள் உரு­வாக்­கி­யி­ருக்­கி­றோம். மின்­னி­லக்க முறை மூலம், கற்­ப­வரே தமது கற்­றலை வழி­ந­டத்­திச் செல்­கி­றார்," என்று அவர் கூறி­னார்.

கடந்­தாண்டு ஜூலை மாதத்­திற்­கும் இவ்­வாண்டு மார்ச் மாதத்­திற்­கும் இடையே சுமார் 670 ஊழி­யர்­கள் இந்­தச் செய­லி­யு­டன் இணைந்­த­னர்.

இந்த எண்­ணிக்கை, வழக்­க­மான வகுப்­ப­றைச் சூழ­லில் நடத்­தப்­படும் வகுப்­பு­களில் சேரும் எண்­ணிக்­கை­யான 400ஐக் காட்­டி­லும் அதி­கம் என்று ரசீன் தெரி­வித்­தார். இத்­த­கைய வகுப்­பு­க­ளுக்­கான தயா­ரிப்பு நேரம் 90% மிச்­ச­மா­ன­தாக அவர் கூறி­னார்.

விருது பெற்­றது குறித்து மகிழ்ச்சி என்­றா­லும் நோயா­ளி­

க­ளுக்கு இத்­திட்­டத்­தால் கிடைக்­கப்­போ­கும் பயனை நினைத்து மேலும் திருப்தி அடை­வ­தாக ரசீன் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!