உட்புற வடிவமைப்பில் சமூகப் பொறுப்புடன் முத்திரை பதிக்கும் யுரேஷ்

ஆர்த்தி சிவ­ரா­ஜன்

 

திரு யுரேஷ் குமா­ரின் சிறு­வ­யது நினை­வு­களில் இரண்டு விஷ­யங்­கள் அவர் வாழ்க்­கைப் பாதை­யைத் தீர்­மா­னித்­த­தில் முக்­கி­ய­மா­னவை. ஒன்று, வீடு­கள், கட்­ட­டங்­க­ளின் உட்­பு­றத்தை வடி­வ­மைக்­கும் நிபு­ண­ராக வேண்­டும் என்று அவ­ருக்கு இருந்த ஆர்­வம். மற்­றொன்று, அவர் வளர்ந்த தெலுக் பிளாங்கா வட்­டா­ரம்.

இன்று இரண்­டை­யும் இணைத்து உட்­புற வடி­வ­மைப்­புத் துறை­யில் கவ­னிப்­பைப் பெற்­றுள்­ளார் திரு யுரேஷ், 20.

சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்கல்­லூரி­ யில் உட்­புற வடி­வ­மைப்பு துறையில் இந்த ஆண்டு பட்­ட­யம் பெற்ற திரு யுரேஷ் குமா­ரின் படைப்பு இவ்­வாண்­டின் சிங்­கப்­பூர் உட்­புற வடி­வ­மைப்பு விழா­வின் ஒரு பகு­தி­யாக தேசிய வடி­வ­மைப்பு நிலை­யத்­தில் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டது.

விழா­வில் 'கொவிட்-19க்கு பிந்­தைய உல­கில் வாழ்­வது' என்ற தலைப்பை மைய­மா­கக் கொண்டு உரு­வாக்­கப்­பட்ட பல உட்­புற வடி­வ­மைப்­புப் படைப்­பு­கள் ஜூன் 18ஆம் தேதி முதல் நேற்று ஜூலை 18ஆம் தேதி வரை காட்சிக்கு வைக்­க­பட்­டன.

விழா­வின் முக்­கிய சிறப்­பம்­ச­மான 'ஜென­ரே­ஷன் நெக்ஸ்ட்' எனும் பிரி­வில், நமது எதிர்­கா­லத்தை பாதிக்­கும் இன்­றைய சிக்­கல்­க­ளை எவ்­வாறு சமா­ளிப்­பது என்­பதை விளக்­கிய இளை­யர்­க­ளின் படைப்­பு­கள் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டன.

அதில் திரு யுரேஷ், கொவிட்-19 க்கு பிந்­தைய உல­கில் தெலுக் பிளாங்கா சமூக மன்­றம் எவ்­வாறு காட்­சி­ய­ளிக்­கும் என்­ப­தைத் தமது படைப்­பின் மூலம் காட்ட விரும்­பி­னார்.

"தெலுக் பிளாங்கா வட்­டா­ரத்­தில் நான் வளர்ந்­த­தால், ஒரு சமூகப் பொறுப்பு என்­னுள் இருந்­தது. கொவிட்-19 தொற்று பரவி­வ­ரும் கால­கட்­டத்­தில் பொது­மக்­க­ளுக்கு உதவி செய்­வ­தற்காக இந்­தத் தலைப்பை நான் தேர்ந்­தெ­டுத்­தேன்," என்று கூறி­னார் திரு யுரேஷ்.

ஓர் இடத்தை வடி­வ­மைக்­கும்­போது, அந்த இடத்தை பயன்­ப­டுத்­தும் நபர்­க­ளைப் பற்றி நன்கு ஆராய்ந்து அவர்­க­ளின் தேவை­க­ளுக்கு ஏற்ப வடி­வ­மைப்­பது முக்­கி­யம் எனக் கூறிய திரு யுரேஷ், தெலுக் பிளாங்கா சமூக மன்­றத்­திற்­குச் சென்று, அங்கு வரும் மக்­க­ளின் எண்­ணிக்­கை­யையும் தேவை­க­ளை­யும் கவ­னித்து அறிந்து தமது படைப்பை உரு­வாக்­கி­னார்.

முதி­ய­வர்­க­ளுக்­கான ஓய்­வுப்­ப­குதி, அனை­வ­ருக்­கும் உடற்­ப­யிற்­சிக் கூடம், மாண­வர்­க­ளுக்கு வகுப்­பறை உள்­ளிட்ட தேவை­களை அறிந்து, சமூக மன்­றத்­தில் தொற்­று­நோய் பர­வல் இல்­லா­மல் அனை­

வ­ருக்­கும் பாது­காப்­பான முறை­யில் இந்த வச­தி­களை ஏற்­பாடு செய்ய விரும்­பி­னார் திரு யுரேஷ்.

"சமூக மன்­றங்­கள் மக்­கள் கூடும் ஓர் இடம். ஆனால் இந்த கிரு­மிப் பர­வல் சூழ­லில் அனை­வ­ரும் அடிக்­கடி அங்கு செல்ல முடி­யாது. ஒரு கலை­ஞ­ராக இந்த இடங்­களை பாது­காப்­பாக வடி­வ­மைக்க நினைத்­தேன். இதன் மூலம் கிறு­மித்­தொற்­றைத் தடுப்­பதே என் நோக்­க­மா­கும்," என்று அவர் கூறி­னார்.

தமது திட்­டத்­தின் மூலம் எதிர்­கா­லக் கட்­ட­டங்­களில் வேளாண்­மை­யின் கூறு­க­ளை­யும் புகுத்த முற்­பட்­டார் திரு யுரேஷ்.

வேளாண்­மைக்கு நிறைய இடம் தேவை. ஆனால் சிங்­கப்­பூ­ரில் அது இல்லை.

சமூக மன்­றங்­களில் இருக்­கும் இடத்தை முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்­தும் விதத்­தில் பூங்­காக்­க­ளை­யும் வேளாண் பகு­தி­யை­யும் உள்­ள­டக்­கிய ஓர் இடத்தை இவர் வடி­வ­மைக்க நினைத்­தார்.

தமது கற்பனை கட்­ட­ட­மாக வடி­வம் பெற்­றால், சிங்­கப்­பூ­ரில் உள்ள முதி­ய­வர்­கள் தங்­கள் பொழு­து­போக்­கிற்­காக செல்­லும் ஓர் இட­மாக இது இருக்­கும் என இவர் நம்­பு­கி­றார்.

"சிறு வய­தில் லெகோ அடுக்­கு­களை அடுக்கி விளை­யா­டி­ய­தில் தொடங்­கிய ஆர்­வம், இன்று பட்­ட­யம், ஒரு கண்­காட்சி என என்னை வெகு­தூ­ரம் அழைத்து வந்­துள்­ளது. மற்ற படைப்­பு­கள் மத்­தி­யில் என் படைப்­பும் காட்­சி­ப்படுத்தப்பட்டதில் எனக்கு பெரு­ம­கிழ்ச்சி," எனப் பெரு­மி­தம் கொண்டார் திரு யுரேஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!